காக்கியின் டைரி

காக்கியின் டைரி, பெ. மாடசாமி, நேசம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி, உதவி ஆணையராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். காவல்துறை பணியில் தனது அனுபவங்கள் – காவல்துறையில் பணிபுரிந்த, புரியும் தனது நண்பர்களின் அனுபவங்கள் – ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார். காவல்துறையில் பணிபுரிபவர்கள் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்கள், சுமக்க வேண்டிய சுமைகள், அவர்களுடைய பல்வேறு பணிநெருக்கடிகள் ஆகியவற்றை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பலவிதமான குற்றங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களைப் […]

Read more

காக்கியின் டைரி

காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ. ‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல். அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில. அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க […]

Read more

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ்., நேசம் பதிப்பகம், விலை 175ரூ. 40 ஆண்டு காலம் தமிழக அரசில் எல்லோரும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம் எழுதிய ‘வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்’ என்ற இந்த நூலில், வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் எல்லோரும் சந்தித்ததும், அதே நேரத்தில் சரியாக புரிந்து கொள்ளாததுமான பல விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளார். ‘அரசு அலுவலகம் என்றால் கதவுகளும் காசு கேட்கும், கம்பியும் கை நீட்டும்,’ என்ற சாமானிய மக்கள் […]

Read more

நீங்களும் வாகை சூடலாம்

நீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. காந்தியடிகளின் வாழ்க்கையை மக்கள் மனதில் எளிதில் பதிவு செய்ய முனைவர் ஆவுடையப்பன் எடுத்திருக்கும் உத்தி இது. ஒரு நிகழ்வைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருத்தி விடுகிறார். அதை அந்த உரையாடல் மூலம் நிறைவு செய்வதால் படிப்போர் மனதில் எளிதில் காந்தியின் கொள்கைகள் வந்து உட்கார்ந்துவிடுகின்றன. அகிம்சை, சத்தியம், அன்பு, சகிப்புத்தன்மை, சத்தியாகிரகம் போன்றவற்றை காந்தி எப்படி தன் வாழ்வின் நெறிமுறைகளாகக் […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 124, விலை 90ரூ. காந்தியம் எனும் காயகல்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்கான புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ் மதியிடம் உரையாடியபோது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார். […]

Read more

எது சரியான கல்வி

எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். […]

Read more

நீங்களும் சிகரம் தொடலாம்

நீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் […]

Read more