ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி, அல்லூர் வெங்கட்டராமய்யர், ஆனந்த நிலையம், பக். 165, விலை 200ரூ. சோதிடத்தில் தேர்ந்த ஆசிரியர் காஞ்சி மடத்தின் பெருமைகளை நுாலாக தொகுத்திருக்கிறார். காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற இவர் அம்மடத்தின் பரமபக்தன் என்பதில் பெருமை கொண்டவர். தொண்டைநாட்டின் புகழ்பெற்ற காஞ்சி, இந்திய திருநாட்டின் தெய்வீக நகரங்கள் ஏழினுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கு ஆதிசங்கர மகான் வந்தார் என்பதும் வரலாறு. ஆனால் அவர், ‘சனாதன மதம் ’என்ற தத்துவத்தை தன் அத்வைத கோட்பாடுகளால் நிறைவேற்றிய தெய்வீக […]

Read more

சங்கு தியானம்

சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ. சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.   —- சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ. சர்க்கரை நோயாளிகள் […]

Read more

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 130ரூ. மதங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற வேதப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமையுள்ள வாக்கியங்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறது இந்நூல். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றின் ரகசியத்தை உலகில் இதுவரை எந்த நூலாசிரியரும் கண்டுபிடித்து எழுதவில்லை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த ரகசியத்தை முதன் முறையாக இந்நூலில் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் நூலாசிரியர் எம்.ஜி.ஆரோக்கியராஜன். இறைவன் பெயரில் பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த மதப்பிரிவுகளில் மனிதர்கள் மனக்கசப்புடன் […]

Read more

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ. ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —- அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ. பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, சென்னை, பக். 128, விலை 100ரூ. படைப்பின் அகத்தேடல் அன்பாக இருக்கட்டும், படைப்பின் அடிநாதம் அறமாக இருக்கட்டும், படைப்பின் நோக்கம் எல்லைகள் கடந்த மனித நேயமாக இருக்கட்டும் என தனது முகவுரையில் தெளிவுபடுத்திவிடுகிறார் விஸ்வபாரதி. இத்தொகுப்பில் மிக அழகான கதை என்றும், வடிவ அளவிலும் நிறைவான கதை என்றும் பூவரசு கதையைச் சொல்லலாம். கிராமத்தின் நம்பிக்கைகள் சார்ந்த சங்கிலிசி சாமி கதை நிறைவாக உள்ளது. இதேபோல பல கதைகளிலும் சுற்றுச் சூழல் பிரச்னை, சரிந்துபோன சமூக மதிப்பீடுகள் […]

Read more

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ. நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி, எல். நடராஜன், தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-1.html இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அது விவசாயப் புரட்சிகளின் நாடு என்பதும், அதனால்தான் காந்தி ஒரு இந்திய விவசாயியின் புறத்தோற்றத்தைப் பூண்டு இந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டி வந்தது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் தங்கள் […]

Read more