பொருநை நதிக்கரையினிலே

பொருநை நதிக்கரையினிலே, கன்யூட்ராஜ், என்சிபிஹெச், விலை 230ரூ. இருபுறக் கரைகளிலும் தண்ணீர் புரண்டோடிய ஆறுகள், இன்று வெறும் மணல்வெளியாய் அனல் பரப்பிக் கிடக்கின்றன. பயிர் செழிக்க உதவிய ஆற்றுநீர்ப் பாசனம், விவசாயிகளின் ஒட்டிய வயிறாய் சுருங்கிவிட்டது. நதிகளில் ஓடும் ஆற்று நீர் எவ்வளவு அவசியமானதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல, அற்றுமணலும், பன்னாட்டுக் கம்பெனிகள் ஒருபுறம் நதிநீரை உறிஞ்சிக் குடிக்க, இன்னொருபுறம் ஆற்று மணலை அள்ளிப்போய் கொள்ளையடிக்கிறார்கள் பெருமுதலாளிகள். இயற்கை வளத்தைச் சூறையாடிவருபவர்களுக்கு எதிராகப் போராடும் கிராம மக்களின் போராட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது […]

Read more

குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள், ச. மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 80ரூ. ‘வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன’ என்று சொல்லும் பேராசிரியர் ச.மாடசாமி, மொழி, பண்பாடு, கல்வி சார்ந்து எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு. எதையும் மேம்போக்காக அணுகாமல், கூர்ந்து கவனித்து எழுதும் கட்டுரையாளரின் நுட்பமான பார்வைக்கு இந்நூலின் கட்டுரைகளே சாட்சி. ஆழமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள்கூடச் சட்டென முடிந்துவிடுகின்றன. வகுப்பறைக்குள்ளிருக்கும் அதிகாரம் பற்றிப் பேசும் கட்டுரையும், அகங்காரத் தமிழ் எனும் மொழியின் சமூகத் தேவை குறித்த அக்கறையுடன் கூடிய […]

Read more

வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், எம். ராமச்சந்திரன், வசந்த் பதிப்பகம், பக்.190, விலை 150ரூ. சேமிப்பு, நடப்பு, தொடர் கணக்கு, பிக்ஸட் டெபாசிட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்குகள், நியமனதாரர் நியமனம், டெபாசிட் இன்சூரன்ஸ், உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட்டுகள், டிமாண்ட், தவணை, ஓவர் டிராப்ட்… கிரிடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட், பத்திரக் காப்பகம், பாதுகாப்பு பெட்டகம், தேசிய மின்னணு பணம் மாற்றுதல், மின்னணு தீர்வு, ஒருங்கிணைந்த வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட வங்கி சேவைகளை பட்டியலிட்டு கூறுகிறது இந்நுால். […]

Read more

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர்

கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, விலை 120 தமிழ்க் கவிதைத் தடத்தில் பன்மொழி ஆளுமையோடு விளங்கிய அப்துல் ரகுமானின் பவள விழாவையொட்டி, நூலாசிரியர் எடுத்த சற்றே நீண்ட நேர்காணலும் (64 பக்கங்கள்), 4 கட்டுரைகளும் இதில் உள்ளன. கவிதை குறித்த அப்துல் ரகுமானின் விரிந்த பார்வையும், புதியன வரவேற்கும் அவரது எண்ணமும் கவிதை குறித்த அவரது பதில்களில் தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளன. ஒரு பித்தனைப் போல் தனது கவிதைகளால் கேள்வியெழுப்பிய கவிஞர், ‘இன்னும் எனக்கு இந்த வாழ்க்கை புரியவில்லை’ […]

Read more

திருக்குறளில் தன்னம்பிக்கை

திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.

Read more

பெண்மை ஒரு வரம்

பெண்மை ஒரு வரம், பா.ஜோதி நிர்மலாசாமி, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 120ரூ. பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர். பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது. பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, […]

Read more

மின் கம்பியில் குருவிகள்

மின் கம்பியில் குருவிகள்,  சாரதா. க. சந்தோஷ், நீலநிலா பதிப்பகம் வெளியீடு, இந்த நூலின் ஆசிரியர் சாரதா. க. சந்தோஷ் சமூக வலைதலங்களிலும் இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் முனைப்போடு இயங்கி வரும்அவர் சமீபத்தில் கவியுலகப் பூச்சோலை அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் இந்நூலை வெளியிட்டார். மின் கம்பியில் குருவிகள் என்ற இந்த நூல் ஹைக்கூ கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது. <p style=”text-align: justify;”>கவிஞரின் இரண்டாவது நூல் இது. இந்த நூலில் பொது சிந்தனை, சமூக அக்கரை மனித நேயம் என பல தளங்களில் தன் […]

Read more

கிரேஸியைக் கேளுங்கள்

கிரேஸியைக் கேளுங்கள், கிரேஸி மோகன், தாமரை பிரதர்ஸ் பிரைவேட் மீடியா பிரைவேட் லிமிடெட், பாகம் 1, 2, விலை 224ரூ, 180ரூ. தமிழ் கேள்வி, பதில் துறையை வளப்படுத்தும் வகையில், கல்கி இதழில் கிரேஸி மோகன் எழுதிய கேள்வி –– பதில் பகுதி தொகுக்கப்பட்டு நுாலாக வெளிவருகிறது. அவருக்கே உரிய குறும்பும், நகைச்சுவையும் இந்நுாலில் தொட்ட இடமெல்லாம் மின்னுகின்றன. மிக நீண்ட பதில்களும், சுருக்கமான பதில்களும் கலந்தே காணப்படுகின்றன. அவரது எழுத்து வெளிப்பாடுகள் புதிய பாணியில் அமைந்தவை. படிக்க ரசமானவை. கவிஞர் வாலியை, ‘கதர் […]

Read more

வெளிச்சத்தைத் தேடி

வெளிச்சத்தைத் தேடி, கோ.ராமகிருஷ்ணன், வாசகன் பதிப்பகம், பக். 106, விலை 80ரூ. இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இந்த சமுதாய மாற்றத்திற்கு, போராடுபவர்களாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் இல்லாத மனித மனம் வேண்டும் என்ற கருத்துக்களை, இவரது கவிதை முன்வைக்கிறது. குறிப்பாக, அருகம்புல் என்னும் கவிதை தலைப்பில், ‘மண்ணின் ஆதி மைந்தர்களே அருகம்புல்லாய் துளிர்த்தெழுவீர்! அகிலம் போற்ற வாழ்ந்திடுவீர்’  (பக்., 20) என்று இளைஞர்களை எழுப்பும் வரிகள் பாராட்டப்பட வேண்டியது. காவல் […]

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல், முனைவர் த.தமிழரசி, அய்யா நிலையம் வெளியீடு, பக். 208, விலை 200ரூ. ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக அப்படைப்பாளியின் வரைபடம் ஒன்று புலனாகும். முப்பது ஆண்டுகளாக தமிழிலக்கியத்தின் கதைக்களத்தில் உலா வரும் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை பலவகையிலும் ஆய்ந்து, அவரை ஒரு வாழ்வியல் படைப்பாளியாக நிலை நிறுத்துகிறார் முனைவர் தமிழரசி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் கதை மாந்தர்களிடையே வெளிப்படும் எதிர்பார்ப்பற்ற மனிதநேயம், பயன் பெற்றதும் நன்றி மறத்தல், நெருக்கடியிலும் சுயநலம், துன்பத்திலிருந்து மீட்கும் நம்பிக்கைகள், […]

Read more
1 330 331 332 333 334 505