வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!, ஞானசேகர்; யூனிக் மீடியா, பக்.198, விலை ரூ.160. வாழ்க்கை சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வதற்கு பல எளிய வழிகள் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிந்து முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த கட்டுரையாளர் மிக நேர்த்தியாக பல கருத்துள்ள உண்மை சம்பவங்களையும், கதைகளையும் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில் உள்ள 36 கட்டுரைகளும் தூதன் மாத இதழில் 3 ஆண்டுகள் வெளிவந்ததன் தொகுப்பாகும். இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கவும், தோல்விகளைக் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், வசந்த்பதிப்பகம், பக்.656, ரூ.700. ஏற்றுமதி தொழில் செய்வது தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கிய நூல். ஏற்றுமதி தொழில் செய்வதற்கு செய்ய வேண்டியவைகளான நிறுவனப் பெயர் அமைப்பது, அந்த நிறுவனம் பிரைவேட் நிறுவனமா அல்லது, பார்ட்னர்ஷிப்பா என்று முடிவு செய்வது, பான் கார்டு வாங்குவது, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, ஏற்றுமதி பொருளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட பல அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், மதிப்பு […]

Read more

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]

Read more

கருத்தியல் பற்றிய சிந்தனைகள்

கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170. இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் […]

Read more

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு, பகுதி 1, பகுதி 2, தொகுப்பு திருமூலம் திருமந்திரக் கல்வி அறக்கட்டளை, முல்லை பதிப்பகம், பக். 184, விலை 200ரூ. திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன. டாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, […]

Read more

நேரா யோசி!

நேரா யோசி!,  சுதாகர் கஸ்தூரி, பினாக்கிள் புக்ஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், பக்.144, விலை ரூ.150. மாத்தி யோசி என்ற சிந்தனை இன்றைய சமூகத்தில் எப்படி பலரின் பார்வையில் வக்கிரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நியாயமாக அங்கலாய்க்கும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கூறும் செய்தி – மாத்தி யோசி என்பதற்கு முன்பாக, நேரா யோசிப்பது எப்படி என்று அறிந்து கொள் என்பதுதான். அந்தச் சிந்தனையைத் தூண்டும் 24 அருமையான கட்டுரைகளை – இல்லையில்லை – பார்வைகளை நமக்குத் தருகிறார்! நேராக யோசிப்பதற்கும் ஒன்றின்மேல் எண்ணத்தைக் […]

Read more

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை?

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? (சிறு கதைகள்)- உமா பார்வதி; யாவரும் பப்ளிஷர்ஸ், பக்.144, விலை ரூ.160. பல்வேறு நாளிதழ்களில், மாத இதழ்களில் வெளியான 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கதைகளும் கதைக் கருவில் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. அம்மாவோடு நாளைக் கழிக்க ஆசைப்படும் பத்து வயது சிறுவன் சஞ்சுவின் ஏக்கம் ஒருபுறம்; ஒரே மகனின் ஏக்கத்தையும், தனிமையையும் போக்க நினைத்தாலும், அலுவலகத்தில் கெடுபிடி, ஆடிட்டிங் என்று நீண்ட தூரம் மின்சார ரயிலில் பயணம் செய்து, மனமும் உடலும் சோர்ந்து […]

Read more

உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்) – க.நா.சுப்ரமண்யம்.முல்லை பதிப்பகம்,பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து வைக்கிறார். […]

Read more

உலகத்துச் சிறந்த நாவல்கள்

உலகத்துச் சிறந்த நாவல்கள் (உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்), க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், பக்.368, விலை ரூ.250. உலக மொழிகளில் வரும் அத்தனை இலக்கியப் படைப்புகளையும் மூலமொழிகளில் ஒரு வாசகனால் படித்துவிட முடியாது. அவனறிந்த மொழியில் நாவலின் மொழிபெயர்ப்பு கிடைத்தால் மட்டுமே படிப்பது சாத்தியம். அதை சாத்தியமாக்கியுள்ளார் தமிழ் எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ள பயன்படும் என்ற வரிகளுடன் 15 உலகத்துச் சிறந்த நாவல்களை அறிமுகம் செய்து […]

Read more
1 53 54 55 56 57 180