சாதியும் நானும்

சாதியும் நானும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 257, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-4.html இந்தியாவில் ஜாதியம் என்ற சமூக அவலம் இந்த நவீன காலத்திலும் ஆழ வேரூன்றியுள்ளது. இதனால் மனித சமூகம் சந்தித்து வரும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி, ஜாதியின் கொடூரத்தை இந்த உலகுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார் பதிப்பாசிரியர். குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம் என எந்த ஓர் இடத்தையும் ஜாதிக்கொடுமை விட்டு […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் நூலகம், சென்னை, பக். 176, விலை 100ரூ. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இதழியல் கோட்டையாக விளங்கிய புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தாலும் அச்சக அதிபர் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததாலும் இந்நூலாசிரியருக்கு பத்திரிகைத் துறையில் சிறுவயது முதலே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தனது வாழ்வின் சில முக்கிய அனுபவங்கள் குறித்தும், தான் சந்தித்த சில பிரமுகர்கள் குறித்தும் கட்டுரையாகவும், துணுக்காகவும், கவிதையாகவும் சில இதழ்களிலும், சில சிறப்பு மலர்களிலும் அவர் எழுதியிருப்பதன் தொகுப்பு இந்நூல். ஆழமான விஷயங்கள் எதுவுமில்லாததாலும், […]

Read more

வேதபுரத்து நாயகிகள்

வேதபுரத்து நாயகிகள், ச. கணபதி ராமன், வெர்சோ பேஜஸ், புதுச்சேரி, பக். 160, விலை 100ரூ. மாரியம்மன் கோயில்கள் புதுச்சேரியில் தோன்றிய விதம், மாரி மழை என்பதன் விவரம், மாரியம்மனின் வரலாறு, அம்ன் கோயில்கள் இருக்கும் இடங்கள், அதனையொட்டிய தல வரலாறுகள், வழிபாட்டு முறைகள், இந்நூலில் எளிமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. கிராம மக்களின் வழிபாடு கடவுள்கள் சிறுதெய்வங்களே என்பதைச் சொல்லி, ஏழை மாரியம்மன் கோயில் முதல் பச்சை வாழி அம்மன், அங்காள பரமேஸ்வரி, துரோபதையம்மன், செங்கழுநீர் அம்மன், காமாட்சி, தளிங்சி காளியம்மன், படவெட்டி மாரியம்மன், ரோணுகா […]

Read more

பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்

பிரபலமானவர்களிள் வெற்றி ரகசியங்கள், ஜி. மீனாட்சி, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 152, விலை 100ரூ. பிரபலங்கள் யார்? அந்த நிலையை அடைய அவர்கள் கடந்து வந்த பாதைதான் என்ன? பிரபலமானால் மட்டும் போதுமா? என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 25 பேரை நேரடியாகச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. முதலாவது கட்டுரை பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பற்றியது, தான் இன்று பிரபலமானாலும், சாதி சங்கங்கள், கட்சிகளிலோ சேராதே, படிப்பு, திறமையில் உன்னை விட உயர்வான இடத்தில் இருக்கிறவர்களைப் பார். பண […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா, ஆலிஸ் கெ.ஜோஸ், நோஷன் பிரஸ், சென்னை, பக். 398, விலை 350ரூ. பெண்களுக்கு உகந்தது ஆசிரியர் அல்லது மருத்துவர் பணி என்பார்கள். இவ்விரு பணிகளும் அறம் சார்ந்தவை என்பதுதான் அதற்கு காரணம். நூலாசிரியரான ஆலிஸ் கெ. ஜோஸ், 40 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர். அவரே தனது சுய சரிதையை எழுதியுள்ளார். புகழ்பெற்ற தலைவர்கள், சான்றோர்கள் அல்லது சாதனையாளர்களின் சுயசரிதையின் நோக்கம் தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதில் இருக்கும் என்பதுதான். ஆனால் […]

Read more

பஞ்ச லட்சணதிருமுக விலாசம்

பஞ்ச லட்சணதிருமுக விலாசம், பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், கவிதா பதிப்பகம், பக். 353, விலை 200ரூ. 96 வகை சிற்றிலக்கியங்களை பட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் பல்கிப் பெருகிய பல்வேறு சிற்றிலக்கியங்களில் விலாசம் உட்பட சிற்றிலக்கிய வகை 417 என்று ச.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த வகையில் சிற்றிலக்கியங்கள் 96 வகைதான் எனப் பாட்டியல்கள் வரையறை செய்திருப்பது பொருந்தாது என்கிறார் பதிப்பாசிரியர். அத்தகைய சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் விலாசம். அவற்றுள் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, சிவகங்கை துரைசிங் மன்னரைப் பாட்டுரைத் தலைவனாகக் […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல்

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல், திருமலர் எம்.எம். மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், சென்னை, பக்.152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-4.html தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றிலும், பண்பாட்டிலும் தனித்துவத்துடன் விளங்குவதும், இன்னும் ஆழமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப்பாடல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய துறை நாட்டுப்புற இயல். கதைப் பாடல் ஆய்வு நூலாக நூலாசிரியரின் விளக்கத்துடன் வெளிவந்துள்ளது இந்நூல். பொதுவாக இந்த நாட்டுப்புறப் பாடல்கள் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நபிகள் நாயகத்தின் அருமைப் […]

Read more

ஞானப் பொக்கிஷம்

ஞானப் பொக்கிஷம், பி.என். பரசுராமன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.232, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-321-1.html அரிய பழம்பெரும் நூல்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி அதிலுள்ள ஞானத்தை விவரித்துள்ளது இந்நூல். நூலின் தொடக்கத்திலேயே அண்ணன், தாய், தந்தை போன்ற உறவுமுறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான விளக்கங்களுக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்க வைக்கும் அறப்பளீசுர சதகம், வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சுழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக் கூறும் நூல் […]

Read more

பட்டம் ஒரு தலைமுறை கவசம்

பட்டம் ஒரு தலைமுறை கவசம், கி. முத்துச் செழியன், காவ்யா வெளியீடு, சென்னை, பக். 436, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-362-3.html மாணவர்கள் பல ஆண்டுகளாக முதலீடு செய்த கடின உழைப்பின் பலனைப் பெறும் நாள்தான் பட்டம் பெறும் நாள். பட்டம் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, பட்டமளிப்புக்குத் தயார் செய்யும் கல்வி நிறுவனத்தினரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ள நூலாசிரியர், உலக பல்கலைக்கழகங்களின் வரலாறு, பட்டமளிப்பு விழாக்களின் தொடக்க காலம், […]

Read more
1 136 137 138 139 140 180