துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள், அறிவியல் வெளியீடு, விலைரூ.150. அறிவியல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். 50 கட்டுரைகள் அடங்கியுள்ளது. மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. முதலில், உலகையே ஆளும் வைரஸ் என்ற தலைப்பில், ராமானுஜம் எழுதிய கட்டுரை உள்ளது. அடுத்து, யார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், முனைவர் கண்ணப்பன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், உதவும் பொறியியல் நுட்பங்கள் பற்றி ஒரு கட்டுரையை டாக்டர் டில்லிபாபு எழுதியுள்ளார். இது போல் பல பொருட்களில், அறிவியல் வளர்ச்சியை […]

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலைரூ.110. பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் உள்ளன. தமிழில் சிறந்த கூட்டு முயற்சியாக உள்ளது. குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான செயல். சிறுவர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளே கதைகளாக அமைந்துள்ளன. அவற்றுக்கு, படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் பல மிகவும் உயிரோட்டமாக உள்ளன. குழந்தைகளின் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த தொகுப்பு. பள்ளியில் பல நிலையில் படிக்கும் சிறுவர் – சிறுமியர், அவர்களின் […]

Read more

ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்

ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் வரலாறு தொடர்பாக வித்துவான் வே.மகாதேவன் ஆக்கிய ஆய்வு நூல்கள்,  முதல் தொகுதி, பதிப்பாசிரியர்: வி.மகேஷ், இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம், பக்: 678, விலை ரூ.750.  வரலாற்று ஆய்வாளர் வே.மகாதேவன் எழுதிய “ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு (ஆழ்வியலாய்வு)’, “தஞ்சையில் ஸ்ரீ காமாக்ஷி’, “ஸ்ரீ சங்கர மடத்தின் தமிழ்ப் பணிகள்’, “சமய, சமுதாயப் பணிகளில் ஸ்ரீ சங்கர மடம்’ ஆகிய நூல்களின் தொகுப்பு இந்நூல். “ஸ்ரீ சங்கர மடம் வரலாறு’ என்னும் நூலில் காஞ்சி மடத்தின் […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி, விலைரூ.400. வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்பது புரிந்து விடுகிறது. கூடுதல் விளக்கமாக நாவலின் காலமாக 1950 என்னும் தகவலையும் தந்து விடுகிறார். நெசவாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடு நுாலாகவும், பாவு நுாலாகவும் இணைந்து இயங்குகிறது நாவல். ஏழ்மை வாழ்க்கையில் ஒரு நிறைவுடன் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார். நடராஜன் என்ற பாத்திரத்தை, 43 அத்தியாயங்களில் நிலை நாட்டியுள்ளார். கதைப் போக்கில் 1950களின் அரசியல் […]

Read more

ரசிக்க… சமஸ்கிருதம்

ரசிக்க… சமஸ்கிருதம், அபிநவம் ராஜகோபால், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலைரூ.160. சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில் வாழ்வியல் நுட்பங்களை பதிவு செய்துள்ளார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், தெருவில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டினால் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை பதிவு செய்துள்ளது. வேத காலத்தில் ஆண்களுடன், பெண்களும் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சாணக்கியரின் காலத்தில், ஓலைச் சுவடிகளில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. நான்கு வேதங்கள் குறிப்பிடும் அறக் கருத்துகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. குற்றத்திற்கு ஏற்ற […]

Read more

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு, பழவை வீ.ராதாகிருஷ்ணன், வைகரி பால்டேனியல் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. “பழவேற்காடு’ தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல். இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்’ என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் […]

Read more

சைவமும் வைணவமும்

சைவமும் வைணவமும், ஸ்ரீவி தி.மைதிலி, ஆனந்த நிலையம், விலைரூ.150. சைவமும், வைணவமும் இறைவன் ஒன்றே என்ற கோட்பாட்டைக் கூறுகின்றன. இந்நுாலில், இறைவனுக்கு மலர் வழிபாடு செய்தலே பூஜை என்று கூறுகிறது. வைணவ ஆகமங்களாக வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளன. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறான். இறைவனின் 10 அவதாரங்களை விளக்கியும், அவதாரக் கோட்பாடுகள் மனித இனம் தன் நிலை உணர்ந்து சிறந்த லட்சியங்களுடன் வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளன என்றும் விளக்குகிறது இந்த […]

Read more

புனிதம் தேடும் புதினம்

புனிதம் தேடும் புதினம், கவுதமன் நீல்ராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.70. திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத் தொலைத்த சோகம், வருத்தம், தனிமை, வேலைக்குச் செல்லும் இயல்பு, இயலாமை என அனைத்துப் பக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். செங்கோடனாகப் பிறந்து சிறுநகையாகமாறிய திருநங்கையைக் கடைசியில் அவரது பெற்றோர் ஏற்கச் செய்வது நம்மை நெகிழச் செய்கிறது. இனிய துாய தமிழ் நடையைக் கையாண்டும் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது. திருநங்கையருக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு என மெல்லிய நுாலிழையில் கோர்த்து […]

Read more

நேமிநாதம் காலத்தின் பிரதி

நேமிநாதம் காலத்தின் பிரதி, நா.அருள்முருகன், சந்தியா பதிப்பகம், பக்.232, விலை ரூ.230. தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம். “நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது. நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் […]

Read more

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 ‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது. சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் […]

Read more
1 2 3 4 5 6 8