பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி, தமிழில் லா.சு.ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 224, விலை 100ரூ. இந்திய அரசியல் ஆன்மிகமும் தார்மீகமும் இழைந்ததாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தி, தனது ஆசிரமங்களின் கூட்டுப் பிரார்த்தனையின்போதுபாடுவதற்காகத் தேர்ந்தெடுத்த 253 துதிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். உபநிடதம், துவாதச பஞ்சரிகம், துளசிதாசர், துகாராம், ஏக்நாத், சூர்தாஸ், கபீர், மீராபாய், ஹரிதாஸ், குருநானக், இஸ்லாமிய சூஃபி பாடல்கள் மற்றும் பெயர் தெரிந்த பெயர் தெரியாத பக்திப் பாடல்கள் (வினோபா பாவே கூட ஒரு பாடல் […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

பயத்திலிருந்து விடுதலை

பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ. தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் […]

Read more

திருப்புகழும் திருத்தலங்களும்

திருப்புகழும் திருத்தலங்களும், உரையாசிரியர் சண்முக.செல்வகணபதி, தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 152, விலை 60ரூ. நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் தொடங்கி, முருகனைப் போற்றிப் பாடும் நூல்கள் பல இருப்பினும், தமிழ் வளம், சொல் வன்மை, தொடை நயம், சந்தப் பொலிவு, கற்பனைத் திறன், பக்திப் பெருக்கு போன்ற கவிதைப் பண்புகளால் தமிழ் பக்தி இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ். முருகப் பெருமானின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கெண்டபோது முத்தைத் திரு பத்தித் திருநகை என்று […]

Read more

பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ. பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, […]

Read more

புதுவை வரலாற்றுச் சுவடுகள்

புதுவை வரலாற்றுச் சுவடுகள், நந்திவர்மன், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 170ரூ. புதுவையின் தொடர்ச்சியான வரலாறாக இல்லாமல், புதுவையில் தங்கியிருந்த அறிஞர்கள், புதுவையில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள், புதுவைக்கு வந்த கப்பல்கள் என்று புதுவையோடு தொடர்புடையவை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அலக லல்ல லாடக நி என்று தியாகராஜ கீர்த்தனையைப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழாக்கம் செய்தள்ளார். பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை செம்மறியாடும் நாயும் என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார் என்பன போன்ற […]

Read more

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம், ஜஸ்டின் ஓ பிரையன், தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 632, விலை 300ரூ. இமயமலை மீது நூலாசிரியர் ஜஸ்டின் ஓ பிரையன் பல முறை ஏறியிருக்கிறார். துறவிகள் அமர்ந்து தவம் செய்யும் புனிதமான இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். கும்பமேளாவில் தற்காலத் துறவிகளின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்டிருக்கிறார். அவருடைய ஆசான் சுவாமி ராமா பலமுறை அவரைப் புனிதப் பயணங்களுக்கு அனுப்பி ஆற்றலை அதிகரிக்க வைத்திருக்கிறார். அந்த ஆசான் மறைந்துவிட்டாலும் ஒளி வடிவில் இருந்துகொண்டு தகதியானவர்களின் […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ. முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் […]

Read more

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள், குவின்டின் ஹோரே, ஜியடோஃபெரி நோவல் ஸ்மித், தமிழில் வான்முகிலன், அலைகள் வெளியீட்டகம், சென்னை, பக். 802, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-8.html அந்தோனியோ கிராம்சி இத்தாலியைச் சேர்ந்தவர். 1891இல் பிறந்தவர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர். அதன் காரணமாக, இரண்டாம் உலகப் போர் காலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய முசோலினியால் சிறை வைக்கப்பட்டவர். பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர். எனினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் தனது சிந்தனைகளைக் கிறுக்கல்களாகவும், […]

Read more

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, ஜவி பீட்டர், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 173, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-7.html கேரள மாநிலத்தில் வாழும் ஈழவ சமுதாய மக்களின் போராட்ட வரலாற்றைச் சொல்லும் நூல். 19ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் இருந்த சமுதாயப் பிரிவுகள், சாதிப் பிரிவுகள், ஒவ்வொரு சாதியினரின் சமூக அந்தஸ்துகள் ஆகியவற்றை நூல் விளக்குகிறது. சுதந்திரமாக நடமாடவும், கோயில்களில் நுழைந்து வழிபாடு செய்யவும், கல்வி கற்கவும், அரசுப் பணிகளில் நுழையவும் ஈழவ சமுதாய மக்களுக்குத் தடை […]

Read more
1 134 135 136 137 138 180