தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ. சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு […]

Read more

உரையியல்

உரையியல், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 254, விலை 160ரூ. பெண்களை ‘பா’ போட்டு அழைக்கலாமா? தமிழ் இலக்கண, இலக்கிய உலகில், உரையாசிரியர்களின் உன்னத இடத்தை, இந்த ஆய்வு நூல் விரிவாக உரைக்கிறது. அகராதியின் சொற்பொருள், உரையாசிரியர்களின் விளக்கங்கள், மூலநூலை எளிதாக்கிவிடுகின்றன. தொல்காப்பியத்திற்கு, சேனாவரையரின் உரை, மறுப்புத்திறன் மிக்க உரையும், தெய்வச் சிலையாரின் மிக எளிய உரையும், திருக்குறளுக்கு மணக்குடவர் விளக்க உரையும், நற்றிணைக்கு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், உரைநெறிகளும், அவ்வை துரைசாமிப்பிள்ளை பதிப்பும், பாட பேதங்களும், நாவலர் ந.மு. […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள், வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாசலம், சுபா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பல்வேறு நிலச்சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், மதிப்புக் கூட்டுவரி வெள்ளை அறிக்கை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முதலியவை பற்றி விரிவாகக் கூறுகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாலசலம். பயனுள்ள நூல். இதே நூலாசிரியர் எழுதிய மகளிருக்கான சட்டங்கள் விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மூலிகை மருத்துவம், டாக்டர் எம்.எல்.ஜே. லார்ட்வின் லாரன்ஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. தமிழ் […]

Read more

மனவளர்ச்சி குன்றுதல்

மனவளர்ச்சி குன்றுதல், ந. செந்தில் குமார், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 204, விலை 130ரூ. மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மனநலக் குறைபாடு வேறு என்பதை ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறார். மனவளர்ச்சிக் குறைபாடு என்பது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடுகளில் உண்டாகும் குறைபாடாகும். இந்த அடிப்படையில் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது வரை ஒவ்வொரு வயதிலும் என்னென்ன வளர்ச்சிப் படிநிலைகளை அடையுமோ, அவற்றை அடையாவிட்டால் அக்குழந்தை மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். […]

Read more

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, ஜவி பீட்டர், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 173, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-257-7.html கேரள மாநிலத்தில் வாழும் ஈழவ சமுதாய மக்களின் போராட்ட வரலாற்றைச் சொல்லும் நூல். 19ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் இருந்த சமுதாயப் பிரிவுகள், சாதிப் பிரிவுகள், ஒவ்வொரு சாதியினரின் சமூக அந்தஸ்துகள் ஆகியவற்றை நூல் விளக்குகிறது. சுதந்திரமாக நடமாடவும், கோயில்களில் நுழைந்து வழிபாடு செய்யவும், கல்வி கற்கவும், அரசுப் பணிகளில் நுழையவும் ஈழவ சமுதாய மக்களுக்குத் தடை […]

Read more

விண்வெளி நாட்குறிப்புகள்

விண்வெளி நாட்குறிப்புகள், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 184, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-346-6.html வான்வெளி கன்னங்கரேல் என்று மிக, மிக இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனான யூரி காகரின் வார்த்தைகள்தான் இவை. அவர் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட 1961, ஏப்ரல் 12 என்ற இந்த நாள் விண்வெளித் துறையில் இன்றளவும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இதே நாளில் விண்வெளி […]

Read more

சந்தன உவரியல் சாலமன் கப்பல்

சந்தன உவரியில் சாலமன் கப்பல், மோகன ரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 166, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-286-0.html திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் உவரி. இங்குதான், உலகப் புகழ் பெற்ற ஒபீர் துறைமுகம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் பின்பு தூர்ந்து மறைந்தது என்றும் சாலமன் மன்னன் வாழ்ந்த காலத்தில் பினிசிய மாலுமிகள் அவனுக்காக ஒபீர் துறைமுகத்திலிருந்து சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்தவகையில் ஒபீர் […]

Read more
1 2 3 4 5 7