மதிஒளி என்றொரு மந்திரம்

மதிஒளி என்றொரு மந்திரம், ராணிமைந்தன், வானதி பதிப்பகம், பக்.272, விலை ரூ.400. ஒரு சகோதரியாக, அம்மாவாக, தெய்வத்தன்மை மிக்கவராக, தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து உதவி செய்பவராக, கவிஞராக, எழுத்தாளராக, இளம்தளிர்களின் வளர்ச்சியில் ஆர்வமிக்கவராக, சமூக அக்கறை கொண்டவராக நடமாடி வந்த மதிஒளி சரஸ்வதியின் வரலாற்றை இந்நூல் தாங்கி வந்துள்ளது. மதிஒளி சரஸ்வதி, நம்பிக்கையோடு தன்னை நாடி வந்தவர்களின் வாழ்க்கையில் சந்தோஷப் பூக்களை மலரச் செய்தது, அவருடன் பழகியவர்கள் தங்களுடைய அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துள்ளதன் மூலம் தெரிய வருகிறது. காஞ்சி மகா […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120. கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி. கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், அடையாறு புற்றுநோய் அறக்கட்டளை, பக். 288, விலை 150ரூ. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் கன அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடியூட் லட்சக்கணக்கான புற்று நோயாளிகளின் மறுவாழ்வு இல்லமாகத் திகழும் அதை நிறுவ அவரும் அவரது மகன் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் பட்ட கஷ்டங்கள் இதுவரை வெளியுலகிற்குத் தெரியாதவை. அவற்றை விறுவிறுப்பான நாவல்போல் தந்துள்ளார் ராணிமைந்தன். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றமும் வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரு வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. மருத்துவமனை உருவாக உதவிய […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், சென்னை, விலை 150ரூ. எத்தனை எத்தனை போராட்டங்கள்… எத்தனை எத்தனை தடைகள்… எல்லாவற்றையும் ஜெயித்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்ட வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும் உள்ளடங்கியது இப்புத்தகம். சபிக்கப்பட்ட, தீர்க்கப்பட முடியாத நோயாகக் கருதப்பட்ட புற்றுநோயை எதிர்க்கும் போர்ப்பணியை […]

Read more

இலக்கிய விதி இனியவன்

இலக்கிய விதி இனியவன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. கவனக கலைக்கு மறுவாழ்வு தந்தவர் படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர், தன் படைப்பு குந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ் மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால் தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், இலக்கிய வீதி இனியவர். விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

காற்றோடு சில கனவுகள்

காற்றோடு சில கனவுகள், டாக்டர் ஷியாமளா, டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. 23 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கதையும் யதார்த்த வாழ்க்கையை வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் குடும்ப பெண்ணை சுற்றியே மற்ற பாத்திரங்கள் வலம் வருகின்றன. பொருத்தமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள், வர்ணணைகள் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/12/13.   —-   ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக […]

Read more

த லவ்வர்ஸ் பார்க்

த லவ்வர்ஸ் பார்க், வரலொட்டி ரெங்கசாமி, வி.எஸ்.ஆர். பப்ளிகேஷன்ஸ், 11, வெங்கட்ராமன் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை 625 002, பக். 224, விலை 200ரூ. பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்… கதைக்களமான மதுரை ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும்போது, நம்மை […]

Read more

சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more