இயேசுநாதர் வரலாறு

இயேசுநாதர் வரலாறு, அ,லெ. நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 250ரூ. இயேசுவின் வாழ்க்கையை மிகவும் தெளிவாக எம்மதத்தினரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். அன்பின் மறுவுருவம் இயேசு என தெளிவுபடுத்தியுள்ளார். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை – ஐந்து கால கட்டங்களாகப் பிரித்துள்ளார். இயேசுவின் 33 வருட வாழ்க்கையை பிறப்பு முதல் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளது அருமை. பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகையைக் குறித்து […]

Read more

மூங்கில்கள் புல்லாங்குழல்கள்

மூங்கில்கள் புல்லாங்குழல்கள், இரா. காளீஸ்வரன், மாற்று ஊடகமையம், பக். 80, விலை 60ரூ. மூங்கில்கள் புல்லாங்குழல்கள் என்ற சிறுகதை தொகுப்பு விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும் 15 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக கூத்துக் கலைஞர்களின் சாதிய வேறுபாடுகள், பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட பெண், கோயில் திருவிழாக்களில் ஏற்படும் சாதிய சிக்கல்கள், திருநங்கையரின் துயரம், இறக்கும் மனிதர்களை அடக்கம் செய்ய உதவும் மானுட அன்பு, விநாயக சதுர்த்தியின் மத அரசியல், காதலை சொல்லாமல் மரிக்கும் பெண், மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை […]

Read more

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள்

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 65ரூ. இலக்கிய விமர்சனம் குறித்த ஆழமான கருத்துகள் அடங்கிய நூல். எவ்வாறு விமர்சனம் அமைய வேண்டும்? என்பதை விளக்கும் நூலாசிரியர், கலை, இலக்கியங்களின் தோற்றம், இலக்கியம் படைப்பவரின் அனுபவம், அறிவு, அவருடைய வாழ்க்கைப் பார்வைக்கும், இலக்கியத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கும் அதன் வடிவத்துக்குமான தொடர்பு, ஓர் இலக்கியம் உருவான காலம், சமூகப் பின்னணி, வாசகர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம்,சந்தோஷ்குமார் கோஷ், தமிழில் புவனா நடராஜன், சாகித்ய அகாதெமி, பக்.624, விலை ரூ.415. சுயசரிதை முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் 1972-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. வாழ்வின் நிறைகள், அவலங்களை தத்ரூபமாக சித்திரிக்கும் இந்தப் படைப்பு, எழுத்தாளனின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்கையின் முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. வாழ்க்கை வரலாறு என்றால் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டும் இல்லை என்பது ஆசிரியரின் வாதம். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல்,கொஞ்சம் புரிந்து […]

Read more

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230. இந்தப் பேரண்டம் தோன்றிய சில விநாடிகளில் நிகழ்ந்தது என்ன? அது எப்படி இருந்தது? என்பதை அறிய நமதுநாட்டில் தோன்றிய விஞ்ஞானி மேகநாட் சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு பயன்பட்டிருக்கிறது. வளி மண்டல அடுக்கான அயனி மண்டல ஆய்விலும் சாதனை நிகழ்த்தியவர் சாகா. அவருடைய வாழ்க்கை வரலாறு இந்நூல். இந்திய அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக சாகா இருந்தார். “அறிவியல் ஆராய்ச்சி மக்களுக்கானது; அது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்’ […]

Read more

தமிழ்க்காப்பு இயம்

தமிழ்க்காப்பு இயம், புலவர் மீ.காசுமான்,காசுமான் பதிப்பகம், பக்.402, விலை ரூ.200. செய்யுள் வடிவிலான நமது சங்க இலக்கியங்களை பாமரரும் அறிய உதவியவர்கள் நமது உரையாசிரியர்களே. உரைநடை இலக்கியச் செல்வாக்கு மிகுந்துவிட்ட இக்காலகட்டத்தில், தமிழில் இலக்கண நூல் ஒன்று வெளிவந்திருப்பது, வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எழுத்து, சொல், பொருள் என தொல்காப்பியம் அமைந்த நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப அதை எழுத்து, சொல், சொற்புணர்ச்சி என நூலாசிரியர் மாற்றத்தைப் புகுத்தி அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். தமிழில் எழுத்து மாற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப […]

Read more

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

தமிழர் புத்தகங்கள்  ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம் பிரசுரம், பக்.504, விலை  ரூ.200. ஒரு மொழியைப் பயன்படுத்துவது குறைந்து கொண்டே வருகிறது என்றால், அந்த மொழி அழிவை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தமிழில் தொன்மையின் தொடர்ச்சியாக, தேசியத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் படைப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வாழும் தமிழின் போக்குகளையும், வாசிக்கும் அன்பர்களின் விரிவான தேடலையும் இணைக்கும் விதமாக, இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சுப்பு. சுகி.சிவம் முதல் வ.வே.சு. வரை தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் இதில் […]

Read more

வெண்ணிறக் கோட்டை

வெண்ணிறக் கோட்டை , துருக்கி நாவல், ஓரான் பாமுக், ஆங்கில மூலம் விக்டோரியா ,ஹோல்ப்ரூக், தமிழில் ஜி.குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக்.176, விலை ரூ.165. 2006-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் தி ஒயிட் கேஸில் நாவலின் தமிழ் வடிவமே வெண்ணிறக்கோட்டை. வெனிஸ் நகரிலிருந்து நேப்பிள்ஸ்க்கு புறப்பட்டுச் செல்லும் கப்பலொன்றை துருக்கிய கடலோடிகள் சிறைப்பிடித்து, அதிலுள்ள பயணிகளை இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று அடிமைப்படுத்துகின்றனர். அவ்வடிமைகளில் ஒருவன், மத மாற்றத்துக்கு உடன்படாததால் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவனைப் போலவே உருவத்தையொத்த ஒருவனிடம் விற்கப்படுகிறான். இவ்விருவரும் […]

Read more

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தேவி வனமாலி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் , பக்.320, விலை ரூ.275. பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் […]

Read more
1 109 110 111 112 113 180