விழித்தெழுக என் தேசம்

விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ. அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 27/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 360ரூ. தமிழகம், கர்நாடக அரசுகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றொரு முகத்தை தெளிவாகக் காட்டும் நூலாக இது வெளியாகி உள்ளது. ‘ காட்டில் மறைந்து வாழ்ந்தபோது வீரப்பன் நடத்திய ஆட்கள் கடத்தல், தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை கொன்றது ஆகிய பரபரப்பான சம்பவங்கள், நக்கீரன் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காட்டுக்குள் சென்று வீரப்பனை முதல் முறையாக சந்தித்து எடுத்த பேட்டிகள், புகைப்படங்கள், வீரப்பன் கூறிய கதைகள் ஆகிய அனைத்தும் நேரடித் […]

Read more

மறைக்கப்பட்ட மருத்துவம்

மறைக்கப்பட்ட மருத்துவம், மருத்துவர் யுவபாரத், ரிதம் நூல் பகிர்வாளர்கள் வெளியீடு, விலை 150ரூ. நோய்கள் குணமடைவதற்கு மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் நலன் கருதி, மருந்தில்லாமல் எப்படி நோயை குணப்படுத்தவது என்பதை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்ட நூல். மன அழுத்தம், வாழ்வியல் முறை மூலமாகதான் 98 சதவீரம் நோய்கள் வருகிறது. அவற்றை குணப்படுத்த முதலில் உணவு ப் பழக்கத்தை முறையாக எடுத்துக்கொண்டால் அந்த நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை இந்த நூல் மூலம் உணர முடிகிறது. புதிய […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது. 1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து […]

Read more

இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர், இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை 160ரூ. சிங்களவர்களின் பூர்வீகம் சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது. மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் […]

Read more

நடைவழிக் குறிப்புகள்

நடைவழிக் குறிப்புகள், சி.மோகன், பரிசல் வெளியீடு, விலை 150ரூ. கவனிக்க மறந்த ஆளுமைகள் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 […]

Read more

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர், பக்தவத்சல பாரதி, பாரதி புத்தகாலயம், விலை : ரூ.60 தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என சங்க இலக்கியப் பாடல்களை முதன்மைத் தரவாகக் கொண்டு ஆராய்கிறது, 72 பக்கங்கள் கொண்ட இந்த நூல். குடி என்னும் தன்னாட்சி சமூக முறையிலிருந்து, சுற்றுவட்ட சமூக முறையின் ஊடாக செங்குத்து படிநிலை சமூக முறைக்கு தமிழ்ச் சமூகம் மாறி வந்திருப்பதாக இந்த நூலில் விளக்கியுள்ளார் பக்தவத்சல பாரதி. சங்க காலச் சமூகம் குடி அடிப்படையிலான சமூகமாக இருந்தது […]

Read more

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4, பாலாஜி, சார் பதிப்பகம். தொழில்நுட்பக் கில்லாடி ஆகலாம். ஒரு விரல் நுனி அளவிலான கருவிக்கள் எப்படி ஒரு நூலாகத்தின் புத்தகங்களை எல்லாம் அடுக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வைக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமிக்க முடிகிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை ஒரு எலெக்ட்ரானிக் மாணவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கையடக்கப் புத்தகத்தின் நான்கு பாகங்கள் கதைபோல விவரிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more
1 234 235 236 237 238 505