தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 350ரூ. இது புதுமையான முறையில் எழுதப்பட்ட பயனுள்ள அகராதி. முன் பகுதியில் இலக்கிய நூல்களில் காணப்படும் கடினமான சொற்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களை பிறர் உதவியின்றி தாங்களே கற்க உதவும். பின்னர் இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்களும், அதன்பின் தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி, தமிழ் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மிகவும் பயன்படும். தமிழறிஞர் கண்ணப்ப முதலியார் எழுதிய […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more

காந்தி கணக்கு

காந்தி கணக்கு, அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம் பாளையம், திருப்பூர், பக். 120, விலை 100ரூ. வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன்பிள்ளை என்பவர் ரூ. 5000த்தை, வ.உ.சியிடம் ஒப்படைத்துவிடுமாறு, காந்தியடிகளிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பணம் 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் வேதியன்பிள்ளை இந்தியாவிற்கு வந்து வ.உ.சி.யையும் அழைத்துக் கொண்டு போய் காந்தியை நேரடியாகச் சந்தித்து அப்பணத்தைப் பெற்றுத் தந்ததாக இந்நூலாசிரியர் கூறுகிறார். இது இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வு என்று […]

Read more

மண்ணில் தெரியுது வானம்

மண்ணில் தெரியுது வானம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், சுகான்ஸ் அபாரட்மென்ட்ஸ், புதிய எண்13, சிவபிரகாசம் தெரு, தி. நகர், சென்னை 600017, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html சமூக மற்றும் ஆன்மிக நாவல்கள் என்று பல படைப்புகளைப் படைத்திருக்கும் இந்நூலாசிரியர், தனது கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களை, உணர்ச்சிமிக்க விவாத நடை மூலம் உரித்துக் காட்டும் பாணி, இவரது எழுத்துக்கு உண்டு. ஒரு நாவலுக்குரிய தலைப்பாக இந்நூல் இருந்தபோதும், மனிதன் மனப்போராட்டங்கள் இன்றி அமைதியாக […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 4, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html வரலாற்றின் முக்கியமான நாட்கள் விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவதுபோல இருக்குமோ என்று தோன்றுகிறது. இரா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அரசூர் வம்சம் நாவலின் தொடர்ச்சி இது. காசர்கோட்டை […]

Read more

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. […]

Read more

ஏன் எங்கே எப்படி?

ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது […]

Read more

கடாஃபி வாழ்வும் வீழ்வும்

கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ. 40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.   —-   ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ. […]

Read more

உணர்வு பொருளாதல்

உணர்வு பொருளாதல், ஜே.பி.எம். பப்ளிகேஷன்ஸ், 2, எக்ஸ்சர்வீஸ்மென் என்க்ளேவ், அகரம் ரோடு, சேலையூர், சென்னை 73, விலை 230ரூ. ஆன்மிக தகவல்கள் மற்றும் உலகநடப்புகளை 16 தலைப்புகளில் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ஜே. பன்னீர்செல்வம் தெளிந்த நீரோடை போன்ற நடையில் அரிய தகவல்களை எழுதியிருக்கிறார். சமூகம் அறிய வேண்டிய ஆன்மீகத்தின் முகத்தை அறிவியல் சாயலில் இந்தப் புத்தகம் காட்டுகிறது. பண்டைக்கால இந்திய தத்துவங்களும், அண்மைக்கால இளம் அறிவியல் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகிறது என்பதை நூலாசிரியர் தெளிவுப்படுத்தி உள்ளார். 317 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் […]

Read more

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை

பயங்கரவாதம் நேற்று, இன்று , நாளை, பி. ராமன், தமிழில்-ஜே.கே. இராஜசேகரன், கிழக்குப் பதிப்பகம், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 424, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html எது பயங்கரவாதம்? யார் பயங்கரவாதிகள்? அவர்களை வழிநடத்தும் சித்தாந்தம் எது?பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுடன், பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் இந்நூல் தேடிச்செல்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை […]

Read more
1 6 7 8 9 10