நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி, பலரது கட்டுரைத் தொகுப்பு, அந்திமழை, பக். 128, விலை 110ரூ. இரு வேறு மனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இல்லறத்தில், மகிழ்ச்சியான மண வாழ்வின் தேடல்களிலேயே பலரது நாட்களும் நகர்கின்றன. கருத்தொருமிப்பு இல்லாமல் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கை, கருத்து மாறுபாடுகளின் கன பரிமாணத்திற்கேற்ப துன்பத்தில் வீழ்ந்து விடுகிறது. குறைந்த சதவீதத்தினரே இதில் வெற்றி கண்டு, அன்பான இல்லற வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து நேசித்து வாழும் சாமானியர்கள் பலரை, அன்றாட வாழ்வில் கண்டு வியப்பதுண்டு. தனி […]

Read more

பூச்சிகள் ஓர் அறிமுகம்

பூச்சிகள் ஓர் அறிமுகம், ஏ.சண்முகானந்தம், வானதி பதிப்பகம், விலை 60ரூ. இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். அதில் மிக முக்கியமானவை பூச்சிகள். பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அருவருப்பாகத் தோன்றும். ஆனால் அவை அருவருக்கத்தக்கவை அல்ல என்பதை அழகிய படங்களுடனும் அறிவியல் தகவல்களுடனும் சிறப்பாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி)

சிவகங்கைச் சரித்திரக் கும்மி(சிவகங்கை நகர்க் கும்மி), முனைவர் ஆ.மணி, காவ்யா, பக். 768, விலை 750ரூ. கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர். நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது. வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி […]

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)

ஹைட்ரோ கார்பன் அபாயம், (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்), கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக். 288, விலை225ரூ. உணவு, எரிபொருள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள். இவற்றில் பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மிகப் பண்டைய காலத்தில் இருந்தே காவிரிப் படுகை விவசாய நிலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படுகை நிலத்தைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகிவிடும். ஹைட்ரோ […]

Read more

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும்

சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் ரகு அந்தோணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 273, விலை 250ரூ. கி.பி., 1500 –- 1600 காலத்திற்குட்பட்ட சோழ மண்டலக் கடற்கரையும், அதன் உள்நாட்டு விபரங்களும் அடங்கிய முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சார்ந்த நுால் இது. சோழ மண்டலப் பகுதியின் பொருளாதார, சமூகத்தை ஆய்வு செய்கிறது; இதற்காக உள்நாட்டு, அயல்நாட்டுத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அக்காலக்கட்டத்தில் தக்க வரலாற்று விளக்க நுால்கள் இல்லாத நிலையில், கல்வெட்டுகளின் தேதிகளும் தெளிவில்லாத நிலையில், தென்னகக் […]

Read more

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை,  எஸ். குருமூர்த்தி, அல்லயன்ஸ் வெளியீடு, பக். 160, விலை ரூ. 120. இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த […]

Read more

உச்ச வழு

உச்ச வழு, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200. நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம். பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் […]

Read more

ஆதி மருத்துவம்

ஆதி மருத்துவம், ஏகப்பிரியன் மு.இஸ்மாயில், ஏஎம் யோகா அறக்கட்டளை, பக்கம் – 384, விலை ரூ.360. நோய் வந்து அவதிப்பட்டு சிகிச்சை எடுப்பதைக் காட்டிலும் தடுப்பு மருத்துவத்தின் மூலம் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும் என்ற கருத்து பரவலாகி வருகிறது. அதன் காரணமாக பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய விவசாயம் என்று மாற்று வாழ்வியலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உணவே மருந்து என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் ஆசிரியர் […]

Read more

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை, திரைக்கலைஞர்கள்  அந்திமழை, அந்தி மழை, பக்.316, விலை ரூ.300. அந்திமழை இதழில் வெளிவந்த திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் என திரைப்படத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். கமல்ஹாசன், நாசர், பாண்டியராஜன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள், கஸ்தூரி, கெளதமி, நதியா, வரலட்சுமி உள்ளிட்ட நடிகைகள், இளையராஜா, கங்கை அமரன், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.ரவிக்குமார், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் என 58 திரைப்படத்துறை […]

Read more
1 331 332 333 334 335 505