மனம் மயக்கும் கலை

மனம் மயக்கும் கலை, ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், விலை 380ரூ. ஹிப்னாடிசம் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்கு, ‘தூக்கம்’ என்று பொருள். ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவரைத் தூங்க வைப்பது. ஒருவரை தூங்க வைத்து அவர் மனதை நம் வசப்படுத்தி, அவர் மனதில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது அல்லது அவரது உடலில் உள்ள நோய்த் தன்மையைப் போக்கிக் குணமாக்குவது. ஹிப்னாடிசம், அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி செய்யக் கூடிய மனம் சார்ந்த மருத்துவக் கலை. இதை மனோவசியம் அல்லது யோக […]

Read more

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம்

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம், ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக்.368, விலை ரூ.380. ஹிப்னாடிசம் என்றால் பிறரைத் தன்வசப்படுத்தும் கலை என்பதை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நம் மனத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என்பதோடு, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி, கண்களுக்குச் சக்தியூட்டுதல், யோக நித்திரை போன்றவற்றைச் சார்ந்த பயிற்சியாகவும் இக்கலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஹிப்னாடிசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹிப்னாடிசத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி! ஐம்பெருங்காப்பியங்களில் பலரும் விரும்பிப் படிப்பது சிலப்பதிகாரம். வரலாற்றுக் காப்பியம், புரட்சிக் காப்பியம், புதுமைக் காப்பியம் என்றெல்லாம் பலரும் அந்த காப்பியத்தை பாராட்டி உள்ளனர். அந்த காப்பியத்தின் தலைவி கண்ணகியை, தெய்வமாக வழிபடும் வழக்கம், அது தொடர்பான பல்வேறு தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சைவ சமயத்தை புனருத்தாரணம் செய்த, யாழ்பாணத்து ஆறுமுக நாவலர், சிறுதெய்வ வழிபாடுகளை, கடுமையாக கண்டித்தவர். இலங்கையில் நிலவி வரும் […]

Read more

பெரியார் களஞ்சியம்

பெரியார் களஞ்சியம், தொகுப்பாசிரியர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை, விலை 210ரூ. தந்தை பெரியார் எழுதிய, பேசிய கருத்துகள் ஏற்கனவே ஏராளமான புத்தகங்களாக பிரசுரமாகி உள்ளன. அந்த வரிசையில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 35 தொகுதிகள் வெளிவந்துள்ளன. 36வது தொகுப்பாக கடவுள் – புராணங்கள் (பாகம் 4) என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. 1959ம் ஆண்டு முதல் 59ம் ஆண்டு ஜனவரி வரை பெரியார் பேசிய கடவுள் மற்றும் புராணங்கள் பற்றிய கருத்துகள் இதில் இடம் பெற்றுள்ளன. கடவுள், […]

Read more

இராஜாராம்

இராஜாராம், (சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு), வெ. ஜீவகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 60ரூ. ஒளிக்கப்பட்ட தியாகங்கள் இராஜராஜ சோழனால் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் துவங்கி, கி.பி. 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்களின் தனிப்பெருமையாய் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பின்னணியை விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்நூல். கோயில் கட்டிய மன்னக் பெயர், கோயிலுக்கு நிதி உதவி செய்த அரசன் வீட்டுப்  பண்கள் உட்பட நிதியாளர்களின் பெயர்களையெல்லாம் பொறித்த அரசன், கோயில் கட்டிய தொழிலாளர்களின் […]

Read more

உணர்ச்சிகளின் ஊர்வலம்

உணர்ச்சிகளின் ஊர்வலம், நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. வித்தியாசமான தலைப்பில் உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட வரிகள் கொண்ட நாவல். பெண்ணின் மனநிலையை அற்புதமாக நூலாசிரியர் படம் பிடித்து காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   நலமா? நலமே!, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 100ரூ. நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, ஆசனங்கள், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒரு மனிதன் நலமுடன் வாழ முடியும் என்பதை மருத்துவர் வே. வீரபாண்டியன் இந்த […]

Read more

கண்ணகி அம்மன் வழிபாடு

கண்ணகி அம்மன் வழிபாடு, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கற்புக்கரசி கண்ணகி இறுதியில் தெய்வநிலை பெற்றாள். கேரள மாநிலம் மங்கல தேவி மலையில் சேரன் செங்குட்டுவன் கண்ணகி தேவி கோவிலைக் கட்டினான். மேலும் இதுபோல பல்வேறு பெயர்களில் கண்ணகி கோவில்கள் உள்ளன. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவரால் கண்ணகி வழிபாடு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் ‘பகவதி’ என்று பயபக்தியோடு வணங்கப்படுகிறாள். இதேபோல் தமிழகத்திலும், ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்று கூறுகின்ற இந்த நூலாசிரியர் […]

Read more

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும்

ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-1.html நக்கீரர், கபிலர், அவ்வை, கம்பன், பாரதி, வ.உ.சி., கவிமணி, பெரியார், லெனின், உமர் கய்யாம் முதலான கவிஞர்களையும், அறிஞர்களையும் பார்த்தும் படித்தும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்த நூல். 56 தலைப்புகளில், 56 அறிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஜீவா. அவரின் உரைகள், புத்தக மதிப்புரைகள், அணிந்துரைகள் முதலானவற்றின் […]

Read more

அறிவார்ந்த ஆன்மிகம்

அறிவார்ந்த ஆன்மிகம், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. தினத்தந்தியின் அருள் தரும் ஆன்மிகம் பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? கோவில் வழிபாடு ஏன்? உபவாசம் எதற்காக? கார்த்திகை தீபத்தின் சிறப்பு, கும்பாபிஷேகம் எதற்காக? திருநீறு அணிவது எதற்காக? தேங்காய் உடைப்பது ஏன்? ருத்ராட்சம் அணிவதன் சிறப்பு என்பன போன்ற 52 கட்டுரைகளில் இந்து மதத்தில் உள்ள சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எழுத்தாளர் என். கணேசன் விளக்கியுள்ளார். அந்தச் சடங்குகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள, காரணங்களை ஏன், எதற்காக, எப்படி […]

Read more
1 2