கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?, ஏ.எல்.சூர்யா, பி பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.304. விலை ரூ.300. பணம் சம்பாதிப்பதற்கு தொழில், வேலை மட்டும் இருந்தால் போதாது, மனமும் வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் தனது ஆழ்மனதில் பதித்துக் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் நூல். நம்பிக்கை எவ்வாறு மனிதனை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. அந்த நம்பிக்கை நம்மை இயங்கச் செய்ய தேவையற்ற சிந்தனைகள், பேச்சுகள், செயல்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் இந்நூல் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழனிபாரதி, பக்.104, விலை 80ரூ. நீ வரைந்த கோலம் தான் நீயே உன்னை வரைந்தது போல என்பது போன்ற பல அழகிய கதைகள் நிறைந்துள்ளன. கவிதைப் பிரியர்களக்கு இந்நுல் பிடிக்கும். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிலைத் திருடன்

சிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ், ஷாலினி, கருஞ்சட்டை பதிப்பகம், விலை 80ரூ. பிரித்தறிவோம் எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ என்று கேட்டுப் பழமைவாதங்களைப் பரப்பும் போக்கு அண்மைக்காலமாக தலைதூக்கி இருக்கிறது. ஆனால், பழங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுபவற்றில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்து அறிவதுதானே பகுத்தறிவு! இதை அறிவியல்பூர்வமாகவும் வரலாற்று சமூகவியல் பார்வையிலும் அலசி ஆராயும் புத்தகம்தான் மனநல மருத்துவர் ஷாலினியின் ‘கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்’. நன்றி: தினமலர், 15/1/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்,  ம.திருமலை, செல்லப்பா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. ஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது இருண்மை. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் […]

Read more

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு, முத்தப்பா, யூகே மேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.272,  விலை  ரூ.200. த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவனத்தை நடத்திய த.பி.சொக்கலால் ராம்சேட்டின் வரலாறு இந்நூலின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் அரிராம் சேட்டின் வரலாறு நூல் முழுக்க மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அரிராம் சேட் சிறுவயதிலேயே கார்களின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருந்தது, இளைஞனாக ஆன பிறகு பல மாடல்களில் பல நவீனமான கார்களை வாங்கிப் பயன்படுத்தியது, தன்னிடம் வேலை செய்பவர்கள், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் […]

Read more

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்,  ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தகநிலையம், பக்.200, விலை ரூ.180; கம்பராமாயணம் தொடர்பான ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏழாவது கட்டுரையான கம்பனும் பாரதிதாசனும் கட்டுரை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை பழமைச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி என்று ஐயப்படுகிறவர்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியான பின்னுரை, எட்டாவது கட்டுரையாகத் தோன்றிவிட்டது. கம்பராமாயணம் இன்று வரை போற்றப்படுவதற்குக் காரணம் அதன் உலகியல் அடித்தளமே என்பதை விளக்கும் கம்பனில் உலகியல் கட்டுரை, கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிற சில பொருள்களை வைத்து, அவர் குறிப்பிடுவது திருமாலிருஞ்சோலை, […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், தமிழ் திசை பதிப்பகம், விலை 130ரூ. திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால் கண்ணதாசன் தம் அனுபவங்களைப் பாடலாக்கிக் கொடுத்தார். அது நம் இதயத்தைத் தொட்டது. வாழ்க்கைக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. அதனால் கண்ணதாசன் பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது’ என்ற பாடலாசிரியர் முத்து லிங்கம் முன்னுரையுடன் துவங்குகிறது, இந்நுால். கண்ணதாசன் பாடல்களைத்தான் காலம் முழுக்க எல்லாரும் எழுதி, சிலாகித்து, கொண்டாடி விட்டார்களே, இவர் புதிதாக […]

Read more

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!, கோ.தியாகராஜன், நந்தினி பதிப்பகம், பக். 80, விலை 90ரூ. திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 10/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

குறுந்தொகை ஓவியம்

குறுந்தொகை ஓவியம், வெ.பரமசிவ பாண்டியன், வனஜா, பக். 242, விலை 100ரூ. சங்க இலக்கியங்களில், 4 முதல், 8 அடிகள் கொண்ட, 401 காதல் பாடல்களின் தொகுப்பே எட்டுத் தொகை. எட்டாத காதலின் சுவை நம் மனதை எட்டி தொட்டு இழுக்கும். இதில் உள்ள பறவை, விலங்கு, மனித பாசப் போராட்டங்கள். 205 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற புகழ் பெற்ற, 205 புலவர்களும், பெயரே தெரியாத, 10 புலவர்களும் பாடியுள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல்களைப் […]

Read more
1 238 239 240 241 242 505