ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300 வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால். உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார். தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை […]

Read more

எல்லோருக்குமானவரே

எல்லோருக்குமானவரே, க.கணேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, விலை: ரூ.20. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கடந்த ஏப்ரல் 14 அன்று மலிவுப் பதிப்பாக வெளியான ‘எல்லோருக்குமானவரே’ நூல், இதுவரையில் இரண்டாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்த அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றி அசோக் தாவ்லே எழுதிய கட்டுரை, பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து பிருந்தா காரத் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் பேராசிரியர் க.கணேசன் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்டோரின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடவியல், […]

Read more

அகத்தைத் தேடி

அகத்தைத் தேடி, தஞ்சாவூர்க் கவிராயர், விலை: ரூ. 200. அகத்தின் சாவி அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்து கிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில்தான் உண்மைக்குத் திரை போடப்பட்டு, பூசைகளும் புனஸ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்புவெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.400. நாவலின் மையக் கதாபாத்திரமான அம்மையப்பநல்லூர் நடராஜன் நெசவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், தந்தையின் விருப்பத்துக்காகவும் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, உடலுழைப்பை நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். குறைந்த அளவிலான காடு கழனியுடன் ஒரு ஹோட்டலையும் நடத்திவந்த சின்னு, ஆஸ்துமா நோய் வந்து இறந்துபோகிறார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான நடராஜன், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாகிறது. அந்த வகையில் நடராஜன் தன் மனைவி, அம்மா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட […]

Read more

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்,  உலகப் புகழ்பெற்ற ஆறு நாவல்களின் சுருக்கம்,  தமிழில்  முல்லை பிஎல் முத்தையா,  பக்.736, விலை ரூ. 700. மாக்ஸிம் கார்க்கியின் “அம்மா’, லியோ டால்ஸ் டாயின் “அன்னா கரினினா’, டாஸ்டாவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “வாடாமல்லிகை’ என்ற தலைப்பில் அலெக்ஸாண்டர் டூமாஸ் ஜூனியரின் “கேமிலி’, எமிலி ஜோலாவின் “நாநா’, “ஐந்து சகோதரிகள்’ என்ற பெயரில் ஜேன் ஆஸ்டினுடைய “பிரைட் அன்ட் பிரிஜுடீஸ்’ நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார் பிஎல். முத்தையா. 1905-இல் ரஷியாவில் நிகழ்ந்த விவசாயிகள் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, மக்களின் மத்தியில் […]

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள் அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை 400ரூ. 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஊடகம், திரைப்படம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், கடித இலக்கியம், நூல் பதிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வளர்ச்சி, அவை தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஊடகத் துறை வளர்ச்சிப் பகுதியில் […]

Read more

சேக்கிழாரின் பெரிய புராணம்

சேக்கிழாரின் பெரிய புராணம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா, விலை 360ரூ. இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னரிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார், 63 நாயன்மார்கள் தொடர்பான செய்திகளை பல்வேறு தரவுகள் மூலம் சேகரித்து, அவர்களின் வரலாற்றை பெரியபுராணம் என்ற நூலாக ஆக்கினார். பகவான் ரமணரின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய, 63 நாயன்மார்களின் வரலாறு, எளிய தமிழில் உரைநடை வடிவத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாயன்மார்களுக்கு அருள் புரிய அந்த இறைவன், சாதாரண வடிவத்தில் வந்து, அவர்கள் பெருமைகளை உலகறியச் செய்த வரலாறுகள் இலக்கியத்தரத்துடனும் […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 230ரூ. மகாபாரதத்தை எழுதிய வியாசர், ஏராளமான கிளைக் கதைகளைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற மிகப் பெரிய நூலையும் எழுதியுள்ளார். அந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், கிளைக் கதைகளும் எளிய முறையில் படித்து அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணு அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக எடுத்த 20-க்கும் மேற்பட்ட அவதாரங்களும், அந்த அவதாரங்களின் சிறப்பும், அதன் மூலம் வெளிப்பட்ட அறநெறிகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சிருஷ்டி […]

Read more
1 5 6 7 8 9