சிந்தனைச் சுடர்கள்

சிந்தனைச் சுடர்கள் (சிகரம் தொட சிறகு தரும் சிறுகதைகள்), யுவ சக்தி, யுவசக்தி வெளியிடு, சென்னை, பக். 64, விலை 20ரூ. இளைஞர் நலனை மையமாகக் கொண்டு இச்சிறு நூலில் உள்ள 30 (சிறுகதைகளும் புராணங்கள், சொற்பொழிவுகள், நூல்கள், இணையதளங்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் வாழ்வியலோடு தொடர்புடையவை. இளைய தலைமுறையைத் தட்டி எழுப்பக்கூடியவை. கதையின் கருவைப் பிரித்திருக்கும் நேர்த்தி, பரிணாம வளர்ச்சி, விரிவடைதல், மனவுறுதி, ஈடுபாடு, இலக்கறிதல், பேராசை, மனம், அளவுகோல், தூண்டுகோல், பண்புநலன், முன்னுதாரணம் என விரிகின்றன. ஒவ்வொரு […]

Read more

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி

கலீல் ஜிப்ரன் கவிதைகள் 2ஆம் தொகுதி, தமிழில் கிருஷ்ண பிரசாத், காவ்யா, சென்னை, பக். 1312, விலை 1300ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-319-7.html கலீல் ஜிப்ரனின் தத்துவஞானி உலகப் புகழ் பெற்ற நூல். அவரது பிற நூல்களையும் தமிழுக்கு கொண்டுவரும் ஆர்வத்தால் இந்த நூல் உருவாகியுள்ளது. கலீல் ஜிப்ரனின் பிற படைப்புகளான இதயத்தின் ரகசியங்கள், முறிந்த சிறகுகள், குருவின் குரு, சிந்தனைகளும் தியானங்களும், நெஞ்சின் கண்ணாடி, இயேசு மனிதனின் மைந்தன் ஆகிய ஆறு நூல்களையும் ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, தொகுப்பாசிரியர் நா. சிபிச்சக்கரவர்த்தி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 160, விலை 100ரூ. அஞ்சாத சிங்கம் சூர்யா என்ற பெயரில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்பட டைரி ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த சூர்யாவின் பேட்டிகள், அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் அவர் நடித்த படங்களின் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாகும். சூர்யாவின் முதல் படத்திலிருந்து சமீபத்திய அஞ்சான் வரை அவரது திரையுலக வாழ்க்கை விவரிக்கும் இந்த நூலுக்கு சூர்யாவின் திரைப்பட டைரி 2014 என்று துணைத் தலைப்பு கொடுத்திருப்பது […]

Read more

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், ப. மருதநாயகம், தமிழ்ப்பேராயம், காட்டாங்குளத்தூர், பக். 272, விலை 150ரூ. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் மொழியேயாகும். தமிழ்ச் சொற்கள் பலவும் இன்றைக்கும் கிரேக்கம், சீனம், கொரியம், லத்தீன் முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றன. பிறமொழிச் சொற்களுக்கு வேர்ச்சொல்லாக இருப்பது தமிழ்தான். தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல் போன்றவை உலக அளவிலும் பரவியிருக்கின்றன என்பதற்கு மொழியியலாளர்களின் ஆய்வுகளே தக்க சான்றாகத் திகழ்கின்றன. எபிரேய விவிலியத்துப் பழைய ஏற்பாட்டில் உள்ள சிறப்புக் கூறுகளை கைம் ராபின் என்பவர் கபிலரின் குறுந்தொகை, ஐங்குறுநூறு, […]

Read more

இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான், கமலாதாஸ், தமிழில் மு.ந.புகழேந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 180, விலை 135ரூ. மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலாதாஸின் படைப்புகள் அனைத்துமே உயிரோட்டமானவை. அன்றாடம் ஏதாவது ஒரு மூலையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அவை அமைந்திருக்கும். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள குறுநாவல்கள், சுயசரிதை, சிறுகதைகள், கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. காலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மன்னிக்க முடியாத பாவமா காதல்? இந்த மகளை மன்னித்து விடுங்கள் ஆகிய படைப்புகள் வெளிப்படுத்தும் யதார்த்தம் நம்மை […]

Read more

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம், மா.ரா. இளங்கோவன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. தமிழரகக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம், அவர் நடத்திய கிராமணி குலம் (1936-37), தமிழ் முரசு (1946 – 51), தமிழன் குரல் (1954-55) ஆகிய இதழ்களில் எழுதிய தலையங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும், அவை பற்றிய அறிமுகமாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. இக்காலகட்டத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கங்களின் கொள்கைகள், சுதந்திரத்திற்குப் பிறகான சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பற்றி ம.பொ.சி.யின் வித்தியாசமான கருத்துகள் நம்மை வியக்க வைக்கின்றன. சான்றாக, […]

Read more

மெய்வருத்தக் கூலி தரும்

மெய்வருத்தக் கூலி தரும், (வானொலி உரைகள்), த. ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 172, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-339-5.html கோவை மற்றும் சென்னை வானொலியில் இன்சொல் அமுது என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப்பட்ட உரைகள், படித்ததில் பிடித்தவை, அனுபவங்கள், சந்திப்புகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுளள்ன. முதல் கட்டுரை ஓயாத ஒற்றர் படையில் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ.வின் ஒற்றர் படைப் பிரிவில் இடம் […]

Read more

சந்தன உவரியல் சாலமன் கப்பல்

சந்தன உவரியில் சாலமன் கப்பல், மோகன ரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 166, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-286-0.html திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் உவரி. இங்குதான், உலகப் புகழ் பெற்ற ஒபீர் துறைமுகம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் பின்பு தூர்ந்து மறைந்தது என்றும் சாலமன் மன்னன் வாழ்ந்த காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக ஒபீர் துறைமுகத்திலிருந்து சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் ஒபீர் […]

Read more

உயில் மற்றும் பிற கதைகள்

உயில் மற்றும் பிற கதைகள், ஓரியா, மூலம் ஜெ.பி. தாஸ், தமிழில் சுப்பிரபாரதிமணியன், சாகித்திய அகாதெமி வெளியீடு, பக். 256, விலை 160ரூ. கணவன் இருக்கும்போது சுகமில்லாமலும், சொற்ப வருடங்களில் கணவனை இழந்தும், புகுந்த வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவளின் வெற்றியை உயில் கதை சொல்கிறது. பொதுவாக நூலாசிரியர் என்பவர் ஒரு நாளைக்கு 50 பக்கங்கள் எழுத முடியும். நாடகாசிரியர் நாள் முழுவதும் சக நடிகர்களடன் ஒத்திகை செய்ய முடியும். ஆனால் கவிஞர் ஒரு நாள் முழுவதும் […]

Read more

கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ. புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் […]

Read more
1 137 138 139 140 141 180