எழுத்தும் நடையும்

எழுத்தும் நடையும், சி.மணி, தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.240, விலைரூ.200. சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்ற சிறுபத்திரிகை மூலம் அறிமுகமான பல கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. அவர் எழுதிய சில கவிதைகள், ஒரு சிறுகதை, ஒரு நெடுங்கதை, ஒரு நாடகம், சில கட்டுரைகள், அவரது நேர்காணல் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத சில கவிதைகள் ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவரது புகழ்பெற்ற கவிதையான "நரகம்' கவிதை புதுக்கவிதை உலகில் ஒரு மைல்கல் என்று அப்போது புகழப்பட்டது. அது இந்நூலில் இடம் […]

Read more

ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது. அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி […]

Read more

பாணனைத் தொடரும் வெயில்

பாணனைத் தொடரும் வெயில், ச.அருண், வாலி பதிப்பகம், விலை 80ரூ. வறுமை நிழலாய்த் தொடர வாழ்க்கைப் பாதையை அந்த இருளில் தேடும் பாணர்களின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள். கண் முன் காட்சியாய் நகர்ந்தாலும் உணரமுடியாத நிஜத்தை கவிதையாய் வாசிக்கிறபோது நெஞ்சம் நெகிழ்வது நிச்சயம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027223.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, எழுத்துவடிவம் ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. கல்வி அறிவில்லாத ஒருவர், கனகாம்பரச் செடி வைத்து அதில் பல ஆய்வுகள் செய்துவேளாண் ஆராய்ச்சியாரான தனிமனித வரலாறு. அசட்டு மனிதராக எல்லோராலும் பார்க்கப்பட்டவர், அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்படும் அளவுக்கு வளர்ந்த விதத்தை சொல்லியிருக்கும் விதம் போரடிக்காத சுவாரஸ்ய பாடம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027044.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள்

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.384, விலைரூ.200. அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல்.  இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள். இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன். கோயில், குளங்களை சுற்றிவருவதும், […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா.பெருமாள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 85ரூ. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையை அரும்பெரும் கவிஞராகவே அறிந்திட்ட நமக்கு இந்த புத்தகம் அதே எண்ணத்தை முற்றிலுமாக மாற்றுவதாக அமைந்துள்ளது. கவிமணி கல்வெட்டு ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. அவருடைய திறமையின் இன்னொரு புறம் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது என்றே கூறவேண்டும். கவிமணி பற்றி இதற்கு முன்னர் இதுபோன்ற ஆய்வு நூல் வந்திருக்குமா? என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். கேரளாவில் நிலவி வந்த தந்தையிட்ன சொத்து அவருடைய சகோதரி […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

யானைகளின் வருகை

யானைகளின் வருகை, கா.சு.வேலாயுதன், இந்து தமிழ் திசை பதிப்பகம், விலை 180ரூ. எதிர் திகை ஓட்டம் யானைகளின் மீது தான் கொண்டிருக்நத காதலின் பொருட்டு கடந்த இருபது ஆண்டுகளாக யானைகள் குறித்தும் இயற்கைக்கு மனிதன் செய்த சேதாரங்கள் குறித்தும் தொடர்ந்து அவதானித்துவருபவர் கா.சு.வேலாயுதன். அவரது அனுபவங்களும் அவதானிப்புகளும் ‘யானைகளின் வருகை’ எனும் தொகுப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளைப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் ஓர் உலகளாவிய பார்வையை முன்வைக்கிறார். வெறுமனே தகவல்களாக, அனுபவப் பகிர்வாக இல்லாமல் தனது நுட்பமான பார்வையின் மூலம் […]

Read more

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள்

கலாக்ஷேத்ரா ருக்மிணிதேவி,சில நினைவுகள் சில பகிர்வுகள், ஆங்கில மூலம்: எஸ். சாரதா, தமிழில்: கிருஷாங்கினி, சதுரங்கம் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. உலகப் பிரசித்தி பெற்ற கலாக்ஷேத்ரா என்னும் இந்திய பாரம்பரியக் கலைக் கல்வி மையத்தைப் பற்றியது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் ஈடு இணையற்ற அந்தக் கலை மையத்தை உருவாக்கிய ருக்மிணிதேவி பற்றிய வரலாற்றுப் பதிவாகவும் இருக்கிறது. கலாக்ஷேத்ராவில் சேர்ந்து கலை ஞானத்துக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்த எஸ். சாரதா எழுதிய ஆங்கில மூல நூலின் தமிழ் மொழி மாற்றமாக இந்தப் […]

Read more
1 269 270 271 272 273 505