சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு

சீவக சிந்தாமணி ஓர் கூர்நோக்கு, முனைவர் ம. ராஜாத்தி செல்வக்கனி, கொ. ஹேமா ஜோயல், தமிழ்த்துறை, ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி, பக். 112, விலை 230ரூ. ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர்போலும்.(உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும்தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள். […]

Read more

விஜயபாரதம் தீபாவளி மலர்

விஜயபாரதம் தீபாவளி மலர்,  (2 புத்தகங்கள்) பக். 658, விலை 100ரூ. தேசியமும் தெய்வீகமும் கமழும் வழக்கமான சிறப்பு அம்சங்களுடன் வந்துள்ளது இந்த மலர். வருடம் முழுதும் அமர்ந்து படிக்கத் தக்கதாக அதிகமான கட்டுரைகள். சிருங்கேரி சுவாமிகளின் அருளுரையுடன் மலரில் ஆன்மிகம் முகிழ்க்கிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்ற சுவாம் விமூர்த்தானந்தரின் கட்டுரை இளைஞர்களுக்கு நன்னெறி புகட்டுவது. பாங்காக் மகாமாரியம்மன் கோவில் குறித்த புஷ்பா தங்கதுரை கட்டுரை நம் பாரம்பரியம் வெளிநாட்டில் பரவியிருக்கும் பாங்கைச் சொல்கிறது. மகாத்மா காந்தி நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு என்ற […]

Read more

கலைமகள் தீபாவளி மலர்

கலைமகள் தீபாவளி மலர், பக். 332, விலை 150ரூ. கலைமகள் இதழின் 80வது வருடத்தில் பூத்த மலர் இது. காஞ்சி மகா பெரியவரின் ஸ்ரீசக்ரம் கட்டுரையில் ஸ்ரீசக்ரத்தின் சிறப்புகள், நவாவரண பூஜை ஆயிவற்றை சுவாமிகளின் விளக்கத்தில் படிக்கும்போது சிலிர்ப்பு. அப்துல் கலாம் பசுமை சக்தி திட்டம் கட்டுரையில் மரம் வளம் பெற்ற பசுமை வீடுகள் பற்றிச் சொல்கிறார். கடவுள் அணுவும் சிவனின் நடனமும் என்ற எஸ். குருமூர்த்தியின் கட்டுரை, சாலை சங்கம் சபை என்ற வள்ளலார் குறித்த நா. மகாலிங்கம் கட்டுரை, பி.என். பரசுராமனின் […]

Read more

ஓம்சக்தி தீபாவளி மலர்

ஓம் சக்தி தீபாவளி மலர், பக். 418, விலை 80ரூ. மகான்களின் பொன்மொழிகளுடன் துவங்கும் மலரில் தீபாவளிக்கேயுரிய காசி அன்னபூர்ணியின் வண்ணப்படம் அழகாக உள்ளது. கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர்களின் கவிதைகளும் அவற்றுக்கான வண்ணப் படங்களும் அருமை. பிரபல எழுத்தாளர்களின் 14 கதைகள் உள்ளன. வயதானவர்கள் என்றால் சுவாரஸ்யம் இல்லாமலா? என தமது கதைகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள் கி.ரா.வும், பாக்கியம் ராமசாமியும். கொங்கணியில் பிரகாஷ் பர்யேங்கார் எழுதிய குரங்குக் குறவன் கதை சௌரியின் மொழியாக்கத்தில் சிறப்பாகத் திகழ்கிறது. நாடாளுமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-5.html தமிழ் மன்னர்களில் பல சிறப்புகளைப் பெற்றவர் அருண்மொழி வர்மர் என்ற இயற்பெயர் கொண்ட ராஜாஜி சோழன். நிர்வாகத்தில் அறிவாற்றலைப் புகுத்தி, வீரத்தை வெற்றிகளாக்கி, உலகம் முழுவதும் சோழரின் புலிக்கொடியைப் பறக்கவிட்டு, இன்றும் விஞ்ஞானிகளையும், கட்டிடக்கலை நிபுணர்களையும் வியக்கச் செய்து கொண்டிருக்கும் தஞ்சை பெரிய  கோவிலின் பிரம்மாண்ட […]

Read more

கல்கி தீபாவளி மலர்

கல்கி தீபாவளி மலர், பக். 276, விலை 120ரூ. காஞ்சி மகா பெரியவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை புருஷார்த்தங்களைப் பற்றி விளக்கி அருளாசியும் வழங்கியுள்ளார். அட்டைப் படத்துக்குத் தக்க கல்யாணபுரம் ஆர். ஆராவமுதனின் சொல்லின் செல்வன் சிறப்புக் கட்டுரையும், அக்கட்டுரைக்கான அமர்க்களமான ஓவியர் வேதாவின் கைவண்ணமும் மலருக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஓவியர் கே.என். ராமச்சந்திரன், ம.செ. ஆகியோரின் ஓவியங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பேசிவிடுகின்றன. புதுகையிலிருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள திருமயம் கோட்டைக்கே நம்மை அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் […]

Read more

சேரர் கோட்டை பாகம் 1-2

சேரர் கோட்டை பாகம் 1-2, கோகுல் சேஷாத்ரி, கமலம் புக்ஸ், பாகம் 1, பாகம் 2, பக். 555, பக். 608, விலை 375ரூ, விலை 400ரூ. சோழ நாட்டின் அரியணை ஏறிய நாள் முதல், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை நயவஞ்சக சூழ்ச்சியால் படுகொலை செய்த ரவிதாஸன் கும்பலைப் பழி தீர்க்கத் துடிக்கிறான் ராஜராஜ சோழன். ரவிதாஸன் கும்பலுக்குப் பயிற்சி அளித்துத் திட்டம் தீட்டித் தந்த காந்தளூர்ச் சாலைப் பயிற்சி முகாமைத் தாக்கி, அடியோடு அழித்து அதைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் […]

Read more

மொழிக்கொள்கை

மொழிக்கொள்கை, இராசேந்திர சோழன், மங்கை பதிப்பகம், 700, எம்.ஐ.ஐ. இரண்டாவது தலைமைச் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 180ரூ. மொழி என்று இல்லை, இனம், சாதி, மதம் உள்ளிட்டு சமகம் சார்ந்த எந்த ஒரு சிக்கலுமே தமிழக மக்களுக்கு அறிவுபூர்வமாக ஊட்டப்படாமல், அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் எல்லாம் தேர்தல், அரசியல்வாதிகளின் தன்னல நோக்கத்துக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டத்திலேயே இவை வைக்கப்பட்டு இருப்பதே எல்லாவற்றுக்கும்  காரணம் என்ற முன்னுரையுடன் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதி இருக்கும் […]

Read more

வேதாளம் கேட்காத கேள்விகள்

வேதாளம் கேட்காத கேள்விகள், சாகித்ய அகாதெமி, சென்னை, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 85ரூ. தேர்வறையில் மாணவனின் மனநிலையின் வழியே நாட்டு நடப்புகளை விவரிக்கும் புதுமையான நூல் வேதாளம் கேட்காத கேள்விகள். எழுத்தாளர் சுனில் மலையாளத்தில் எழுதிய விக்ரமாதித்யம் என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். முனைவர் த.விஷ்ணுகுமாரன், நூலாசிரியரின் நோக்கம் சிதையாமல் அழகாக மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.   —-   அறியப்படாத தமிழ் உலகம், பா. இளமாறன் சிவக்குமார் கோ. கணேஷ் பல்வேறு […]

Read more

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this book online –www.nhm.in/shop/100-00-0001-498-6.html சர்வாதிகாரத்தின் மறுபெயர் அடால்ப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், 2ம் உலகப்போருக்கே வித்திட்டதுடன் கோடிக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கினார். அந்த மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடூர மறுபக்கம் இந்த புத்தகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் பட்ட துன்பங்கள், அவரின் உத்தரவுப்படி ஜெர்மன் அதிகாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்கள், ஜெர்மன் டாக்டர்கள் தங்கள் ஆய்வுக்கூடங்களில் […]

Read more
1 5 6 7 8 9 10