காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர், தமிழில்; செ. நடேசன், எதிர் வெளியீடு, பக். 452, விலை ரூ. 380. காஷ்மீர் பிரச்னை பற்றி பொதுத் தளத்தில் கூறப்படும் காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில், இந்த நூல் வித்தியாசமான அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்ட நூல் என்று சொல்லும் அளவுக்கு மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்கள், வெறுமனே இஸ்லாமியர்களின் வெறித்தனம் என கட்டமைக்கப்பட்டுள்ள பொது வெளிக்கு, அது காஷ்மீரி தேசிய இனத்தின் விடுதலைக் […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ. வேடிக்கையில்லை. இதுபோன்ற ஒரு நிலையை நம்மால் அடைய முடிந்தால் மட்டுமே உணர முடியும். இது மொகமது ஆமிர் கானின் தன் வரலாறு. இதில் அவரது சுகமான நினைவுகளும், சந்தோஷப் பகிர்வும் இல்லை. பலவிதமான வழக்குகளில் பு9னைவாக சேர்க்கப்பட்டு வதைக்கப்பட்டவர். சந்தேகமும், குறிப்பிட்ட மதமும் பொதுப்புத்தியில் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன. அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் மொகமது. அதற்காக வலியை சிரமேற்கொண்டு இப்போது […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா. தேவதாஸ், எதிர் வெளியீடு, பக். 352, விலை 320ரூ. நம் உலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கி இருந்துள்ளதை இந்த நூல் விவரிக்கிறது. பல அடுக்குகள் மிக்கதும், வசீகரமானதாயும் உள்ள நாவல் இதுவாகும். மிகச் சிறந்த நாவல். ஆசிரியர் சல்மான் ருஷ்தீயின் சாதனைப் படைப்பாகும். ருஷ்தீ நம் காலத்தின் மகத்தான கதை சொல்லி என்று, ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய நாவலை சா.தேவதாஸ் மிகச் சிறந்த முறையில் தமிழில் வெளியிட்டுள்ளார். […]

Read more

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி,  சமர் யாஸ்பெக், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக்.344, விலை ரூ.320 சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நூலாசிரியர் தற்போது வசிப்பது பாரிஸ் நகரில். எனினும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் தாய்நாடான சிரியாவுக்கு யாருக்கும் தெரியாமல் துணிச்சலுடன் நான்கு முறை எல்லைத் தாண்டிச் சென்று, சிரியா மக்களின் இன்றைய அவல வாழ்க்கையை இந்நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த மக்களின் மீதே வெடிகுண்டுகளை வீசுகிற அரசுக்கும், மரண வெறி கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லல்படும் […]

Read more

அவலங்கள்

அவலங்கள், சாவித்ரி, எதிர் வெளியீடு, விலை 180ரூ. அவலங்களின் வாழ்வு கதாசிரியர் பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர். ஒரே நாவலின் அத்தியாயங்கள் என்று கருதும் அளவுக்கு இந்தத் தொகுப்பின் கதைகள் தொடர்கின்றன. காதல், வீரம், சோகம், நகைச்சுவை அத்தனை உணர்வுகளும் விரவிக்கிடக்கின்றன. இந்திய அமைதிப் படைப்புக்கு இரையான ராணியக்கா, சாதிக்கொடுமைக்கு ஆளான மல்லிகா, மனைவியின் காதில் ஈர்க்குச்சி சொருகியதைக் காணச் சகியாமல் கடையில் வேலை செய்து சிமிக்கி வாங்கிக்கொடுத்த நாதன் நாடு திரும்புகையில் விமானத்திலேயே மனைவியுடன் மரணிப்பது, கடல் புலிப் பிரிவில் சேர்ந்து கண்ணிழந்த […]

Read more

தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, பக்.373, விலை ரூ.350. ஈழப் போரின்போது இலங்கை அரசால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலம் மீண்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்நூல். மீள்குடியேற்றம் முழுமையாக நடந்துவிட்டது என்றும் தமிழர்களின் நிலம் திருப்பியளிக்கப்பட்டு விட்டது என்றும் இலங்கை அரசு கூறி வருவது முழுவதும் உண்மையில்லை என்பதை நேரடி அனுபவத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர். தாய் நிலத்தை இழந்துவிட்டு வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் வலிகளை உணர்த்தும் பதிவாக இந்நூல் உள்ளது. பிறந்த நாட்டுக்குள் […]

Read more

பயணம்

பயணம், சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி, சமர் யாஸ்பெக், தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சிரியாவில் பிறந்து வளர்ந்த சமர் யாஸ்பெக்கின் மிக முக்கியமான பதிவு. போர்ச்சூழலில், கொஞ்சமும் நிச்சயமற்ற சூழலில் இருந்து தப்பி வந்து பாரீஸில் தஞ்சம் புகுந்தவர். சிரிய மக்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஈரமுடைய எவர் மனசுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அங்கே எல்லாமுமே நடக்கிறது. சொந்தநாட்டிலேயே அகதிகளாய் வாழும் பெரும் சோகம் மக்களுக்கு நேர்கிறது. சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர், பயம் இன்றி மீண்டும் […]

Read more

சீனப் பெண்கள்

சீனப் பெண்கள் , சொல்லப்படாத கதை, சின்ரன்: தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.316, விலை ரூ.280. உலகப் பொருளாதார வல்லரசாகப் போற்றப்படும் சீனாவின் மற்றொரு முகத்தை துகிலுரித்துக் காட்டும் உண்மைப் பதிவு இந்நூல். இந்த நூலை எழுதிய காரணத்துக்காவே அதன் ஆசிரியர் சின்ரன் நாடு கடத்தப்பட்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதிலிருந்தே இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடியும். உலக அளவில் பொருளாதாரரீதியில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கும் சீனா, இன்னும் தங்கள் நாட்டுப் பெண்களை ஒடுக்கியே வைத்திருக்கும் நிதர்சனத்தை உரக்கக் கூறும் படைப்பாக […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ. சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம். அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து […]

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. சீனாவில் வானொலி தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, காதல், ஏமாற்றம் என்று பல வரம்புகளில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்களைச் சந்தித்து அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளைத் திரட்டிக் கொடுத்து இருக்கும் தகவல்கள், ஆச்சரியமிக்க அதிர்ச்சிகரமானவை. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more
1 2 3 4 5 6 8