விளிம்புக்கு அப்பால்

விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்),  தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன்,  அகநாழிகை பதிப்பகம், பக்.160, விலை ரூ.140 பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளின் தொகுப்பு. 22 வயதிலிருந்து 35 வயகுக்குட்பட்டவர்கள் எழுதிய கதைகள் இவை என்பதை நம்ப முடியவில்லை. வங்கியில் வேலை செய்யும் அப்பா, பிறருக்கு புத்தகங்களை விற்பவராக இருந்திருப்பதன் ரகசியத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொள்ளும் மகனின் பார்வையில் சொல்கிறது அப்பாவின் ரகசியம் சிறுகதை.  திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்காரனோடு வாழும் ஒருவர், வேலைக்காரனுக்கு திருமணம் செய்வதற்காக எல்லாச் சொத்துகளையும் வேலைக்காரனின் பெயரில் […]

Read more

அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள், எஸ். ரங்கராஜன், அகநாழிகை பதிப்பகம், பக். 100, விலை 100ரூ. மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது. நன்றி: தினமலர், 10/1/2018

Read more

நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம், பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதைக்கான ஆழத்தைத் தேடிப் பயணிக்கிறது. இடையிடையே வாழ்க்கைக்கான ஆதாரங்களைக் கண்ட பெருமிதங்களையும் தொட்டுச் செல்கிறது. சில சமயம் கவிஞருக்கு அது ஒரு ஞாபக மீட்டலாக மீண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அதுவே வாசிப்பினரின் அடையாளத் தேடலாகவும் கடந்து போகிறது. ஒன்றமில்லாததில் எல்லாம் இருந்தது போன்ற வரிகளில் அனுபூதியியலை நோக்கிய பயணம் தெரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2016.

Read more

பங்களா கொட்டா

பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ. சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல். தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல். […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. வாழ்க்கை தரும் நெருக்கடிக்கும் உறவுகள் தரும் ஏமாற்றத்திற்கும் இடையில் சிக்கி அல்லல்படும் பல பெண்களின், மனிதர்களின் கதைகளை தமிழில் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- மௌனப்போராட்டம், சீர்காழி உ. செல்வராஜு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ. அறத்தையும் வாழ்வியல் தர்மத்தையும் எடுத்துரைக்கும் ஆக்கங்கள், பாக்கள் வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

கனவுப்பட்டறை

கனவுப்பட்டறை, மதி, அகநாழிகை பதிப்பகம், பக். 160, விலை 160ரூ. அரசு பள்ளிகளில் படிக்கும், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளின் மனங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்த சிறுகதைத்தொகுப்பு. முகம் பார்த்து பேச மறுக்கும் மாணவன், உணவுக்கு வழியில்லாத சிறுவன், தற்கொலை எண்ணத்துடன் திரியும் சிறுமி, தாழ்வு மனப்பான்மையை மறைக்க முரடனான வேடமிடுபவன் என்று இந்தக் கதைகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும், நாம் வெவ்வேறு பெயர்களில், தோற்றங்களில் தினம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வளரிளம் பருவத்தில் மாணவர்கள் மீது செலுத்தப்படும் அழுத்தங்கள், வாழ்வின் பிற்பகுதி வரை […]

Read more

மஞ்சள் முத்தம்

மஞ்சள் முத்தம், அ.ரோஸ்லின், அகநாழிகை பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ஒரு அமைதியின் இருப்பைக்கூட அர்த்தப்படுத்தி கவிதையாக்கும் திறன் கவிஞருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. உதாரணமாக, இருளைத் தின்றிருந்த இரவை குத்திக் கிழிக்கும் வன்மம் நம்மையும் புளகாங்கிதமடையச் செய்கிறது. அதில் பிரியங்கள் எப்படி அந்நியப்பட்டுப்போகின்றன என்பதை காட்சிப்படுத்தும் முயற்சி புரிகிறது. ‘சதைகளின் சந்தையில், ஆட்டிறைச்சியைவிட விலை மலிவாகியிருக்கிறது, பெண்களுடையது’ -என்ற சமூகநீதிக்கான சாடல்கள் உக்கிரம் கொள்கின்றன. ஆனால் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கின்றன வாசகனுக்கெழுதப்பட்ட கடிதங்கள் என்ற நிலையிலேயே மொத்த கவிதைகளும் வார்த்தைகளால் அடுக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றன. […]

Read more

முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. அழகாக மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 13 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் இரு பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகத் தரமானவை. முதலாவதாக, மலையாள எழுத்தாளர் சீதா இரண்யனின், திருக்கச்சூர் எக்ஸ்பிரஸில் இடாலோ கால்வினோ. வேலையில்லாத, மணமாகாத, கனவுலகவாசி பேருந்தில் செல்லும்போது, அவன் அருகே அமரும் இளம் பெண் அவன் மீது தூங்கி விழுவதை அவன் உடன்பாடாகக் கருதி எல்லை மீறுவதும், தப்பியோடுவதும் கதை. மிகை இல்லாமல், […]

Read more

ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

ஏன் என்னைக் கொல்கிறீர்கள், க. இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 72, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-9.html கவிஞர் க. இராமசாமி இணையத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ஏன் என்னை கொல்கிறீர்கள்?. நவீன வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றிக்கொண்டே உள்ளது. குறிப்பாக கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இப்படி நகரங்களின் இடுக்குகளில் வாழ நேர்ந்துவிட்ட மனிதர்களின் கனவுகள், ஆசைகள், தனிமையின் துயரங்கள், பால்ய கால நினைவுகள், பொய்யான சுகங்கள், காணாமல் போன முரட்டுத்தனமான அன்புகள், அன்பற்றவர்களின் துரோகங்கள், […]

Read more

சக்கர வியூகம்

சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி […]

Read more
1 2