திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6, சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை ரூ.80. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் […]

Read more

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் , ஜெகாதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,  பக்.128, விலை 80ரூ. வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் ஏற்கெனவே அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு’‘ என்றநூலின் சுருக்கமாகவே இந்த நூல் உள்ளதாகக் கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகளை எந்த நூலாசிரியர் எழுதினாலும் ஒரே மாதிரியாகத்தான் விவரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்றை விவரிக்கும் முறையில் இந்நூலாசிரியர் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். நூலில் ஆறுதலான விஷயங்களும் ஆங்காங்கே உள்ளதை மறுக்க […]

Read more

தென்திசை வீரன் சிவன்

தென்திசை வீரன் சிவன், க.மனோகரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 350ரூ. ‘ஈஸ்வர்’ என்றும் ‘தட்சிணாமூர்த்தி’ என்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும், சிவா, சிவன் என்ற பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகள் மிக்க சிவன் தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரன் என்றும், அவர் எப்படி வட திசைக்கச் சென்று அவர்களின் தலைவர் ஆனார் என்பதையும் நாவல் வடிவில் எழுதியுள்ளார் க. மனோகரன். புராணத்தையே சரித்திரக்கதை வடிவில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ. வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ. திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர்.இரகுநாதன்,  ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.240, விலை  ரூ.150. தமிழ் இதழியல் குறித்து பல நூல்கள் வெளிவந்திருப்பினும், இந்த நூல் எழுத்தின் வரலாற்றில் தொடங்கி இன்றைய இதழியல் போக்குவரை அலசி ஆராய்ந்திருப்பது தனிச்சிறப்பு. விடுதலைப் போரில் இதழ்களின் பங்களிப்பு முதல் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம் வரையிலான 20 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., பாரதி, வ.உ.சி., சுப்பிரமணியசிவா, தினமணி ஏ.என்.சிவராமன், ராஜாஜி, புதுமைப்பித்தன் என அனைவரைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மது […]

Read more

கௌதம நீலம்பரன் நாடகங்கள்

கௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]

Read more

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், கவிஞர் பொன். செல்வமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 500ரூ. சினிமா பற்றிய புத்தகங்களில் இது புதுமாதிரியானது. திரைப்பட பாடல்களை எல்லாம் அலசி ஆராய்ந்த கவிஞர் பொன். செல்வமுத்து, “அழகு” என்று தொடங்கும் பாடல்கள், “ஆசை” என்று தொடங்கும் பாடல்கள், “தமிழ்” என்ற சொல் இடம் பெற்ற பாடல்கள், திருமணம் பற்றிய பாடல்கள் என்று அந்தப் பாடல்களை தொகுத்து தந்துள்ளார். அது மட்டுமல்ல, பாடல் இடம் பெற்ற படம், பாடிய பாடகர்கள் பற்றிய விவரம் ஆகியவற்றையும் தந்துள்ளார். அதுமட்டுமல்ல, “ஒரே ஒரு […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். இரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் நாட்டில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களை விவரிக்கும் நூல் இது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “கல்கி ராமகிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ். வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, “சாவி” முதலியோர் பத்திரிகைத்துறையில் எதிர்நீச்சல்போட்டு சாதனைகள் புரிந்ததை ஆசிரியர் நடுநிலையுடன் எழுதியுள்ளார். தமிழில் இதழியல் துறை பற்றி நூல்கள் அதிகம் இல்லை என்ற குறையை, இந்தப் புத்தகம் போக்கியுள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தமிழினத்தின் இணையில்லாப் பெருமையை, பண்பாட்டை, வரலாற்றை, இலக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்நூல். தமிழகத்தின் நிலஇயல் பிரவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க்கிளை இனங்களும் கிளைகளும்,தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும் என 16 தலைப்புகளிலான கட்டுரைகள் உள்ளன. கி.பி. 50க்கும் – கி.பி.150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மூவேந்தர்களையும், அவர்களில் கரிகாற்பெருவளவன், கிள்ளிவளவன், நெடுஞ்செழியன், பெருஞ்சேரல் இரும்பொறை உள்ளிட்டோரையும் குறித்துப் பேசுகின்றன, சேரர், பாண்டியர், சோழர் என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகள். […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more
1 2 3 4 5