இராமாயணத் துமணிகள்

இராமாயணத் துமணிகள், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 1032, விலை 495ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-7.html இந்த நூலில் வால்மீகி ராமாயணத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். ராமாயண காவியத்தில் சுடர்விடும் தூமணிகளான ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், ராவணன், கும்பகர்ணன், தசரதன், கைகேயி, பரதன், குகன் சுக்ரீவன், விபீஷணன் என ராமாயண காவியத்தின் மிக முக்கியமான 12 கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அந்தந்தப் பாத்திரங்களின் வழியே ராமாயணத்தை அணுகியுள்ளார். ஒவ்வொரு […]

Read more

குத்தகை ஒப்பந்தம் 999

குத்தகை ஒப்பந்தம் 999, ஜெ. ஜாக்குலின் மேரிராஜ், ஆதாம் ஏவாள் பதிப்பகம், நாகர்கோவில் 1, விலை 100ரூ. அணை எழுந்ததும், மடிந்து வாடிய மனித சமூகமும் எழுந்தது என்பதற்கு ஏற்ப உருவான முல்லைப் பெரியாறு அணையை பலவீனமாக உள்ளது என கூறி அதை உடைத்து புதிய அணை கட்டும் கருத்தை கேரள மக்கள் மனதில் ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சூழ்ச்சிகள் மற்றும் காரணிகளை ஆதாரபூர்வமாக விளக்கி கூறும் நூல். அணையை கட்டுவதற்கு பொன்னிகுயிக் மேற்கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன.   —- […]

Read more

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள், கனினிகா மிஸ்ரா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 150ரூ. இன்சூரன்ஸ் துறையில் நுழைந்து கோடீஸ்வரர்களான 9 இந்தியர்கள், அவர்களுடைய தொழில் மீது கொண்ட ஆர்வத்தால், அடிமட்டத்திலிருந்து தொடங்கி வியாபாரத்தை மிகக்குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மாற்றினார்கள். அவர்களின் அனுபவம் நூலாக எழுதப்பட்டுள்ளது. நேர்மை, கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகிய மூனறும் வெற்றிக்கான மந்திரமாகும். அத்துடன் குரு மந்திரமும் தொழில் வெற்றிக்கு முக்கியமானதாகும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இன்சூரன்ஸ் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு […]

Read more

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 838, விலை 450ரூ. ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும் என்ற இந்நூல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, நல்ல தொகுப்பு நூலாகவும் திகழ்கிறது. ஆழ்வார்கள் பரம்பொருள் மேல் பக்தியும் நம் போன்ற மானிடர்கள் மீது கருணையும் கொண்டு பரத்துவத்தைப் பல்வேறு பாடல்களால் உணர்த்தி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று பாடி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களையும் பக்தி நூல்களையும் மொழி வேறுபாடு இல்லாது மலையாளம், […]

Read more

ஓ ஹோ பக்கங்கள்

ஓ ஹோ பக்கங்கள், ஞாநி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். பக். 248, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-3.html எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துக்களைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ஓ பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில் உள்ள கட்டுரைகள் மனிதர் கழிவை […]

Read more

சண்முகக் கவசம் தீபாவளி மலர்

சண்முகக் கவசம் தீபாவளி மலர், பக். 104, விலை 50ரூ. மகாகவி பாரதியின் கற்பக விநாயகர் துதியுடன் மலர் மலர்ந்திருக்கிறது. திருமுருக கிருபானந்தவாரியாரின் தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி? என்னும் தேன் விருந்து உண்மையிலேயே நாவையும் மனதையும் விட்டு அகலாத தமிழ் விருந்து. நரகாசுரர்கள் மறுபடியும் வருகிறார்கள் என்கிற தவத்திரு சுவாமி ஒங்காரநந்தாவின் கட்டுரை, சுவாமிமலை நவரத்தின மலை, ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் கவி உலகில் கம்பன் இடம், வெ. இறையன்பின் எது ஆன்மிகம்?, பாம்பன் சுவாமிகள் பெற்ற ஞானதேகம், கண்ணங்குடியில் […]

Read more

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர்

ஸ்ரீ சாயிமார்க்கம் தீபாவளி மலர், பக். 136, விலை 100ரூ. சாயி மார்க்கம் தீபாவளி மலரில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடைய பேட்டி, இலங்கை முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை நடத்திய அஸ்வமேத யாகம், அஷ்டபதி தந்த ஜெயதேவரின் வாழ்வில் ஸ்ரீமத் நாராயனின் அருளால் நிகழ்ந்த அற்புதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கவியோகி சுத்தானந்த பாரதியாரைப் பற்றிய கட்டுரையில் பல அரிய தகவல்கள் உள்ளன. ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்தி, காசி, திரிவேணி சங்கமம் காண விரும்புவோருக்கு பனிமலையும் கங்கை நதியும் கட்டுரை ஒரு வழிகாட்டி ஆகும். சைவத் […]

Read more

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், டாக்டர் உ.வே. சாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரை சாலை, பெசன்ட் நகர், சென்னை 600090, பக். 744, விலை 400ரூ. ஊர் தோறும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒப்புநோக்கித் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகிற்கு தந்தவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர். தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றும் அளவிற்குச் சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான காப்பியங்களையும் பதிப்பித்தார். அந்த டாக்டர் உ.வே. சாமிநாதையருக்கு ஆசிரியர் என்னும் சிறப்பைப் […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ். காஞ்சி மாமுனிவர் வாழ்வை, நடந்த சம்பவங்களை, அதில் வந்த நிஜ பாத்திரங்களை நாடக வடிவில் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். இவைகளைப் படித்தால், எந்த அளவு அவர் பணத்தின் மீது சிறிதும் ஆசையின்றி, சிறந்த ஏழை பக்தர்களுக்கு உதவ காரணமாக இருந்தார் என்பதும், அவர் நிகழ்த்திய அருள் சம்பவங்களும் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. காஞ்சி முனிவரை நேசிக்கும் அனைவரும் இந்த நூலை விரும்பி ரசிப்பர்.   —-   […]

Read more

இசைஞானி இளையராஜாவின் பால் நிலாப்பாதை

பால் நிலாப்பாதை, இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், பக். 208, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-373-6.html திரையுலகில் இசைஞானியின் வெற்றிகளும், சாதனைகளும் அற்புதமானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவருடைய வாழ்க்கைப் பயணம், கிராமத்துப் புழுதி மண்ணில் துவங்கி, உலகெங்கிலும் சுற்றி வருகிறது. அவரது இசைப் புகழோ ககனப் பெருவெளியெங்கும் காற்றுப் போல பரவி, வியாபித்திருக்கிறது. வாழக்கை, தொழில் சார்ந்த அனுபவங்களைத் தாண்டி அவருடைய ஆன்மிக அனுபவங்களும், நம்மை அவரருகே கொண்டு வந்து நிறுத்தி, அவரை அண்ணாந்து பார்க்க […]

Read more
1 4 5 6 7 8 10