பரிசு

பரிசு, உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள், ஈடித் எகர், தமிழில் – பிஎஸ்வி குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 226,  விலை ரூ. 299. ‘தி கிப்ட்’ என்ற தலைப்பில், சிறுமியாக இருந்த காலம் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் யூதர்களான தந்தையையும் தாயையும் பறிகொடுத்த பெண்மணியான ஈடித் ஈவா எகர் எழுதிய நூலின் தமிழாக்கமே இந்தப் “பரிசு’. உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள் என்ற தலைப்பில் 12 இயல்களில் 12 விதமான மனச் சிறைகளை விவரித்துத் திறந்துவிடுகிறார் எகர். பலிகடா […]

Read more

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும்

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும், டாக்டர் வி.நடராஜ், சாந்தா பப்ளிஷர்ஸ், விலைரூ.250. உலகளவில் கற்றல், கற்பித்தலுக்காக, குழந்தைகளின் நலன் கருதி பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கற்றல் திறன் என்பது மொழித்திறன். அதன் கல்வி வளர்ச்சியும், சமூகத்தில் உயர்வுகளும் முக்கிய காரணிகளாகும். இந்த நுால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதன் மேம்பாடு என துவங்கி, 10 தலைப்பின் கீழ் பல உட்தலைப்புகளை கொண்டு முழுமையான கற்றலுக்கான நுாலாக அமைந்துள்ளது. மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் முக்கியத்துவம் […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ.   ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்த ககால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு,  அரங்க. இராமலிங்கம், சிவகுரு பதிப்பகம், பக்: 336;  விலை ரூ.250. தொண்டை நாட்டின் பெருமைக்குரிய மண்ணில் வள்ளிமலையில் பிறந்து திருவண்ணாமலையில் முத்தி பெற்றவர் திருப்புகழ் அருளிய அருணகிரி நாதர். அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார், அடைய பலம் கிராமத்தில் பிறந்த அப்பய தீட்சிதர் போன்ற பல அருளாளர்கள், சமயச்சான்றோர் தோன்றிய மண் வடார்க்காடு. இம் மாவட்டத்தில் 4,059 ஊர்கள் இருந்தன. இவற்றுக்கான பெயர்களைப் பகுத்துக் காணுங்கால் அவை காரண காரியங்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆர் என்னும் ஆத்தி […]

Read more

திருவருட் பயன் விளக்க உரை

திருவருட் பயன் விளக்க உரை, ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.250.   சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை விளக்கும் வகையில், அவரே படைத்த விளக்கவுரை நுால். சிவப்பிரகாசம் நுாலில் கூறப்பட்டுள்ள, பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயனை இணைத்துப் பயில்வதால் கிட்டுவதே திருவருட்பயன் என்பதாக முன்வைத்து பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. திருவருளின் இயல்பும், திருவருளால் உயிர்கள் அடையும் பயனும், உயிருக்கான விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ஞானத்தின் ஒளி நிலையும் அஞ்ஞானத்தின் […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ்,  பக்.312, விலை ரூ.350. மனித வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் பயம் ஏற்படுகிறது. ஆழ்மனம் பாதிக்கப்பட்டால் பயம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால், அது மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கிறது. பயமும் பலவிதங்களில் ஏற்படுகிறது. நிறங்களைப் பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது. நாயைப் பார்க்கும்போது, கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போது சிலருக்குப் பயம் ஏற்படுகிறது. இடி இடித்தால் பயம், ரத்தத்தைப் பார்த்தால் பயம், சாலையின் குறுக்கே கடந்து செல்ல பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் பயம் என்று பலவித பயங்கள் […]

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமிழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள், அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

விந்தை மிகு பூச்சியினம்

விந்தை மிகு பூச்சியினம், ரெ. வீரவேல், அனுதானா பப்ளிஷர்ஸ், பக்.384, விலை ரூ.900. உலகம் முழுவதும் காணப்படும் பூச்சி இனங்களைப் பற்றிய விரிவான நூல். “கலைக்கதிர்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். “பூச்சிகளின் தோற்றம்’, “பூச்சிகளின் நெருங்கிய உறவினர்கள்’, “பாடும் வெட்டுக்கிளிகள்’, “பாயும் பாச்சான்கள்’, “தேனீக்களின் தேன் வாழ்க்கை’ என்பன உள்ளிட்ட 45 தலைப்புகளிலான கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பூச்சிகளில் எண்ணற்ற வகைகள்; அவற்றின் பலம், பகுத்தறிவு, நுண்ணறிவு, செயலாற்றும் திறன் போன்றவற்றைப்பற்றி அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆண் பூச்சிகளின் உதவி […]

Read more
1 2 3 4 5 8