ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

ஜென் தத்துவ விளக்கக் கதைகள், சி.எஸ்.தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 192, விலை 100ரூ. இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் புத்த தத்துவங்கள் வழி காட்டியுள்ளன. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ற ஜென் தத்துவக் கதைகள், கைபேசி ‘சிப்’ அளவு சிறிதாக இருந்தாலும், கதையின் வீச்சு மனதைப் பெரிதா ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஒவ்வொரு கதையும் தர்க்க வாதங்களுடன் தொடங்குகிறது. தன்னைத் தான் ஆராய்கிறது. திருப்பமாக ஒரு தீர்ப்பைத் தருகிறது இந்தக் கதைகளில். […]

Read more

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள், நர்மதா பதிப்பகம், விலை 70ரூ. நம் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற இளமையிலேயே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் பி.சி.கணேசன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளைச் சிந்திக்க வைப்பதற்கு பல்வேறு வழிகள், பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. சிறுகதையின் […]

Read more

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more

நவரத்தினங்கள்

நவரத்தினங்கள், லில்லி சகாதேவன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —-   மனசுக்கு ஒரு செக்போஸ்ட், க. கார்த்திகேயன், ஜி. சிவராமன், நர்மதா பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை, டி.ராம்பாபு, நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 464, விலை 350ரூ. எந்த கல்வியை, எந்த நாட்டில் பயிலலாம் என்பதை விளக்கி, உலக நாடுகளில் கல்வி பயில வழிகாட்டியாக அமையும் நூல் இது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், டாக்டர் J.V.G. சேகர், நர்மதா பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. வக்கீல் தொழில் புரிந்த இந்நூலாசிரியர், அதை விட்டு விட்டு இயற்கை மருத்துவத்தில் பயிற்சி பெற்று, 30 ஆண்டுகளாக அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து பாராட்டு பெற்று வருகிறார். இதில் இவரது மனைவி டாக்டர் மதுரம் சேகரும் யோகா, யுனானி, மற்றும் அக்கு பஞ்சர் நிபுணராக இவருக்கு துணை நிற்பது சிறப்புக்குரியது. இவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும், தங்கள் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து […]

Read more

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி, டி. வெங்கட்ராவ் பாலு, நர்மதா பதிப்பகம், விலை 220ரூ. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மூலக் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும். ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் எளிமைப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான லைசென்சு பெறுவதற்கான கட்டணத்தை வெறும் 250ரூபாயாகக் குறைத்துள்ளது. ஏற்றுமதி செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். ஏற்றுமதி செய்ய விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும், விதிமுறைகளையும் இந்த நூலில் தெளிவாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் டி. வெங்கட்ராவ் பாலு. எந்த நாட்டுக்கு எந்தெந்த பொருட்களை அனுப்பலாம் […]

Read more

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம், தொகுப்பு: அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலை மருத்துவர் குழு, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 344, விலை ரூ.200. இந்நூலில் சித்த மருத்துவத்துக்கான களிம்புகள், லேகியங்கள், கேப்சூல்கள், டானிக்குகள், சர்பத்கள், சூரணங்கள், பற்பங்கள் மற்றும் பல்பொடி, சாக்லேட், மாத்திரைகள் செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சித்தர்களான போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலியவர்களைத் தவிர, பெரும்பாலான சித்தர்கள் தமிழர்களே. ஆதலால், இச்சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரியதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதனால்தான் அவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் தமிழ்ச் செய்யுளில் […]

Read more

இதயமே இதயமே

இதயமே இதயமே, டாக்டர் எஸ். தணிகாசலம், தொகுப்பு: அகில் அரவிந்தன், குமுதம் பு(து)த்தகம், பக். 64, விலை 70ரூ. பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இதயத்திற்கு நேர்கின்ற சிக்கலைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் எளிய முறையில் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- திருக்குறள்: தமிழர்களின் அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், பக். 280, விலை 175ரூ. திருக்குறளின் தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம், தமிழ் தெரிந்த பிறமொழியினரும் திருக்குறளை எளிதில் அறிந்துகொள்ள இந்த உரை உதவும். நன்றி: […]

Read more
1 5 6 7 8 9 15