தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்,  க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம்,  பக். 461, விலைரூ.290. தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது. இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு […]

Read more

வலவன்

வலவன், சுதாகர் கஸ்தூரி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. ஓட்டுநர்களின் வரலாறு வாடகை கார் ஓட்டுநர்களின் உலகமே தனி. அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளர்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக்கொள்ளும் அலாதியான பண்புள்ளவர்கள். கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியமம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் என்ற ஓட்டுநர். சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறார் பஷீர். வளரிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம். குடும்ப மரபைக் […]

Read more

இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. ஆத்ம சுகத்தை இருந்த இடத்தில் இருந்தபடியே பெறலாம். அதற்குச் சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும். அதேபோல் சில மனப்பக்குவங்களை வளர்த்துக் கொண்டால் போதும். இதைப்பற்றி விரிவாகவும் எளிமையாகவும் கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

மாயமான விமானம் விலகாத மர்மம்

மாயமான விமானம் விலகாத மர்மம்,ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 200ரூ. அண்மையில் காணாமல் போன மலேசிய விமானச் சம்பவம் மிகக் கொடியது. விமானம் கடத்தப்பட்டதா? விபத்துக்குள்ளானதா? என்பதை 20?க்கும் மேற்பட்ட நாடுகள், உயர் தொழில்நுட்பம், உளவுத்துறையினரின் தீவிர முயற்சி ? இவற்றால்கூட கண்டறிய முடியவில்லை. 239 பயணிகளுடன் மாயமான அந்த விமானத்தின் பிளன் ஒளிந்திருக்கும் மர்மம் குறித்து இந்த நூலில் ச.வைரவராஜன் விளக்குகிறார். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 265ரூ. “அபிராமி” என்றால் பேரழகி என்று பொருள். அபிராமியின் அழகை, வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. அபிராமி பற்றிய 101 பாடல்களும், அவற்றின் விளக்கங்களும் கொண்ட நூல் இது. விளக்கங்களை இலக்கியச் சுவையுடன் விரிவாக வி.ஏ.ராமசுப்பிரமணியன் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

தம்மபதம் – புத்தரின் வழி

தம்மபதம் – புத்தரின் வழி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் உலகப்புகழ் பெற்றவர் ஓஷோ. புத்தரைப் பற்றியும், புத்த மதத்தின் சிறப்புகள் பற்றியும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் கொண்டது இந்த நூல். ஓஷோ ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, உணர்ச்சிமயமான தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர் டாக்டர் என். ரமணி. சிந்தனைக்கு விருந்தாகும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

அர்த்தமுள்ள பெயர்கள்

அர்த்தமுள்ள பெயர்கள், பாலா, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 30ரூ. குழந்தைகளுக்கு சூட்டுவதற்காக பயனுள்ள அர்த்தமுள்ள பெயர்களுடன், அவற்றின் விளக்கமும் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள்

ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள், டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. ஜோதிடக் கலை பற்றிய சிறந்த நூல் இது. ஜோதிடம் பற்றிய நுட்பங்களை, தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படியும் சிறந்த முறையில் எழுதியுள்ளார் டாக்டர் கே.என். சரஸ்வதி. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள்

சிந்திக்க வைக்கும் தெனாலிராமன் கதைகள், பக்தவச்சலம் வேணுகோபால், அமராவதி வெளியீடு, விலை 140ரூ. திறமையும், சிந்தித்து செயல்படும் நுண்அறிவும் இருந்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பது தெனாலிராமன் கதைகள் மூலமாக நாம் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம்

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம், பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த பெருமன்றம், விலை 120ரூ. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6 ஆயிரத்து 666 பாடல்களை அருளி உள்ளார். அவை ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முதல் மண்டலத்தில் உள்ள பாடல் உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம். இதனை தத்துவ -அனுபவ மரபில் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனைவரும் படித்து பயன்பெறுவதற்காக நக்கீரன் வழியடிமை புலவர் பி.மா. சோமசுந்தரனார உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more
1 3 4 5 6 7