இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 110ரூ. மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, தமிழக அரசின் முதன்மை செயலாளராக, முது முனைவராக, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த வெ.இறையன்பு எழுதிய 16 நூல்களைத் தேர்ந்தெடுத்து, அந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளைத் தந்து இருக்கும் இந்த நூல், இறையன்புவின் ஆற்றல்களை தெளிவாக அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது. ‘தந்தி’ பதிப்பகம் வெளியிட்ட ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’, ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ ஆகியவை உள்பட இறையன்பு எழுதிய புத்தகங்களில் காணப்படும் […]

Read more

ஒரு பொறியாளரின் எண்ண அலைகள்

ஒரு பொறியாளரின் எண்ண அலைகள், ஏ.பி.எஸ்.ராஜ், சீதா அறக்கட்டளை, விலை 50ரூ. ஒரு பொறியாளரின் எண்ண அலைகள் என்ற கவிதை நூலை எழுதிய ஆசிரியர் ஒரு பொறியாளர். இவர் தனது எண்ணோட்டங்களை தொகுத்து அளித்துள்ளார். இவ்வுலகில் வாழ்க்கை சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவை, தள்ள வேண்டியவை எவை என்பதும், ஒருவரின் வாழ்வில் மனம்,காலம், செயல் இம்மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டு உள்ளது. சமூக சிந்தனைகளை தாங்கியிருக்கும் இந்த நூல் நல்வாழ்க்கையை கடைப்பிடிக்க நல்ல வழிகாட்டியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி. […]

Read more

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல்

நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன் கருத்துக் குவியல் – நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன்; முல்லை பதிப்பகம்,பக்.168; ரூ.150; தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய நான்கு உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவர் நூலாசிரியர். அவர் பல்வேறு மேடைகளில் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய நூல் மதிப்புரைகள், கட்டுரைகள், இலங்கை நாளிதழான வீரகேசரிக்கு அளித்த நேர்காணல் ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. நூலாசிரியரின் சீரிய கருத்துகள் இந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும், தற்கொலை முயற்சியைக் குற்றமற்றதாகக் கருதலாமா? பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு […]

Read more

ஜோதிட சாஸ்திர குறிப்புகள்

ஜோதிட சாஸ்திர குறிப்புகள், செய்யனூர், ஆர்.சுப்பிரமணியன், காளீஸ்வரி பதிப்பகம், விலை 100ரூ. ஜோதிடம் சம்பந்தமான நூல்களில் பெரும்பாலும், சாதாரண மக்களுக்குப் புரியாத பல வார்த்தைகள் இருக்கும் என்ற கோட்பாட்டை மாற்றி, ஜோதிடத்தை மிக எளிய முறையில் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த நூல் எடுத்துக்காட்டாக உள்ளது. அன்றாடம் நாம் கடைபிடிக்க வேண்டிய பல செயல்பாடுகளுக்கு பின்னணியில் உள்ள ஜோதிட சாஸ்திரங்களைக் கொடுத்து இருப்பது, அனைவருக்கும் பயன் அடையும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், மனோஸ், ஹலோ பப்ளிகேஷ்ன்ஸ், விலை 500ரூ. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியமான சிலப்பதிகாரம் முழுவதும் அப்படியே தரப்பட்டு அத்துடன் அவற்றுக்கு எளிய உரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஏன் நேரடியாக எழுதவில்லை? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச் சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தை மதுரை கடைச்சங்கத்தில் அரங்கேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? சிலப்பதிகாரத்தில் உள்ள நிகழ்வுகள் கற்பனையா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் தந்துள்ள விளக்கங்கள் ஆய்வுக்கு உரியவையாக விளங்குகின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

முத்தொள்ளாயிரம் உரை வரலாறு

முத்தொள்ளாயிரம் உரை வரலாறு (1943-2018); நூலாசிரியர்:அ.செல்வராசு; காவ்யா, பக்.96; விலை ரூ.100. மூவேந்தர் குறித்த பாடல்களைக் கொண்டது முத்தொள்ளாயிரம். 2,700 பாடல்களில், கிடைக்கப்பெற்ற பாடல்கள் 130 மட்டுமே. இவற்றுள்ளும் சில கருத்து வேறுபாடுகள், பாட வேறுபாடுகள் உண்டு. 1943-இல் டி.கே.சிதம்பரநாத முதலியார் முதன்முதலில் எழுதிய உரையில் தொடங்கி, 2018 -வரை மொத்தம் 17 பேரின் உரைகளில் அவர்களால் பின்பற்றப்பட்டுள்ள இலக்கண – இலக்கியக் கூறுகளை முத்தொள்ளாயிரம் உரை நூல் விரித்துரைக்கிறது. முதன் முதலாக (1905) ரா.இராகவையங்காரால்தான் முத்தொள்ளாயிரம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. "புறத்திரட்டு என்ற ஏடுகளில் இருந்த […]

Read more

10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?

10/பிளஸ் 2 க்குப் பிறகு என்ன படிப்பு? என்ன வேலை வாய்ப்பு?, வடகரை செல்வராஜ் ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த பிறகு என்ன வேலை வாய்ப்பைப் பெறலாம்? அல்லது அதற்கும் மேற்கொண்டு என்ன பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தால் எந்த விதமானவேலை வாய்ப்பைப் பெற முடியும்? என்பதற்கு முழுமையான வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருககிறது. கல்வி முறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால், தொடர்ந்து எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பதை முடிவு […]

Read more

ஹோமோ டியஸ்

ஹோமோ டியஸ் – வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு – யுவால் நோவா ஹராரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.494, விலை ரூ.499. வரலாறு என்பதே இதற்கு முன் நடந்தவற்றைப் பற்றிக் கூறுவதாகத்தான் இருக்க முடியும். இந்நூல் நூலின் தலைப்புக்கேற்ப, இனிமேல் நடக்கப் போகின்றவற்றைப் பற்றி பேசுகிறது. உலகமயம், தாராளமயம் உள்ள இக்காலத்தில், உலகின் பழைய கலாசாரம், மதம், சிந்தனை ஆகியவை அதற்கேற்ப மாற வேண்டியதன் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதனால் மாறி வருகிற வாழ்க்கைமுறை, […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது. கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் […]

Read more

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள், என். தம்மண்ண செட்டியார், நர்மதா பதிப்பகம், விலை 90ரூ. அசாதாரணமான விஷயங்களை மனதின் உள்ளுணர்வு மூலம் தெரிந்துகொள்ளும் ஆற்றலான ஈ.எஸ்.பி. எனப்படுவது எல்லோரிடமும் சிறிதளவாவது இருக்கும் என்று கூறும் இந்த நூல், அந்த சக்தி எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதற்கான சோதனைகளையும் விவரிக்கிறது. அமானுஷ்யமான இந்த விஷயம் தொடர்பாக பல எடுத்துக்காட்டுகளைக் கூறுவதோடு, அவற்றுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்ட இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமது ஆழ்மனதின் […]

Read more
1 2 3 9