சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 200ரூ. ஒவ்வொரு கனிக்குள்ளும் ஒரு விதை இருப்பதைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். மனதால் பழகினால் அந்தக் கதையை நாம் படிக்கலாம். அப்படி, தான் பார்த்த, தன்னோடு பழகிய மனிதர்களிடம் இருந்து படித்த கதைகளை, சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய எளிய நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒவ்வொரு பக்கமும் பல முகங்களின் அனுபவங்களாக, நகர்கின்றன. முழுமையாகப் படித்து முடித்ததும் நாமே அவர்களோடு பழகியதுபோன்ற உணர்வும், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் […]

Read more

சிதறு தேங்காய்

சிதறு தேங்காய்,  வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.112, விலை ரூ.80. ‘குமுதம்‘ வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் ‘சிதறு தேங்காய்‘. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல். கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான். மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. ‘ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்‘ என்கிறார் நூலாசிரியர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல். […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 135ரூ. தனி மனிதரிடையே ஒளிந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும், அதைச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அந்த வகையில் கல்வியின் உன்னதம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு மாணவர்களோடு அறிவார்ந்த அற்புதமான உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு எழுதிய 30 மடல்களின் தொகுப்பே இந்நூல். ‘குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதை விடப் பெரிது ‘நீ மகத்தான ஆற்றலாக உருவாவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய். அற்ப […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை175ரூ. தினந்தோறும் காலையில் எந்தச் செய்தித்தாளைப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு தற்கொலைச் செய்தி இடம் பெற்றுவிடும். அண்மையில் ‘புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்கொலை செய்த செய்திகளைப் படித்தபோது நெஞ்சம் பதறியது. மனிதன் என்றால் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் இதைப் போராடி வெற்றிக்கொள்வதே வாழ்க்கை. தற்கொலை எண்ணத்தில் இருந்து மனித குலம் மீட்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான, பேச்சாளருமான வெ.இறையன்பு இந்த நூலை எல்லோருக்கும் புரியும் […]

Read more

காகிதம்

காகிதம், வெ. இறையன்பு, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 32, விலை 50ரூ. காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும், வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்நுால். காகிதப் பயன்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இந்நுால், வண்ணப் படங்களுடன் வர்ண ஜாலம் காட்டும் நுாலாசிரியரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

முடிவு எடுத்தல்

முடிவு எடுத்தல், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.32, விலை 50ரூ. பிரச்னைகளின்போதும், சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது; எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது; சூழலுக்கேற்ப எப்படி நடந்து கொள்வது மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நுாலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது இந்நுால். எளிய நடையில் ரத்தின சுருக்கமாக விளக்குகிறது. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

நேரம்

நேரம், வெ.இறையன்பு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை 50ரூ. நேரம் நகர்ந்து கொண்டேதான் இருக்கும். அதன் நகர்தலுக்கு ஏற்ப நமது நகர்தலுக்கான திட்டமிடலைச் செய்தால், நேரம் இல்லை என்ற பிரச்னையே வராது. காலத்தை நம் கைப்பிடியில் வைத்துக் கொண்டு கணக்கிட்டு செயலாற்றும் வழியை சீராகச் சொல்லித் தந்திருக்கிறார் இறையன்பு. இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர், எஜமானர், வேலைக்காரர், மாணவர், இல்லத்தரசி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமே பயன்தரக்கூடிய அற்புதமான புத்தகம். -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

வனநாயகம்

வனநாயகம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வனம் மிகுந்து ஊர் சிறுத்து இந்த காலத்தில் நம் மனத்து இருந்த நிம்மதியும், இயற்கை அளித்த கொடையும் நிறைந்து இருந்தது. வனம் அழிந்து ஊர்களானதில் வெளிச்சம் வெளியே வந்து மனதின் உள்ளே இருட்டு பரவி விட்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இறையன்பு. தினம் தினம் வனம் அழிகிறது. அதனால்தான் மனிதனின் வாழ்நாளும் வேகமாக கழிகிறது என்ற உண்மை, கனக்கிறது. கூடவே, வனம் வளர்த்து வருங்காலத் தலைமுறைக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் படமாகத் […]

Read more

போர்த் தொழில் பழகு

போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]

Read more
1 2 3 4