தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ. ‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் […]

Read more

ஆபரேஷன் நோவா

ஆபரேஷன் நோவா, தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம், விலை 150ரூ. விஞ்ஞானப் பின்னணியில் பிரபல எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய நாவல். பூமி இரண்டாகப் பிளந்து உருகி ஓடப் போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், உலக மேம்பாட்டுக் குழுவினர் கூடி, இன்னொரு கோளில் மனிதர்களை குடியேற்றி, இயன்றவரை மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வில்லன் ஒருவன் குறுக்கே வருகிறான். இப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்ட சினிமாப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. கற்பனைக்கும் […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும்

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும், முனைவர்ச. கணபதிராமன், பூங்குன்றன் பதிப்பகம், விலை 50ரூ. தென்காசி கோபுரம் பற்றி அரிய புத்தகம் தென்காசி கோவிலில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சிதைந்துபோய், மொட்டை கோபுரமாக நின்றது. புதிய கோபுரம் கட்ட பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. முடிவில், ராஜகோபுரம் கட்டும் பணியை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவில் 178அடி உயர ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். 25/6/1990ல் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று […]

Read more

உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more

பாரதிதாசன் காதல் ஓவியங்கள்

பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ. உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த […]

Read more

ஆலயமும் ஆகமமும்

ஆலயமும் ஆகமமும், சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், விலை 195ரூ. புரிதலின் புதிய ஒளி ஆகமமும், வேதங்களும், ஆகமமும் சித்தர்களும், ஆலய நுழைவும், ஆகமமும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – ஒரு சட்டப் பார்வை முதலான தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூல். தமிழக அரசின் தனிச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை இல்லாத நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யாப்படாமல் […]

Read more

ஏகாதிபத்திய பண்பாடு

ஏகாதிபத்திய பண்பாடு, ஜேம்ஸ் பெட்ராஸ், தமிழில் க. மாதவ், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ. சமூக மாற்றத்துக்கான குரல் அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு ஆதரவானவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு செயல்படும் எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர். சிலி, கிரீஸ், வெனிசுலா நாடுகளின் அரசாங்கங்களின் ஆலோசகராக இருந்தவர். 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். 30க்கும் மேலான மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் இந்தியாவையும் விழுங்கிகொண்டிருக்கும் நேரத்தில் ஜேம்ஸின் கருத்துகள் இந்தியாவில் சமூக மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் பயன்படும். -த. நீதிராஜன். […]

Read more

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும்

திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும், ஆர்.பி.வி.எஸ். மணின், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 100ரூ. விச்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் தலைவரான இந்நூலாசிரியர், ஹிந்து சமயம் மற்றும் அதன் தத்துவங்களைக் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த வகையில், இந்நூலில் ஆலய வழிபாட்டின் அவசியம், ஆலய வடிவமைப்பின் தத்துவம், உத்ஸவங்களால் ஏற்படும் பலன்கள், விக்ரஹ ஆராதனை செய்வதன் தாத்பர்யம், விஷ்ணு கோயில்களில் வழிபாடு செய்யும் முறை, கும்பாபிஷேகம் செய்வதன் உள்ளார்ந்த பொருள், ஆலயங்களில் வழிபடுபடுபவர்கள் செய்யத் தக்கது, செய்யத் தகாதது… […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more
1 5 6 7 8 9 336