நல்ல சோறு

நல்ல சோறு, ராஜமுருகன், விகடன் பிரசுரம், பக். 176,விலை 120ரூ. கேழ்வரகு அல்வா, குதிரை வாலி கீரை ஃப்ரைடு ரைஸ், தினை பால் கொழுக்கட்டை, கேழ்வரகு லட்டு, சோள கார பணியாரம், கம்பு காரப் புட்டு, சாமை ஆப்பம், சாமை கொழுக்கட்டை, பனிவரகு பால் பணியாரம், தினை பர்ஃபி, கொள்ளு லட்டு… இவ்வாறு சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பல உணவுப் பொருட்கள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றின் செய்முறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உடனே இது சமையற் குறிப்பு நூல் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். அதற்கும் மேலாக, […]

Read more

மறைந்தும் மறையாதவர்கள்

மறைந்தும் மறையாதவர்கள், ஏ.ஆர். பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள், மேல்நாட்டு சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். நேதாஜி, இந்திரா காந்தி, கப்பலோட்டிய தமிழன், வ.உ. சிதம்பரனார், மகாகவி பாரதியார், மறைமலையடிகள், பேரறிஞர் அண்ணா, கிருபானந்தவாரியார், எம்.கே. தியாகராஜாகவதர், மு. வரதராசனார் உள்ளிட்ட 49 பேர்களின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. அதிகமாக வளர்த்தாமலும், மிகவும் சுருக்கி விடாமலும் மிகத் திறமையாக வரலாறுகளை சுவைபட எழுதியுள்ளார் இலங்கைத் தமிழரான ஏ.ஆர். பாலஸ்ரீதரன். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி, எம்.எஸ்.எம்.அனஸ், மாற்றுப் பிரதிகள், பக். 184, விலை 120ரூ. ஜமாலுத்தீன் ஆப்கானி வடமேற்கு ஈரானில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சி நடந்து தொழில்கள் வளர்ந்த பின், உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முனைந்தன. அவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளை எதிர்த்தனர். அப்படி எதிர்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் எதிர்த்தனர். இது இஸ்லாமிய சமயத்திலிருந்த பழமைவாதிகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது. […]

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. மரபுக் கவிதை எழுதுவது அருகிப் போன இக்காலத்தில், மரபுக் கவிதையில் ஒரு காவியமே படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது உண்மை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, உடமைகள் இழப்பு இவற்றை மையப் பொருளாக வைத்து இந்தக் காவியம் படைக்கப்பட்டிருக்கிறது. இன்று நமது […]

Read more

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ்.பி. எழிலழகன், சுரா பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, வ.உ.சி., பாரதியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை, அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களுடைய சாதனைகள், அவர்களுடைய நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபங்கள், நினைவிடங்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ள சிறந்த நூல். இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டும் இந்நூல் குறிப்பிடவில்லை. கொல்லிமலையில் புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் ஆலயத்தை நிறுவிய மன்னனான வல்வில் […]

Read more

நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம், பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதைக்கான ஆழத்தைத் தேடிப் பயணிக்கிறது. இடையிடையே வாழ்க்கைக்கான ஆதாரங்களைக் கண்ட பெருமிதங்களையும் தொட்டுச் செல்கிறது. சில சமயம் கவிஞருக்கு அது ஒரு ஞாபக மீட்டலாக மீண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அதுவே வாசிப்பினரின் அடையாளத் தேடலாகவும் கடந்து போகிறது. ஒன்றமில்லாததில் எல்லாம் இருந்தது போன்ற வரிகளில் அனுபூதியியலை நோக்கிய பயணம் தெரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2016.

Read more

உழைப்போம் உயர்வோம்

உழைப்போம் உயர்வோம், மெர்வின், குமரன் பதிப்பகம், பக். 208, விலை 80ரூ. உழைப்பின் மேன்மையைச் சொல்லி, அதற்கு பல உதாரணங்கள் தந்ததுடன் அதன் வரலாற்று உண்மைகளை நெஞ்சில் பதியச் செய்துள்ளார் மெர்வின். நாமும் நாடும் முன்னேற்றம் காண உதவும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —– குட்டீஸ் கிச்சன், ஜெயஸ்ரீ சுரேஷ், விகடன் பிரசுரம், விலை 140ரூ. சின்னக் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரிப்பது பற்றி இந்த நூல் விவரிக்கிறது. பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகள். எனவே அனைவருக்கும் பயன்படக்கூடிய […]

Read more

வட்டியை ஒழிப்போம்

வட்டியை ஒழிப்போம், டாக்டர் எம். உமர்சாப்ரா, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பக். 60, விலை 40ரூ. வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது. வாழ்வின் நிம்மதியை அழிக்கக்கூடியது. எனவே வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கி முறை பற்றி சுருக்கமாக அதேசமயம் நிறைவாக விளக்கும் நூல். நன்றி: குமுதம், 12/10/2016.   —-   காக்க காக்க உடல் நலம் காக்க, வானதி பதிப்பகம், விலை 100ரூ. காய்ச்சல் முதல் இருதய செயலிழப்பு வரை பலவித […]

Read more

தூரமில்லை தொட்டுவிடலாம்

தூரமில்லை தொட்டுவிடலாம், முனைவர் பாபு புருஷோத்தமன், தினத்தந்தி பதிப்பகம், விலை 200ரூ. தினத்தந்தியில் ஞாயிறுதோறும் வெளியாகும் குடும்ப மலரில் முனைவர் பாபு புருஷோத்தமன் எழுதி தொடர்ந்து 54 வாரங்கள் வெளிவந்த “துரமில்லை தொட்டுவிடலாம்” என்ற தன்னம்பிக்கை தொடரின் தொகுப்பே இந்த நூல். குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வாழ்வியல் நெறிமுறைகள் என அனைத்தும் அம்சங்களையும் கொண்டுள்ளது. “புண்படுத்தக்கூடாது பண்படுத்த வேண்டும், “கேலிக்கு வேண்டும் வேலி”, “பண்புகளை வளர்க்கும் பண்டிகைகள்”, “நல்ல பழக்கம் நம்மை உயர்த்தும்”, “இல்வாழ்க்கை இனிக்க”, “முதியவர்கள் அனுபவ […]

Read more

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மன்னை.மு. அம்பிகாபதி (தேர்வு செய்யப்பட்ட உரைகள் பகுதி 1), தொகுப்பாசிரியர் மு.அ. பாரதி, இயல் வெளியீடு, பக். 364, விலை 250ரூ. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 1977 முதல் 1980 வரை மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த மன்னை.மு.அம்பிகாபதி, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்துதல், தனியார் பேருந்துகளை […]

Read more
1 2 3 4 9