ஆணிவேர்

ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார். பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சத்தான சிறுதானியங்கள் […]

Read more

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 384, விலை 299ரூ. ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற  டாக்டரை அவள் நேசிக்கிறாள். மேனகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது, அவளைக் காப்பாற்றியவர் ஹரிகிருஷ்ணா. ஆனால், சந்தர்ப்ப வசத்தால் ஹரி, ரேகா என்ற பெண்ணை மணக்கிறான். ரேகா ஒரு லட்சிய மனைவி அல்ல; ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவள். ஹரியை உதாசீனம் செய்கிறாள். ஹரி ஒரு பரோபகார டாக்டர். தான் […]

Read more

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. தேவிகாபுரம் சிவா எழுதிய, ‘மேக்நாட் சாகா’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் படித்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. புறக்கணிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானியின் வரலாற்றை விவரிக்கும் நூல் இது. வங்கதேசம் பிரிக்கப்படாத போது அங்கு பிறந்தவர். பெட்டிக் கடைக்காரரின் எட்டு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமையின் காரணமாக, துவக்கப் பள்ளிக்குப் பின், வீட்டுவேலை செய்து படித்தார். வங்கப் பிரிவினையின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் […]

Read more

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம், மணற்கேணி, பக். 80, விலை 60ரூ. சாதிகளின் உடலரசியல், உதயசங்கர், நூல்வனம், பக். 94, விலை 75ரூ. ஜாதி ஒழிப்பு : நம்பிக்கை விதைக்கும் நூல்கள் இந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிட முடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. மாறாக தன், சாதியின் ‘பெருமை’யை பெரிதாகப் பேசித்திரிவது, தன்னை இன்ன சாதி […]

Read more

நள்ளிரவில் கலைஞர் கைது

நள்ளிரவில் கலைஞர் கைது (ஒரு நிருபரின் நேரடி சாட்சியம்), கே.கே. சுரேஷ்குமார், யாழ்கனி பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. காற்றில் பறந்த சட்டங்கள்! தி.மு.க., தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம், அதன் பின்னர் அரங்கேறிய அத்துமீறல்களை இந்த நூல் விரிவாக பதிவு செய்துள்ளது. சமீப காலத்தில் நடந்த இந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வை, விறுவிறுப்பாகவும் கோர்வையாகவும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். இதில் விவரிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் நிருபராக நானும் களத்தில் இருந்தேன். அந்த காட்சிகள் என் கண் […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. அபிமன்யு பெயர்க்காரணம் தெரியுமா? மகாபாரதம் மாபெரும் கடல். வியாசர், விநாயகருக்கப் பிறகு அதில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்தவர்கள் அநேகம் பேர். அதில் இந்திரா சவுந்தர்ராஜனும் ஒருவர். தான் கண்டெடுத்த முத்துக்களை அழகான மாலையாக கோர்த்திருக்கிறார், இந்த நூல் வழியாக. மலர்கள் தனித்தனியாக இருப்பது அழகுதான். அதே மலர்களை மாலையாக தொடுத்தால் இன்னும் கூடுதல் அழகு பெறுகிறது அல்லவா! அப்படி ‘தினமலர்’ ஆன்மிக […]

Read more

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ. திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி! நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர். இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும் அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை நுாலாக்கி தந்துள்ளார். இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி, ஆர்.வெங்கடேஷ், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. தாம்புக் கயிறும் ராஜாஜியும் ராஜாஜியோடு இலக்கியப் பயணத்தில் உடனிருந்தவர், மீ.ப.சோமு. ராஜாஜி அவ்வப்போது மீ.ப.சோமுவின் வீட்டிற்குப் போவது உண்டு. மாடியில் வீடு. உயரமான சுழல் படிகள்.கைப்பிடி இருக்காது. ராஜாஜி ஏறி வருவதற்கு வசதியாக ஒரு தாம்புக் கயிற்றைத் தொங்கவிட்டிருப்பார்கள். தள்ளாத வயதில், தாம்புக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறி,மாடிக்கு வருவார் ராஜாஜி. காரணம், இலக்கிய நட்பு . . . ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்று மதிப்பிடுகிறார்கள் அவருடைய அபிமானிகள். இல்லை,அவர் ஒரு […]

Read more

தீண்டாமைக்குத் தீர்வு என்ன?

தீண்டாமைக்குத் தீர்வு என்ன?, ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. இந்தியாவில் தீண்டாமை என்பது நீண்டகால விவாத பொருளாக இருந்துவருகிறது. அது இந்து மதத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்து மதத்தில் தீண்டாமை இல்லை. ஞானிகள் அதை அங்கீகரிக்கவில்லை என, ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த கீழ்குலத்தவராக கருதப்பட்ட மாறநேர் நம்பியின் இறுதிச் சடங்குகளை செய்த பெரிய நம்பி, அவரை கடவுளான நம்பெருமாள் அங்கீகரித்தது, நந்தனார் வரலாறு, திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வரலாறு, ஆதிசங்கரர் – புலையன் விவாதம், பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் […]

Read more

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள்

ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ஸ்ரீராமானுஜ தாஸர்கள், முனைவர் இரா. அரங்கராஜன், பக். 188, விலை 150ரூ. ஸ்ரீ வைஷ்ணவம் எனும் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் புத்துயிர் அளிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலை பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையாக இருந்த, கைங்கர்யத்தில் ஊன்றிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்கள், 50பேரின் பெருமைகளைக் கூறுகிறது இந்த நூல். கர்மயோகிகளுக்கும், கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுவதும் (பக். 3), ‘ஏறுதிருவுடையான்’ என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லிற்கு, சரியான பொருள் விளக்குவதும் (பக். 30), தாழ்த்தப்பட்டவரான மாறநேர் நம்பியின் உயர்குணங்களை விளக்குவதும் […]

Read more
1 140 141 142 143 144 240