பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர் வெளியீடு, பக். 896, விலை 950ரூ. ஆதித் தமிழர்களின் வாழ்வியலையும், கலாசாரத்தையும், அரசாட்சியையும் விளக்கிக் கூறும் ஆவணப் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்நூலாசிரியர், இவற்றுடன் கூட வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகளின் பார்வையிலும் பழந்தமிழனின் வாழ்வை அணுகியிருக்கிறார். கிமு 500-ஆம் ஆண்டு காலங்களில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகள் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததும், அந்த அளவுக்கு வர்த்தகத்தில் தலைசிறந்தவர்களாக நாம் விளங்கியதும் […]

Read more

கனவினைப் பின் தொடர்ந்து

கனவினைப் பின் தொடர்ந்து, தமிழில் ஜே. ஷாஜஹான், எதிர் வெளியீடு, வரலாறு எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சில புத்தகங்களை வாசித்தால் தெரியும். அப்படிப்பட்ட புத்தகங்களில் ஒன்று இது. சிந்து சமவெளி மக்கள், நாளந்தா பல்கலைக்கழகம், கிரேக்கத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு போன்ற முக்கிய வரலாற்றுத் தகவல்களை ஒரு கதை போலப் படித்தால் எப்படியிருக்கும்? அந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். பிரபல ஆங்கிலக் குழந்தைகள் எழுத்தாளர் த.வெ. பத்மா எழுதியதைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். நன்றி: தி இந்து, 9/11/2016.   —- இறக்கை விரிக்கும் […]

Read more

சங்க கால ஜாதி அரசியல்

சங்க கால ஜாதி அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 96, விலை 80ரூ. பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல் விருதின் யுத்த அரசியல், சங்ககால ஜாதி அரசியல், மதிப்பெண் அரசியல், துவரம் பருப்பின் அரசியல் என ஒவ்வொரு கட்டுரையிலும், ‘அரசியல் மொழி’ என்று ஒன்றை பின்புலமாகக் கொண்டு இன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முன்னாள், ‘உன்னதம்’ இதழாசிரியர். ‘துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/ இந்நான் கல்லது குடியும் […]

Read more

முருகன் விநாயகன்

முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்! தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார். விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே […]

Read more

செர்னோபிலின் குரல்கள்

செர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ. ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன? வாழ்வா, சாவா? நல்லாசியா, சாபக்கேடா? நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்!’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு […]

Read more

நான் பூலான்தேவி

நான் பூலான்தேவி, மரியே தெரஸ்கூன் பால் ராம்பாலி, தமிழில் மு.ந. புகழேந்தி, எதிர் வெளியீடு, பக். 364, விலை 300ரூ. எனக்காக நான் பேச ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், எனக்காக பலர் பேசியும், புகைப்படம் எடுத்தும் தங்களின் சுயநலத்துக்காக பலரும் பயன்படுத்திக் கொண்டனர். தாங்க முடியாத துயரங்கள், அவமானங்களை அனுபவித்த அப்பாவி பெண்ணான, என்னை பலரும் திட்டி, பழித்து, கேவலப்படுத்தினர். உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும், எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், […]

Read more

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. குறிஞ்சி நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின் அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன் வைத்துக் கொண்டிருக்கும் சூழலை மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர். இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். […]

Read more

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ. கடந்த 2014ல், இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பி, சர்ச்சைக்குள்ளான நூல் இது. நூலாசிரியர் வெண்டி டோனிகர், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம், இந்திய ஆய்வு ஆகியவற்றில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 25 இயல்கள் உள்ளன. இந்து மதம் தொடர்பான வழக்கமான நூல்களில் இருந்து, பலவிதங்களில் வேறுபட்டது என்கிறார் நூலாசிரியர். ஒன்று, இது மாற்றுக் கதையாடலை முன் வைக்கிறது. இரண்டாவது வரலாற்றின் […]

Read more

எருது உலக சிறுகதைகள்

எருது உலக சிறுகதைகள், தமிழில் கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு, பக். 150, விலை 120ரூ. தமிழுக்கு புதியதொரு கதை சொல்லல் முறை மொழிபெயர்ப்பு என்பது, வானத்தை பிழிந்து வட்டியில் இறக்கும் வேலை என்பர். அதில், ஒரு துளி அளவேனும் சந்தேகம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது, ‘எருது’ உலக சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 10 நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவாறும், புதுப்புது களங்களும் உள்ள சிறுகதைகள், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. எட்மண்டோ பாஸ் […]

Read more

சோளகர் வாழ்வும் பண்பாடும்

சோளகர் வாழ்வும் பண்பாடும், அ. பகத்சிங், எதிர் வெளியீடு, விலை 50ரூ. பழங்குடி வாழ்க்கைக்கு உள்ளே… To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022649.html பழங்குடிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் இரண்டாவது நாடு. ஆப்பிரிக்க கண்டத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மக்கள் தொகையில் எட்டு சதவீதத்துக்கும் மேலே பழங்குடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரையறைகள் ஒன்றும் அவ்வளவு அக்கறையுடன் கூடிய துல்லியமானவையாக இல்லை. அவர்களுக்கான திட்டங்களோ சட்டங்களோ போதுமான அளவுக்கு அமலாவதில்லை. இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் தமிழகத்தில் 36 வகையான பழங்குடி இனங்களும் […]

Read more
1 4 5 6 7 8