என்றென்றும் கண்ணதாசன்

என்றென்றும் கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலைரூ.330.   காலத்தால் அழியாத கவித் தென்றல் கண்ணதாசன். இவரின் திரைப் பாடல்கள் கேட்டு மனம் கரையாதவரே இருக்கமாட்டார்கள். அவர் திரைக்கதை சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அப்பாடல்கள் எழுந்த வீட்டுச் சூழலை வெகு அற்புதமாய் அவர் மகன் எழுதியுள்ளார். கண்ணதாசனின் 13 பிள்ளைகளில், இந்த நுாலாசிரியர் அண்ணாதுரை மட்டுமே இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர். எனவே, அற்புதமான திரை அனுபவங்களால் கவிஞரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிஞரது புலமையும், […]

Read more

மகாமுனி திரைக்கதை

மகாமுனி திரைக்கதை, சாந்தகுமார், அறம் பதிப்பகம், விலைரூ.390.   நடிகர் ஆர்யா, இரு கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சமகால அரசியல், ஜாதி, வன்முறையால் சராசரி மனிதன் எவ்வளவு துயரங்களை சந்திக்கிறான் என்பதை, இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவில் விளக்குகிறது இந்நுால். வெவ்வேறு நிலப்பரப்பில், வெவ்வேறு வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்பின் அறியாத இரண்டு பேர், தாம் இரட்டையர்கள் என்பதை உணர வைக்க, சமுதாய அழுக்குகளில் இருந்து எடுத்துள்ள விதம், ஆசிரியரின் புதுமையை காட்டுகிறது. திரைமொழியில், இலக்கியத்தை உருவாக்க முடியும் என்பதை படிக்கும் போது உணர […]

Read more

சில தருணங்களும் சில நிகழ்வுகளும்

சில தருணங்களும் சில நிகழ்வுகளும், டாக்டர் கல்யாணி நித்யானந்தன், வெளியீடு: இந்து தமிழ் திசை, விலை: ரூ.200. எண்பது வயதைக் கடந்துவிட்ட டாக்டர் கல்யாணி நித்யானந்தன் கரோனா ஊரடங்கு காலத்தில், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் தன் வாழ்வனுபவங்களையும் மருத்துவப் பணி அனுபவங்களையும் முன்வைத்து எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இது. சென்னையில் பிறந்து, வளர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்றவர் கல்யாணி. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதல் மாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

ஞான விசாரணை

ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரைகள்)-கெளதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.364, விலை ரூ.350. மறைந்த பத்திரிகையாளர் கெளதம நீலாம்பரன் “ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது. பக்தர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், நாத்திகர்களின் அவதூறுகளுக்கும் பல கட்டுரைகளில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு, சிவ வழிபாடு, உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட […]

Read more

காலா பாணி

காலா பாணி, டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.650 ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது. காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று […]

Read more

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?

நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை?, இராம்குமார் சிங்காரம், தாய் வெளியீடு, விலை:ரூ.120. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள். தொழிலில் முன்னேறுவதற்கான பாதைகள் தடைபட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பல துறைகளில் நீண்ட அனுபவம் கொண்ட இராம்குமார் சிங்காரம் எழுதியிருக்கும் ‘நீங்க இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ என்னும் நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொருவரும் வருமானத்தை உயர்த்தி வசதியாக வாழ்வதற்கான 25 உத்திகளைத் தரும் 25 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கைந்து பக்கங்களில் சுருக்கமாக […]

Read more

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,  பதிப்பாசிரியர்: ப.முருகன், வெளியீடு: தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, பக்.644, விலை ரூ.300. “தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்து இதுவரை 90க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தொடர்ந்து “தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதப்பட்டு வருகிறது. கா.சு.பிள்ளைதான் முதன்முறையாக தமிழ் இலக்கிய வரலாற்றை முழுவதும் எழுதினார் (1930). இவருக்குப் பின்னர் மு.வரதராசனார், சி.பாலசுப்பிரமணியன், பூவண்ணன், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலமும் போன்றோர் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, “புதிய நோக்கில்’ தமிழண்ணலும், “வகைமை’ நோக்கில் பாக்கியமேரியும், “வினா-விடை’ நோக்கில் இரா.விஜயனும், “எளிய முறையில்’ […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலைரூ.100.   மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் வாக்குமூலம் தமிழாக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த எழுத்து மூலமான ஆவணம் மாறாமல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் தொடர்பில்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலம் மறுத்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். காந்தி கொலை வழக்கில் முக்கியமான ஆவணமாக உள்ளது. நன்றி: தினமலர்,18/7/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

திரை இசை மும்மூர்த்திகள்

திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ்.மணியன், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.325. திரை இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன் பற்றிய தொகுப்பு நுால். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நடித்த மீரா திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன்.பட்டினத்தார் நாடகத்தில் நடிக்கத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு, நள தமயந்தி என்னும் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதில், கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் தான், எஸ்.வி.வெங்கட்ராமனை இசையமைப்பாளராகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். பரசுராமன் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பி.ஆர்.சுப்பராமன். பாடகர்கள் கண்டசாலா, பி.லீலா, இசையமைப்பாளர்கள் […]

Read more
1 2 3 4 8