கொல்லிமலை மகிமை

கொல்லிமலை மகிமை, மதியுகி சிவகுரு, பிரேமா பிரசுரம், பக். 104, 60ரூ. எந்த இடத்துக்கு சென்றாலும், அந்த இடம் பற்றிய விபரங்களை நாம் அறிந்திருந்தால் மட்டுமே, நன்கு சுற்றி பார்க்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொல்லிமலை பற்றி பலரும் தெரிந்திருப்போம். ஆனால், அங்கு பார்க்க வேண்டியவை பற்றி கேட்டால், சரியாகத் தெரியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கொல்லிமலை பற்றி முழு தகவல்களுடன், இந்நுால் வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

பாரதி முதல் கவிதாசன் வரை

பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது. பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால். பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய […]

Read more

தமிழக வடக்கெல்லைப் போராட்ட வரலாறு

தமிழக வடக்கெல்லைப் போராட்ட வரலாறு, பேரா.முனைவர் பி.யோகீசுவரன், அரசி பதிப்பகம், பக். 160, விலை 125ரூ. இன்றைய இளைஞர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும், திருத்தணி, சென்னை ஆகிய நகரங்கள் தமிழகத்துடன் இணைந்த வரலாறு தெரிந்திருக்காது என்று கூறலாம். சிலம்புச்செல்வர் ம.பொ.சி., தமிழாசிரியர் மங்கலங்கிழார், தளபதி கே.விநாயகம், என்.ஏ.ரஷிது, கோல்டன் ந.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல போராட்ட வீரர்கள் குறித்து, இந்நுால் விரிவான செய்திகளைக் கூறுகிறது. வெள்ளையர் ஆதிக்கத்தில் வேங்கடம், சித்துார் மாவட்டங்கள் உருவான வரலாறு, வடக்கெல்லைப் போராட்ட வரலாறு, சித்துார் போராட்டத்தில் தமிழக கம்யூனிஸ்டுகள் நடுநிலையில் இல்லை […]

Read more

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு, டாக்டர் வசந்த் செந்தில், குமரன் பதிப்பகம், பக். 128, விலை 50ரூ. குழந்தையின் தேவை என்ன? எந்தெந்த வயதில் தடுப்பூசிகள், ஆண் – பெண் குழந்தையின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம், எடைக்குத் தேவையான கலோரி, தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு என்ன பயன்? திட உணவுகளை அறிமுகப்படுத்தும் முறை, குழந்தை வளர்ப்பில் பல்வேறு வழிமுறைகளை படங்களுடன் விவரிக்கிறார், டாக்டர் வஸந்த் செந்தில். இந்நுால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் அரிய பொக்கிஷம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள்

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள், தொகுப்பு ஜே,விஜயராகவன், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. தன்னுடைய குரல் வளத்தாலும், இசையாலும் 35 ஆண்டுகள் மக்கள் மனதில் கொடி கட்டிப்பறந்த பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, மற்றும் அவருடைய காதல் மனைவி ஜிக்கி என்கிற கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் தமிழ் திரையிசையில் எண்ணற்ற வெற்றி பாடல்களை தந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும், திரையிசையில் அவர்களின் பயணத்தையும் விரிவாக இந்த நூல் அலசுகிறது. இருவர் பற்றியும் அறிந்திடாத அரிய தகவல்களும், புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது நூலின் தனி சிறப்பு. […]

Read more

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை

பாரதியார் கவிதைகளில் நகைச்சுவை, மு.ஏழுமலை, காவ்யா பதிப்பகம், விலை 120ரூ. நகைச்சுவை உணர்வு என்பது பிற உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை வாய்ந்த பண்பாகும். இலக்கிய படைப்புகளிலும் இவ்வுணர்வு கலைத்தன்மையோடு வெளிப்படுவதை காணமுடிகிறது. அப்படி பாரதியாரின் கவிதைகளில் பொதிந்திருககும் நகைச்சுவையை எடுத்துரைக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027187.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

இந்தியாவின் இருண்டகாலம்

இந்தியாவின் இருண்டகாலம், சிசி தரூர், கிழக்குப் பதிப்பகம், பக். 384, விலை 350ரூ. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஐ.நா.வி.ன துணைப் பொதுச் செயலாளர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தவிர, இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு,, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியிருப்பதோடு, உலகம் அறிந்த பேச்சாளராகவும் திகழ்பவர். இவர், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார். ஆங்கிலத்தில் வெளிவந்த ‘An […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தகளம், விலை 400ரூ. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், வானொலி ஒலிபரப்பு துறையில் உள்ள சவால்கள், சுவாரசியங்கள், இத்துறையை சார்ந்தவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும்? என்பதை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கும், இதில் நுழைய துடிப்பவர்களும் இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

கால்பந்தாட்டம் ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம், ப.குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. கால்பந்தாட்ட வரலாறு என்ன? அதன் தோற்றம் எப்போது என்பதை ஆண்டு அடிப்படையில் அடுக்கடுக்காக எழுதியிருப்பது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. களத்தில் தனிநபராக நின்று, எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய வீரர்களைப் பற்றிய செய்திகளோடு, நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கதாபாத்திரங்களை கால்பந்தாட்ட வீரர்களாகவும் ரசிகர்களாகவும் சித்தரித்து, நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார், நுாலாசிரியர் குணசேகர். நன்றி: தினமலர், 26/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், விலை 120ரூ. ஒழுக்கத்தின் மேன்மை, திருக்குறளின் பெருமை, அவ்வை பாட்டியின் தமிழ்த்தொண்டு உள்ளிட்டவை கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான ஆசிரியர்களின் கற்பித்தல் முறை பற்றி எடுத்துரைத்துள்ளது அழகு. நன்றி: தினத்தந்தி இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 268 269 270 271 272 505