நாவல்களில் பொருளியல் பார்வை

நாவல்களில் பொருளியல் பார்வை, முனைவர் சி.மாதவன், வெளியீடு பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், விலை 150ரூ. நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு, மிதவை, ஐசக் அருமைராஜன் எழுதிய கீறல்கள், அழுக்குகள், கல்லறைகள், தோப்பில் முகமது மீரான் எழுதிய ஒரு கடலோரக் கிராமத்தின் கதை ஆகிய நாவல்களில் சித்திரிக்கப்படும் சமூக கண்ணோட்டத்துடன் அமையும் பொருளாதாரப் பார்வையை இந்நூல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. ஒவ்வொரு நாவலிலும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுள்ளன? ஏற்றத்தாழ்வுகளுக்கு அந்த நாவல்களில் […]

Read more

தீயில் எரிந்த உண்மைகள்

தீயில் எரிந்த உண்மைகள், கே.எஸ்.சந்திரசேகரன், மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ. முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையில் எழுந்த நாவல் இது. பதவி மோகம் கொண்ட ஒரு செல்வந்தர் தனது 2 பேரன்களில் ஒருவனை தமிழ் நாட்டின் முதல் – அமைச்சராகவும், மற்றொருவனை கர்நாடக முதல் – அமைச்சராகவும் பதவியில் அமர்த்தி மத்திய அரசை கைப்பற்ற எண்ணுகிறார். மிகப்பெரிய சினிமா இயக்குனராக வேண்டும் என்பதற்கா திருமணம் முடிக்காமல் குடும்பத்தை உதறிதள்ளும் சிந்துஜா சினிமாத்துயில் பெண்களின் பங்களிப்பை பெருக்கும் வகையில் பெண்களுக்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதை […]

Read more

கால் பட்டு உடைந்தது வானம்

கால் பட்டு உடைந்தது வானம், எஸ்தர், போதிவனம் பதிப்பகம், விலை 120ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

டைனமைட் ஸ்பெஷல்

டைனமைட் ஸ்பெஷல், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 700ரூ. வீர சாகச அதிரடி கதாநாயகன் டெக்ஸ்வில்லர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதையொட்டி 507 பக்க அளவில் வண்ணப்படங்களுடன் ஒரு கதையும் அதே போல கருப்பு வெள்ளையில் ஒரு மெகா கதையுமாக வெளியாகி உள்ள இந்தப் புத்தகம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புதுவெள்ளம்

புதுவெள்ளம், அகிலன், தாகம் பதிப்பகம், விலை 500ரூ. இந்திய விடுதலையை வெறும் ஆட்சிமாற்றமாகத்தான் பலரும் பார்ப்பது உண்டு. காரணம் இங்குள்ள பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரத்துக்கு பின்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழைகள் பரம ஏழைகளாகவும், செல்வந்தர்கள் பெரும் பணக்காரர்களாகவும்தான் மாறி வருகின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இந்த நூல். 1962ம் ஆண்டில் கல்வி இதழில் தொடர்கதையாக வெளியான இந்த கதை, தற்போது நூலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. 3 பாகமாக எழுதப்பட்டு இருக்கும் இந்த நூலில், நாடு விடுதலைக்குப்பின் இந்திய சமூகத்தில் […]

Read more

கள்ளிவட்டம்

கள்ளிவட்டம், பா.சரவணகுமரன், போதிவனம், விலை 100ரூ. கீழத்தஞ்சை:மண்ணும் மனங்களும் நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள். மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் […]

Read more

விண்ணளந்த கடல் மகன்

விண்ணளந்த கடல் மகன், வெ.அருணா, யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 175ரூ. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர் என பல்வேறு பரிணாமங்களை கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை இந்த புத்தகம் விளக்குகிறது. அப்துல் கலாமின் குடும்பம், பள்ளி பருவம், கல்லூரி வாழ்க்கை, விஞ்ஞானியாகி ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பியது, ஜனாதிபதியாகி மரபுகளை உடைத்தது, இளைஞர்களின் கனவு நாயகனாக வாழ்ந்து, விஞ்ஞானம் மட்டுமின்றி இசைஞானமும் கொண்டிருந்தது, அவருடைய மறைவு […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, பி.ஆர். அம்பேத்கர், தலித் முரசு, விலை 120ரூ. இந்திய சமூகங்களில் புரையோடி கிடக்கும் சாதி எனும் கொடிய நோய்க்கு எதிராக போராடியவர்கள் பலர். அவர்களில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் முக்கியமானவர். நாடு விடுதலைக்கு முன் லாகூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றுக்காக சாதி ஒழிப்பு தொடர்பாக அவர் தயாரித்த உரையின் சாரம்சமே இந்த புத்தகம். சாதியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய தான் காட்டிய வழியிலோ அல்லது தங்கள் சொந்த வழிகளிலோ முயலுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் […]

Read more

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள்

கலை வரலாறு சில புதிய அணுகுமுறைகள், தொகுப்பும் மொழிபெயர்ப்பும் தேன்மொழி, மணற்கேணி பதிப்பகம், விலை 100ரூ. கலைகள் குறித்த உணர்வும் அறிவும் அக்கறையும் இல்லாத சமுதாயம் தன் மனதையும் முகத்தையும் அழித்துக்கொள்கிறது. பண்டைய சமுதாயத்தின் பண்பாட்டு ஆவணங்களான அவை பேணப்படுவதுடன் ஆராயப்படவும் வேண்டும். இன்று தனியாரும் கல்விப்புலங்கள் சார்ந்த பலரும் ஆய்வுகளில் ஈடுபட்டாலும் ஆய்வை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான ஆய்வு அணுகுமுறை சார்ந்த நூல்களும் கோட்பாடு சார்ந்த நூல்களும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. இக்குறை களையப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவாக, கலையியல் […]

Read more

வாழ்க நலமுடன்

வாழ்க நலமுடன், செ.சரவணன், ஜெயலஷ்மி எண்டர்பிரைஸஸ், பக். 160, விலை 130ரூ. இந்நூலாசிரியர் மருத்துவரோ, மருத்துவ ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், உடல் நலம், மனநலம் காக்கும் வழிமுறைகளையும், அதற்கான பயிற்சிகளையும், உணவு முறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். அதற்காக, பல கருத்தரங்குகள், நூல்கள், பத்திரிகைகள், இயற்கை மருத்துவர்கள், இணைய தளங்கள் என்று பலவற்றிலும் தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார். தவிர, படிப்பவர்களுக்கு எளிதில் புரியவும், மனதில் பதியவும் தன் நண்பர்களோடு கலந்துரையாடல் செய்வது போன்று, இந்நூலை இயற்றியுள்ளது புதுமையானது. ஆரோக்கியம் என்றால் என்ன என்பதற்கு முதல் […]

Read more
1 4 5 6 7 8