காஷ்மீரியன்

காஷ்மீரியன், தேவராஜ் விட்டலன், பிறை பதிப்பகம், விலை: ரூ.110. இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த […]

Read more

கறையான்

கறையான், சீர்ஷேந்து முகோபாத்யாய, தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை : ரூ.170. மனிதன் தன்னிடம் திரும்பும் கதை வேலை, அலுவலகம், உறவு, அந்தஸ்து என்ற சராசரி சமூக வரையறையில் பொருந்திப்போகும் அனைத்துத் தகுதிகளையும் குணங்களையும் கொண்டவன்தான் ‘கறையான்’ நாவலின் நாயகன் சியாம். மேலதிகாரி தன்னைக் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார் என்பதை முன்னிட்டு சௌகரியங்களைத் தந்த வேலையிலிருந்து வெளியேறுகிறான். அன்றிலிருந்து அவனுக்கு அதுவரை தெரிந்த, அறிந்த உலகம் மூடிவிடுகிறது; அவன் வசிக்கும் கொல்கத்தாவுக்குள்ளேயே மாயமும் ஏகாந்தமும் கொண்ட இன்னொரு உலகம் திறக்கிறது. அங்கே […]

Read more

வீரம் விளைந்த வேலுார் கோட்டை

வீரம் விளைந்த வேலுார் கோட்டை, சா.திருமலை கமலநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.100 புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. வேலுார் ஊர் பெயர் காரணம் இலக்கிய ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. வேலுார் கோட்டை வரலாறு, சிப்பாய் கலகம் வரை சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் கோலோச்சிய மன்னர்கள் பற்றிய விபரமும் கால வரிசைப்படி உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆன்மிகத் தொண்டு புரிந்த மகான்கள் பற்றிய விபரமும் உள்ளது. […]

Read more

2050–இல் பெண்கள்

2050–இல் பெண்கள், விஜிமா, வசந்தா பதிப்பகம், விலைரூ.300. கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் அவலம் துவங்கி, இன்றைய செழுமையான சூழலை விவரித்து, படிப்பறிவாலும், பட்டறிவாலும், விழிப்புணர்வும் நன்மதிப்பும் எய்தி வருவதை விளக்கிச் சொல்லும் நுால். கடந்த நுாற்றாண்டுகளில் பெரும்பான்மைப் பெண்கள், ஆண்களைச் சார்ந்து இல்லற இயந்திரமாகவும், போகப் பொருளாகவும் உழன்ற நிலைமை மாறி, உயர்ந்த வேலைவாய்ப்புகளால் செல்வாக்கு, எழுச்சி, முன்னேற்றம், தன் மதிப்பு உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, கல்வி வளர்ச்சியே பெண்களின் நிலையை புதிய தளத்துக்கு உயர்த்தி இருப்பதை முன்வைக்கிறது. […]

Read more

ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம், இளஞாயிறு மாணிக்கம், இளங்கோ கோ, மாணிக்கம், தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயில், விலை 360ரூ. ஷீரடி சாயி பாபா மற்றும் அவரது பக்தர்களின் வாழ்வில் நடந்த 150 நிகழ்வுகள், வண்ணப்படங்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாயி பாபா தனது 16-வது வயதில் ஷீரடிக்கு வந்து தவம் செய்தது. எண்ணெய் கலந்த தண்ணீர் ஊற்றி விளக்கை எறிய வைத்தது, எங்கோ நெருப்பில் விழுந்த குழந்தையை […]

Read more

ஊழியர்கள் வேலை வழக்குகள்

ஊழியர்கள் வேலை வழக்குகள், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், கதிஜாஜி புத்தகம் வெளியீடு குழு, விலை 80ரூ. ஊழியர்களின் வேலையில் ஏற்படும் பிரச்சனை தொடர்பான வழக்குகள், அவற்றின் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கூறும் இந்த நூல், சமூக அக்கறை உள்ள பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. காணாமல் போன பெண்ணை தேடுவதில் அக்கறை கொள்ளாத காவலர்கள், உணவுப்பொருளில் கலப்படம், தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன. தொழிற்சங்கம் உருவான வரலாறு, புரட்சி எண்ணம் கொண்ட 19 தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் இந்த நூலில் தர […]

Read more

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4, பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 500ரூ. சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய பரபரப்பான தகவல்களைக் கொண்ட நூல்களின் 4- வது பாகமாக இது வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகத்திலும் வீரப்பன் தொடர்பான திடுக்கிடும் செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலைக்குப் பின் நடந்த நிகழ்வுகளும், இறுதியில் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. வீரப்பன் ரூ.13 கோடி வைத்து இருந்தார் என்பதும் அவரால் கடத்தப்பட்ட நாகப்பா எவ்வாறு கொலையுண்டார் என்பதும் […]

Read more

பௌத்தமும் தமிழும்

பௌத்தமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள், விலை 220ரூ. தமிழகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்த பவுத்த மதம், பின்னர் தடயமே இல்லாமல் அழிந்து போனது எப்படி என்ற வரலாற்றை பல இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தில் பவுத்தம் எந்தெந்தப் பகுதிகளில் பரவி இருந்தது, பவுத்த மதத்தால் கிடைத்த நன்மைகள், பவுத்தர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர் அசோகர் பவுத்த மதத்தை எவ்வாறு தமிழகத்தில் பரப்பினார், ஜைனம் […]

Read more

யோகா அறிவியலும் ஆரோக்கியமும்

யோகா அறிவியலும் ஆரோக்கியமும், பி.கே. அய்யாசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 280ரூ. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த இந்த நூலின் ஆசிரியர், உடல் நலத்துக்கான அனைத்து ஆசனங்களின் செய்முறை, அதனால் ஏற்படும் பலனகள், ஆசனத்தின் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள் ஆகியவற்றை அறிவியல் நோக்கிலும், பட விளக்கங்களுடனும் எளிமையாகத் தந்து இருக்கிறார். யோகாவின் வரலாறு, […]

Read more

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, விலை 200ரூ. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்கள் பற்றியும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய ஆலயம், அந்த ஆலயம் அமைந்துள்ள இடம், அங்கு செல்வதற்கான வழி, ஒவ்வொரு கோவிலிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் தொகுத்துத்தரப்பட்டு இருக்கின்றன. நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ் விளக்கம்,ஆங்கில மாதங்களுக்கு அந்தப் பெயர்கள் வந்த விதம், தமிழ் மாதங்களின் சிறப்பு, ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் ஆன்மிக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 300க்கும் மேற்பட்ட […]

Read more
1 6 7 8