சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

பஞ்சத்தந்திரக் கதை

பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை  200ரூ. ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, […]

Read more

இந்தியக் கல்வி வரலாறு

இந்தியக் கல்வி வரலாறு, எஸ். சுப்பிரமணியன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 35ரூ. கல்வியின் வரலாறு சிந்து சமவெளி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரைக்குமான காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி என்பது என்னமாதிரியான மாற்றங்களுக்கு ஆட்பட்டுவந்துள்ளது என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் நூல். வேத காலக் கல்வி, புத்த, சமணத் துறவிகள் பரப்பிய பள்ளிக் கல்வி, நமது முன்னோர்கள் பயின்ற திண்ணைப் பள்ளிகள் என ஒரு நீண்ட காலகட்டத்தின் முக்கியமான சம்பவங்களை நமக்கு முன்னால் வைக்கிறார். இன்றைய கல்வி முறையின் பிரச்சினைகளையும் அவற்றுக்கான […]

Read more

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. மருத்துவக் கல்லூர மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர். அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார், செந்தமிழ் கிழார். இதனால் […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி, அமுதசுரபி விக்கிரமன், இலக்கியப்பீடம், பக். 544, விலை 450ரூ. தமிழ் இலக்கிய உலகிலும் இதழியல் வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்கதோர் இதழ், அமுதசுரபி என்பது அனைவரும் ஏற்கும் ஒன்று. அதன் துவக்கால அருஞ்சாதனைகளின் முதல் தொகுப்பு நூலாக மலர்ந்துள்ளது இந்த, தமிழ்ச்சுரபி. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, அமுதசரபி ஆசிரியராகப் பணியாற்றிய விக்கிரமனே, இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார். பிஸ்ரீ,இ பெ.நா.அப்புசாமி, எஸ். வையாபுரி பிள்ளை, க.நா.சு., டாக்டர் மு.வ., தி.ஜ.ரா., மா.ராசமாணிக்கனார், க.அ. நீலகண்டசாஸ்திரி, கி.வா.ஜ., பரலி. […]

Read more

பொது அறிவுக் களஞ்சியம்

பொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ. பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ. பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, தி. சந்தான கிருஷ்ணன், நிழல் வெளியீடு, பக். 140, விலை 150ரூ. தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ். பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதிவரை, படிப்பவர் கண் முன், படமாக விரிகிறது. கடந்த, 1941ம் ஆண்டிலிருந்து, 1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளதில், […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக். 334, விலை 125ரூ. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல். முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் […]

Read more

12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

பூவின் இதழ்கள்

பூவின் இதழ்கள், த.கணேசன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. 50 விதமான கட்டுரைகளின் தொகுப்புநூல். இந்நூலின் ஆசிரியர் த.கணேசன், வானொலியில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை உண்மைச் சம்பவங்களை, கட்டுரை வடிவில் தந்துள்ளார். 35 ஆண்டுகால வானொலி வாழ்க்கையில் அவர் சந்தித்த மாமனிதர்களையும், மனித நேய நிகழ்வுகளையும், சுவையோடு ஒவ்கொன்றையும் ஒரு சிறுகதைப் பாங்குடன் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளைப் படிக்கும்போது மானுடத்தின் பல்வேறு முகங்களையும் தரிசிக்க முடிகிறது. ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும். பயிற்சி பெறவேண்டும் என்போர்க்கு இது ஒரு வழிகாட்டி நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more
1 7 8 9 10 11 15