வேடிக்கை வினோதக் கதைகள்

வேடிக்கை வினோதக் கதைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சன்னை 17, விலை 350ரூ. பெரியவர்களுக்கு கவுசிகள் என்ற பெயரிலும், சிறுவர்களுக்கு வாண்டு மாமா என்ற பெயரிலும் கதை எழுதும் வி.கே. மூர்த்தி,இப்போது சிறுவர்களுக்காக பெரிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜா ராணி கதைகள், மந்திராவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள் இப்படி பலதரப்பட்ட கதைகள் இதில் உள்ளன. மொத்தம் 50க்கும் மேற்பட்ட கதைகள், சுவையும், விறுவிறுப்பும் மிக்க கதைகள். சிறுவர் சிறுமிகள் கையில் எடுத்தால், படித்து […]

Read more

எங்கே அந்த சொர்க்கம்

எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு […]

Read more

வெள்ளையானை

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து, 1, சிரோன் காட்டேஜ், ஜோன்ஸ்புரம், பசுமலை, மதுரை, விலை 400ரூ. இந்தியச் சமூகத்தின் அறம் எது? வரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளையானை நிரூபிக்கிறது. தமிழக இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களை தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி […]

Read more

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், முல்லை பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-8.html மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 10 காதைகளையும், பற்பல வரிகளையும் இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும் 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக்காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. காப்பியத்தின் சுவை மிளிரும் பகுதிகளான கானல் வரி, ஆய்ச்சிக்குரவை இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. வைதிக, சைவ, வைணவக் கருத்துகளும் அதற்கேற்பப் […]

Read more

வானொலி வளர்த்த தமிழ்

வானொலி வளர்த்த தமிழ், முனைவர் இளசை சுந்தரம், மீனாட்சி புத்தகம் நிலையம், பக். 150, விலை 260ரூ. காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது. தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, […]

Read more

அழகைத்தேடி

அழகைத்தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணை போகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா. பலான பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் என்றாலும், […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ. சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.   —- […]

Read more

திருவள்ளுவர் திருவுள்ளம்

திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144. திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், […]

Read more

இல்லந்தோறும் இயற்கை உணவுகள்

இல்லந்தோறும் இயற்கை உணவுகள், டாக்டர் மதுரம் சேகர், நர்மதா பதிப்பகம், பக். 336, விலை ரூ. 170. நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்றனர் நம் முன்னோர். நம் உடலுக்கு ஏற்படும் ஊறுகளிலிருந்து விடுபட பலவித இயற்கை உணவுகளை, இந்நூல் தெரிவிக்கிறது. உணவே மருந்து என்பதை இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இயற்கை உணவுகளின் வகைகளையும், சுவையூட்டும் சமைத்த உணவுகள் குறித்தும் இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. நலமுடன் இருக்க விரும்புவோர் படித்துப் பயன் அடையலாம். -டாக்டர் கலியன் சம்பத்து.     —-   […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-7.html சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்ட நூல் ஒன்றை எழுத்தாளர் தமிழ்மகன் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு சிறுகதை வீதம் 13 சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. மகாகவி பாரதியார், வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாத உள்பட 13 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தேர்வு செய்யப்பட்டவை சிறந்த கதைகள்தான். ஆயினும், பத்தாண்டுக்கு […]

Read more
1 2 3 4 5 6 10