மாடித்தோட்டம் 77+ வயதினிலே

மாடித்தோட்டம் 77+ வயதினிலே,  ஆர்.எஸ். நாராயணன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.168, விலை ரூ.135. இயற்கையான முறையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல் காய்கறிகள், கீரைகள், பழங்களை நமது வீட்டு மாடித்தோட்டத்தில் நாமே உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவுகிறது. இயற்கை விஞ்ஞானியாகிய நூலாசிரியர், மாடித்தோட்டம் அமைத்த தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலைப் படைத்து அளித்திருக்கிறார். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு எழும் பல ஐயங்களுக்கு இந்நூல் விடை பகர்கிறது. மாடித்தோட்டத்தில் எவற்றை எல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு இடம் தேவை? மாடித்தோட்டம் அமைத்தால் […]

Read more

ஏழாம் நம்பர் வீடு

ஏழாம் நம்பர் வீடு, சுப்ரஜா, வாதினி வெளியீடு, விலை 499ரூ. எழுத்தாளர் சுப்ரஜா எழுதிய 40க்கும் மேலான சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதைகள் குறித்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ருசிகர கடிதமும் இணைக்கப்பட்டு உள்ளது. ஏழாம் நம்பர் வீடு, திருட்டுப் பய, அது வேற இது வேற ஆகியவை மனதை தொடுகின்றன. 50 கிராம் மிக்சரும் 100 கிராம் அல்வாவும் கதையில் ஒரு சாதாரண மனிதனின் மன உணர்வு வெளிப்படுகிறது. அறை எண் 13, விடுதியில் தங்கி உயர்கல்வி பயில்வோருக்கும், சாக்கடை, அடுக்குமாடிவாசிகளின் […]

Read more

சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு […]

Read more

மனிதனுக்கு மரணமில்லை

மனிதனுக்கு மரணமில்லை, த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.276, விலை ரூ.230. பொதிகை தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பாகும் தமிழ் விருந்து நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். சுவாமி விபுலானந்த அடிகள், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ரவீந்திரநாத் தாகூர், ஜி.டி.நாயுடு, ஆப்ரகாம் லிங்கன், பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட நாமறிந்த – நாமறியாத – பல ஆளுமைகளைப் பற்றிய மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மனதில் பதியும் […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, லில்லியன் எயிஷ்லர் வாட்சன், தமிழில்: பி. உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக்.398, விலை ரூ.230. தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ் என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல்,புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு. வாழ்க்கைப் […]

Read more

எல்லாமே இலவசம் இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி

எல்லாமே இலவசம், இந்தியாவில் இலவச காய்கறி புரட்சி, பாரதி சின்னசாமி,எழில்மதி பதிப்பகம், பக்.188, விலைரூ.120. சந்தைப் பொருளாதாரம் தற்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலகச் சந்தையை தேசியச் சந்தைகளாக பிளவுபடுத்துகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தனக்கிருந்த சந்தையை இழந்து சரிந்து விழத் தொடங்கியுள்ளன. சந்தையின் கட்டுடைவு சந்தையில்லாப் பொருளாதாரத்தை அதாவது இலவசப் பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பது தவிர்க்க முடியாதது ஆகும் என்ற அடிப்படையில் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாற்றாக நூலாசிரியர் இலவசப் பொருளாதாரத்தை முன்மொழிகிறார். ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கீரை, காய்கறிகள் விளைவித்து அந்த ஊரின் […]

Read more

மகாத்மா 200

மகாத்மா 200, முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. அதிகாரம் ஈரோட்டில் இருக்கிறது! தேசப்பிதா மகாத்மா காந்தி, மோகன் தாஸ் ஆகப் பிறந்து 150ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. பாபுஜியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சிறிதளவேனும் அவரைப் பின்பற்ற முயல்கிறவர்களின் எண்ணிக்கை தான் நாளும் அருகிக்கொண்டே வருகிறது. முனைவர் இளசை சுந்தரம், பாபுஜியின் வாழ்க்கையிலிருந்து 200 அரிய நிகழ்வுகளைத் தொகுத்துப் பலாப்பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துத் தந்திருக்கிறார். ஒரு சமயம் பாபுஜியின் பவுண்டன் பேனா காணாமல் போய்விட்டது. […]

Read more

அச்சப்படத் தேவையில்லை

அச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது? இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]

Read more

இதழியல் இலக்கியம் ஆகுமா

இதழியல் இலக்கியம் ஆகுமா?, இளசை எஸ்.எஸ்.கணேசன், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 75ரூ. வாழ்க்கையில் ஒன்றிணைந்த பத்திரிகைகள் தோன்றிய வரலாறு மட்டுமல்லாமல் வளர்ந்த விதம், சந்தித்த பிரச்சினைகள், தற்போதைய நிலையை புள்ளி விவரத்தோடு ஆசிரியர் தந்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் பத்திரிகைகள் ஆற்றிய பணிகளையும், சுதந்திரத்திற்கு பிறகு உருவான பிராந்திய மொழி பத்திரிகைகள் பற்றியும் விவரித்த விதம் சிறப்பு. உலகமய அரசியலில் ஊடகங்கள் என்ற தலைப்பில் உலக, இந்திய அரசியலில் ஊடகங்கள் செய்த மாற்றங்களும் நாட்டின் முதல் பத்திரிகையாளர் ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலை 100ரூ. தண்ணீர், நிலக்கரி, அணுசக்தி ஆகியவற்றால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மாற்று முறையாக சூரிய மின் சக்தி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சூரிய மின்சக்தி என்றால் என்ன, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, வீடு மற்றும் விவசாயத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பயனுள்ள அனைத்து தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். சூரியமின் சக்தி பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல கையேடாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: […]

Read more
1 266 267 268 269 270 505