தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள்

தித்திக்கும் தேனினும் தெவிட்டாத திருக்கோயில்கள், ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், (பாகம் 1) பக். 152, விலை 125ரூ, (பாகம் 2) பக். 152, விலை 125ரூ. குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம். ராஜகோபாலன் அந்த இதழில் பல்வேறு திருத்தலங்கள் குறித்து எழுதிய தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில் 18 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 23 கட்டுரைகளும் உள்ளன. பலருக்கும் தெரியாத அபூர்வ திருத்தலங்கள் குறித்தும், ஏற்கெனவே தெரிந்த கோயில்கள் குறித்த தெரியாத பல தகவல்களையும் தனக்கே உரிய […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, வழக்கறிஞர் ந. இராஜா செந்தூர் பாண்டியன், குமுதம் பு(து)த்தகம், பக். 296, விலை 350ரூ. நீதி இலக்கியத்துக்கு ராஜபாட்டை! ‘இந்திய அரசியலமைப்பு சட்டம்’ எனப்படும், நமது நாட்டின் அதிகாரப்பூர்வமான சட்ட வேதத்தின் சாரமாக, சமீபகால தமிழ் வரலாற்றில் கிடைக்காத பொக்கிஷமாக அமைந்திருக்கிறது வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் எழுதிய, ‘வாதி, பிரதிவாதி, நீதி!’ நூல். ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் தொடராக வெளிவந்து, தற்போது சில நாட்களுக்கு முன் நூல் வடிவம் பெற்றது. சமீபத்திய சென்னை புத்தக கண்காட்சியில், அதிக பிரதிகள் […]

Read more

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி

திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]

Read more

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்? டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.     […]

Read more

முதல் மனித வெடிகுண்டு

முதல் மனித வெடிகுண்டு, பி. சந்திரசேகரன், குமுதம் பு(து)த்தகம், விலை 580ரூ. மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தியை ஒரு பெண் கொலை செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது தொடர்பான வழக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு அதிக பரபரப்புக்குள்ளான வழக்காகும். அப்படிப்பட்ட வழக்கில், பிரபல தடவியல் நிபுணரான பி. சந்திரசேகரன், அறிவியல் ரீதியாக, தடயவியல் முறைப்படி துப்பு துலக்கி உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதை சுற்றிப் பின்னப்பட்ட […]

Read more

என்றென்றும் விஜய்

என்றென்றும் விஜய், சபீதா ஜோசப், குமுதம் பு(து)த்தகம், பக். 112, விலை 110ரூ. நடிகர் விஜய் தான் கடந்து வந்த பாதையை, தான் அனுபவித்த சிக்கல்களை அதிலிருந்து விடுபட அவர் மேற்கொண்ட கடின உழைப்பை, திறந்த மனதோடு இந்நூலில் சொல்லிச் செல்கிறார். குறிப்பிட்ட துறையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற தீராவேட்கை கொண்ட எல்லோருக்குமே இந்தப் புத்தகம் பிடிக்கும். அதிலும் விஜயின் தீவிரமான ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். குமுதத்தில் தொடராக வந்தபோது பல லட்சம் வாசகர்களால் பாராட்டப்பட்டது. அதை தொகுத்து குமுதம் […]

Read more

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/4/16.   —- முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ. பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் […]

Read more

இதயமே இதயமே

இதயமே இதயமே, டாக்டர் எஸ். தணிகாசலம், தொகுப்பு: அகில் அரவிந்தன், குமுதம் பு(து)த்தகம், பக். 64, விலை 70ரூ. பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இதயத்திற்கு நேர்கின்ற சிக்கலைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் எளிய முறையில் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- திருக்குறள்: தமிழர்களின் அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், பக். 280, விலை 175ரூ. திருக்குறளின் தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம், தமிழ் தெரிந்த பிறமொழியினரும் திருக்குறளை எளிதில் அறிந்துகொள்ள இந்த உரை உதவும். நன்றி: […]

Read more

தீர்க்க சுமங்கலி பவ!

தீர்க்க சுமங்கலி பவ!, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புது(த்)தகம், பக். 160, விலை 150ரூ. பெண்களுக்கும் அம்மன்களுக்கும் உள்ள நெருக்கத்தை பக்தி என்ற ரீதியில் மட்டும் காட்டாமல், மகளுக்கும் தாய்க்குமான பாசம் என்ற ரீதியிலும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன். பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோய்களில் இருந்து விடுதலை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை அள்ளித்தரும் தெய்வங்களைப் பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் பக்திமணம் கமழ, குமுதத்தில் வாரந்தோறும் எழுதிவந்தது, இப்போது நூலாக வந்துள்ளது. தம்பதியர் […]

Read more

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள், எஸ். அன்வர், குமுதம் புது(த்)தகம், பக். 151, விலை 150ரூ. உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பல உயர்ந்த பதவிகளில் உலகம் முழுக்க கோலோச்சியவர்கள் தமிழர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூல். கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 11 ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்திறன், அவர்களுக்குப் பின்னிருந்த உந்துசக்திகளை தொகுத்து இந்த அரிய நூலை உருவாக்கித்தந்துள்ளார் அன்வர். உலக அரங்கில் தமிழர்களை தலை நிமிரவைத்த தமிழர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவு. -இரா. மணிகண்டன். நன்றி: […]

Read more
1 2 3 7