கோவை ஞானியின் திறனாய்வு நெறி

கோவை ஞானியின் திறனாய்வு நெறி (வாசிப்பும் மதிப்பீடும்),  தொகுப்பாசிரியர்கள்: க.ஜவகர், கு.முத்துக்குமார், சோ.பிலிப்சுதாகர், புதுப்புனல், பக். 160, விலை ரூ.200 கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த தனது தனித்தன்மையான பார்வைகளை முன் வைக்கும் கோவை ஞானியின் நாவல், கவிதை, மெய்யியல் தொடர்பான கருத்துகளை விரிவாக எடுத்துக் கூறி அவற்றைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவிதமாக எழுதப்பட்ட 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. இலக்கியம், கோட்பாட்டு விவாதங்கள் மனித விடுதலையை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே ஞானியின் இலக்கியத் திறனாய்வு நெறியாகும். அவரிடம் மார்க்சியம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக, […]

Read more

ஞானி வாசகம் நானூறு

ஞானி வாசகம் நானூறு, தொகுப்பாசிரியர்: ஜே.மஞ்சுளா தேவி, புதுப்புனல், பக்.440, விலைரூ.390. மார்க்சியம், தமிழ் இலக்கியம் , அரசியல், ஆன்மிகம், வரலாறு என பலதுறை அறிவுமிக்க கோவை ஞானி எழுதிய பல நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துகளை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்து எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மரபுவழியிலான அல்லது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளுடன் ஞானி எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. […]

Read more

மருதத்திணை

மருதத்திணை, மீனா சுந்தர், புதுப்புனல், பக். 100, விலை85ரூ. ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், (புதுப்புனலிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 128, விலை 100ரூ. புதுப்புனல் இதழில் நூலாசிரியர் கோவை ஞானி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியைக் கொண்டுதான் மாபெரும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் ஒரு பொய்க் கனவு. அணுசக்தி நிலையங்கள் என்பவை இறுதியில் அணுகுண்டு உற்பத்திக்கான யுரேனியத்தைக் கழிவுப் பொருளெனக் கடைந்து எடுப்பதற்குத்தான். மலைப் பகுதிகளில், காடுகளில் நிலத்துக்கு அடியில் […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ. கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், […]

Read more

வேட்டைக்கத்தி

வேட்டைக்கத்தி, ஹாருகி முரகாமி, தமிழில்-ச.ஆறுமுகம், ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை, பக். 96, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-9.html ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் வேட்டைக் கத்தி இருபதாவது பிறந்தநாளில் அவள், அமெரிக்க எழுத்தாளர் மெய்லி மெலாயின் பதிலித் திருமணம், இங்கிலாந்து அறிவியல் புனைகதை எழுத்தாளர் மோனிகா ஹ்யூக்ஸின் வணக்கம் நிலவே, போய் வருகிறேன் ஆகிய நான்கு கதைகளின் தொகுப்பு இந்நூல். முரகாமியின் கதைகளில் பாத்திரங்களைப் புதிரான மையமாக்கி நுட்பமான விஷயங்களை […]

Read more

தமிழ்நேயம்

தமிழ்நேயம், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 256, விலை 200ரூ. கோவை ஞானி தாம் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் தமிழர் தொடர்பான அனைத்துநிகழ்வுகளையும் புதிய கண்ணோட்டத்தில் கண்டித்தும், பாராட்டியும் பதிவு  செய்துவந்தார். அரசியல் லாபத்துக்காக நிகழ்ந்த துரோகங்கள், அணுமின் திட்டத்தின் மீது அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கை மறுக்கப்பட்டது, நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல்வாதிகளின் துடிப்பு என்று உலக நடப்புகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். அதன் தொகுப்பே இந்த நூல். […]

Read more

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more