வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை […]

Read more

நல்லூர் மனிதர்கள்

நல்லூர் மனிதர்கள், அஸ்வத், ஆனந்தம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 207, விலை 175ரூ. இந்த நூல், 20 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் வெளிவந்த காலத்துக்குப் பின்பு சமூகப் பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும் நிறையவே மாறிவிட்டன. இதனால், இந்த நூலின் தொன்மைத் தன்மையும் கூடியிருக்கிறது. அதனால், இந்த நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களது மனநிலையை சற்றே பின்னோக்கிச் செலுத்தி கதை மாந்தர்களைக் காண வேண்டிய நிலை உள்ளது. நல்லூர், ஒரு மலை உச்சியிலிருந்து ஓர் ஊரை அப்படியே புகைப்படம் எடுத்தால் எப்படி […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

உலகப்பன் காலமும் கவிதையும்

உலகப்பன் காலமும் கவிதையும், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-7.html புதுவைக்குயில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளைப் படிப்போர் மதுவை உண்ட வண்டுபோல மயங்குவர் என்பது திண்ணம். பாடாத பொருளில்லை எனச் சொல்லும் அளவுக்கு, அந்த எழுச்சிக் கவிஞர் எழுதிக் குவித்த, முதல் கவிதை தொடங்கி அத்தனைக் கவிதைகளையும் ஆய்வுக்கு உள்ளாக்கியுள்ளார் நூலாசிரியர். இந்தக் கவிதைகள் படைக்கப்பட்ட சூழல், பாரதிதாசனின் வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவை அந்தக் காலகட்டத்தில் நிலவிய அரசியல் […]

Read more

திருமுறைகளில் கலைகள் சமுதாயம் கோயில்கள்

திருமுறைகளில் கலைகள், சமுதாயம், கோயில்கள், பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, பக். 220, விலை 100ரூ. திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மூலமாக, சைவத் திருமுறை மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, அதன் மூலம் பல ஞான நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சமுதாயம், அருளியல், கலைகள், கோயில்கள் தொடர்பாக பன்னிரு திருமுறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தக்க ஆதாரங்களுடன் அறிஞர் பெருமக்கள் பதினெட்டுப் பேர் விரித்துரைத்துள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் காலத்தில் […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-2.html தமிழ் மொழிக்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது பங்கினை ஆற்றியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களில் ஒருவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகூர் குலாம் காதிறு நாவலர். நாகூரில் 1983இல் பிறந்த நாகூர் குலாம் காதிறு, தமிழ் மொழியை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடமும், அரபி மொழியை முகைதீன் பக்கீர் சாகிபிடமும் கற்றுக் கொண்டவர். காப்பியங்கள், கலம்பகங்கள், அந்தாதிகள், மொழிபெயர்ப்புகள் […]

Read more

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4, (விஞ்ஞானி பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்), ஓஷோ, தமிழில் தியான் சித்தார்த், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 624, விலை 300ரூ. தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள தந்த்ரா உலகம் என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான் பைரவ் தந்த்ரா என்ற வார்த்தைகளின் பொருள் உணர்வு தாண்டிப் போகும் யுக்தி. விஞ்ஞான் என்றால் உணர்வு. பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. தந்த்ரா என்றால் யுக்தி, வழி, […]

Read more

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ. கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான […]

Read more

2 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை

 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை, சேத்தன், ஜெய்கோ பப்ளிஷிங், மும்பை, பக். 362, விலை 199ரூ. 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம் பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிர்ஷ்சிட்டி பேங்கில் வேலை செய்தாலும் சொந்த […]

Read more

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட […]

Read more
1 135 136 137 138 139 180