மேடை நமதே

மேடை நமதே, ம.ஸ்டிபன் மிக்கேல் ராஜ், சாரல் பதிப்பகம், சிவங்கை மாவட்டம், விலை 20ரூ. சமயக்குரவர் நால்வர் யார்? பஞ்ச தந்திரம் எவை? ஐம்பெரும் காப்பியங்கள் எவை? சப்தஸ்வரங்கள் என்றால் என்ன? என பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், பொது அறிவு பெற விரும்புபவர்களும் இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி. 8/10/2014.   —- போலி மத சார்பின்மை, ஆதித்யா பதிப்பகம், நெல்லை மாவட்டம், விலை 100ரூ. மத சார்பின்மை பற்றி புதிய […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன்

படைப்பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராஜன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன். பாடலாசிரியர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடகர், கிராமிய இசையமைப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் பாவலர். அவரைப் பற்றி கே.டி.கே. தங்கமணி, எம். கல்யாண சுந்தரம், நல்லகண்ணு, ஐ. மாயாண்டி பாரதி, எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலை சங்கை வேலன் தொகுத்துள்ளார். பொதுவுடைமைக் கருத்துகளில் பாவலர் வரதராஜன் அளப்பரிய ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது படைப்புகள், […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

மண் கசந்தால் மானுடமே அழியும்

மண் கசந்தால் மானுடமே அழியும், பி. தயாளன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 86, விலை 60ரூ. நீர், நிலம், காற்று என அனைத்தையும் நாம் மாசுபட வைத்துவிட்டோம். அதனால் மழை தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. உணவு தரும் பயிர்கள் இல்லாமல் போகின்றன. ஆலைகளின் கழிவு நீரால், நீர் நிலைகள் மாசடைந்து மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் மாசடைய வைக்கிறது. வளமான, அழகான, இனிமையான, சத்தான மண்ணைக் கெடுத்து, வருங்கால இனத்தையே கெடுத்து வருகிறான் மனிதன். நமது […]

Read more

நதியின் பிழையன்று

நதியின் பிழையன்று, வெ. இன்சுவை, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ. காலம் மாறிப்போய்விட்டான். அவனுடைய வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப்போய்விட்டன. சரிந்து போய்க் கொண்டிருக்கும் பண்பாட்டு சீரழிவை எப்படி சரிசெய்யப் போகிறோம்? விதவிதமான மனிதர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனம் கொதித்து தனது கோபத்தையும், ஆற்றாமையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியை வெ.இன்சுவை.   —-   வளம் தரும் பரிகார ஸ்தலங்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ அலமு பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 164, விலை 80ரூ. இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். வட்டார வழக்கும் உரையாடல்களோடு கூடிய இந்த நாவல் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல. சீரிய சிந்தனைக்கும் உரியது. -சிவா.   —-   மனிதனையும் தெய்வமாக்கும் சன்மார்க்க பெருநெறிகள், தெ. ராமநாதன், ஆர். பானுமதி, எண். 1/2, காமராஜர் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி 620004, பக். 168, விலை 50ரூ. திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க […]

Read more

சிக்கலில் இந்திய விவசாயிகள்

சிக்கலில் இந்திய விவசாயிகள், பத்து வேளாண்மைப் பொருளாதாரக் கட்டுரைகள், அ. நாராயணமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 81, விலை 50ரூ. விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கான காரணங்களை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விவசாயத்தின் பின்னடைவுக்குக் காரணம், அரசாங்கத்தின் தவறான பல்வேறு கொள்கைகளே என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நூல். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் போன்ற விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை. அதே சமயம் உற்பத்தி செய்த பொருள்களின் விலையை விவசாயி நிர்ணயிக்க முடிவதில்லை. இதனால் விவசாயி இழப்புகளைச் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், பக். 160, விலை 150ரூ. தமிழ் இலக்கியங்கள் மொழிவளம், கற்பனைத் திறன், வாழ்க்கைத் தர்மங்களை மட்டுமல்ல, அவை சரித்திரத்தின் பதிவுகளாகவும் திகழ்ந்துள்ளன என்பதை மிக மிக எளிமையாகக் கூறும்வகையில் நூலின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழக மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தார்கள் என்று எண்ணத்தை மாற்றும்வகையில் அமைந்துள்ள கரிகாற்சோழன் கட்டுரை முதல் பட்டினப்பாலை வரையில் அனைத்திலும் புதிய புதிய அரிய தகவல்களை அறியும் […]

Read more

காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு சகாப்தம், க. தாமோதரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 217, விலை 130ரூ. 2011-2012ம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த நூல்.  1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர். அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை […]

Read more
1 2 3 4 5 6 7