நீங்களும் எடை குறைக்கலாம்!

நீங்களும் எடை குறைக்கலாம்! டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை,  பக்.180, விலை ரூ.150. தொப்பை, அதிக எடை, உடல் பருமன் எல்லாமே ஆரோக்கியத்துக்கு ஆபத்தான அறிகுறிகள். ஆனால், இதைப் பலரும் நம்புவதில்லை. உடல் எடை தானாக அதிகரித்தது போன்று, தானாகவே ஒரு கட்டத்தில் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். உடல் எடை தானாக அதிகரிக்காது. தானாக குறையவும் செய்யாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. மேலும், அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாகவே இல்லைஎன வருத்தப்படுகிறார் […]

Read more

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன? நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு […]

Read more

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், விலை 50ரூ. மௌனத்தைக் கலைக்கும் கல்வி சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால் இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மௌனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் […]

Read more

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள், செ.திவான், இலக்கியச் சோலை, விலை 90ரூ. காந்தியால் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி கிலாபத் இயக்கம். அந்த இயக்கத்தைத் தொடங்கிய அலி சகோதரர்களின் வரலாறு இது. வரலாற்று ஆய்வாளர் செ.திவானின் 120-வது நூல். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காலனியத்தின் இன்றைய முகங்கள்

காலனியத்தின் இன்றைய முகங்கள், முரளி சண்முகவேலன், மின்னம்பலம் பதிப்பகம், விலை 110ரூ. லண்டன் தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் ஆளும் வர்க்க அடக்குமுறைகளைப் பல்வேறு கோணங்களில் அலசும் கட்டுரைகள். பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நியாயங்கள் அழுத்தத்தோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முகங்கள்

முகங்கள், சத்யா ஜி.பி., வாதினி பதிப்பகம், விலை 160ரூ. ஏடிஎம் காவல்காரர், நள்ளிரவு டீக்கடைக்காரர், பால் பாய் என்று தினசரி வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்களின் முகமூடியில்லாத முகங்களைப் பற்றிய நினைவுகள். 29 கட்டுரைகளும் சிறுகதைகளைப் போல வாசிக்க சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காந்தியடிகளும் குழந்தைகளும்

காந்தியடிகளும் குழந்தைகளும், ஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ், தமிழாக்கம்: அ.இராமசாமி, காந்திய இலக்கியச் சங்கம், விலை: ரூ.130. காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காந்திய நூல்.காந்தியின் குழந்தைப் பருவம், குழந்தைகளுக்கான அவரது அறிவுரைகள் என்று காந்தியத்தை ஒரு வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்தும் நூல் நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், காம்கேர் புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் வெளியான தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்லைன் வணிகம் பற்றிய அறிமுகம், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆன்லைன் ராஜா

ஆன்லைன் ராஜா, எஸ்.எல்.வி.மூர்த்தி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. தமிழில் மேலாண்மை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.எல்.வி.மூர்த்தி ‘இந்து தமிழ் திசை’யின் வணிக வீதி இணைப்பிதழில் எழுதிய தொடரின் புத்தக வடிவம். உலகப் பெரும்பணக்காரர்களில் ஒருவரும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமமான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா பற்றிய இந்தத் தொடர் வெளிவரும்போதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027967.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தினம் ஒரு மந்திரம்

தினம் ஒரு மந்திரம், தொகுப்பு திலகவதி, அட்சரா பதிப்பகம், விலை 200ரூ. பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. […]

Read more
1 236 237 238 239 240 505