தமிழ் கற்பித்தல்

தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தின சபாபதி, சாந்தா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் கையேடு இது. நன்றி: தினத்தந்தி, 1/3/2017. —- புலி வாலைப் பிடித்தால், வெங்கட் பிரசாத், மணிமேகலைப்பிரசுரம், விலை 85ரூ. சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர வரும் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய கதை. மர்மம் எதிர்பாராத திருப்பம், சாகசம், காதல்… இப்படி பல்சுவை கொண்ட நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் வெங்கட் பிரசாத். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வரலாறும் வகுப்புவாதமும்

வரலாறும் வகுப்புவாதமும், இஸ்லாமிய நிறுவனம், விலை 80ரூ. வரலாற்றில் பொய்யையும், வெறுப்பையும் நிரப்பி திரிக்கப்பட்ட செய்திகள் உலா வருகின்றன. அத்தகைய செய்திகளில் உள்ள உண்மை நிலையை இந்த நூலில் பேராசிரியர்கள் அருணன், தஸ்தகீர், டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மத் ஆகியோர் உரத்துக் கூறியுள்ளனர். அதில் பாபர் மசூதியின் வரலாறு, பிரிவினைக்குப் பின்னால் உள்ள உண்மையான தகவல்கள், அம்பேத்கரின் நிலைப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் உண்மை நிலவரத்தை நிலை நிறுத்தியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, பாகம் 2, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 514, விலை 200ரூ. மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவராக தொண்டாற்றி வரும் இந்நூலாசிரியன் சீரிய முயற்சியினால், இரண்டாண்டுகளுக்கு முன் இந்நூலின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நூலின் 2-ஆம் பாகமும் அவரால் தொகுக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. மகான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், ஆன்மிகம், இந்திய விடுதலைப் போராட்டம், பெண்கள் முன்னேற்றம், சமூக […]

Read more

நரகம்

நரகம், எதிர் வெளியீடு.தமிழில் இரா. செந்தில். உலகப்புகழ் பெற்ற நாவல் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்எ ழுதிய “டாவின்சி கோட்” என்ற நாவல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. சினிமாப் படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் சமீபத்தில் எழுதிய நாவல்தான் “நரகம்”. இதுவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களை வைத்தே நாவல்களை சிறப்பாக எழுதுவதில் வல்லவர் டான் பிரவுன். “நரகம்” நாவலும் […]

Read more

தேர்வு பயம் தேவை இல்லை

தேர்வு பயம் தேவை இல்லை, ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக்கூட, தேர்வு என்றாலே சற்று பயம் ஏற்படும். பரீட்சை நெருங்கும்போது, பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய அச்சம் தேவை இல்லை என்கிறார் நூலாசிரியர் குன்றில் குமார். தேர்வுக்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும், முக்கியமான தகவல்களை மனதில் பதிய வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாகவும், விவரமாகவும் கூறுகிறார். மாணவ – மாணவிகளுக்கு பயன்படக்கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் […]

Read more

சொல்வது நிஜம்

சொல்வது நிஜம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 166ரூ. மூத்த பத்திரிகையாளர் மணா எழுதிய நெஞ்சைத் தொடும் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழக்கூடிய விளிம்பு நிலை மனிதர்களை நேரில் கண்டு அவர்கள் படும் துயரங்களையும், அவலங்களையும் அருமையாகப் பதிவு செய்துள்ளார். நாட்டுப்புறச் சிறுவர்களின் கொத்தடிமை வாழ்க்கை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சின்னஞ் சிறுமிகளின் வாழ்க்கையை நேரலை போல விவரிக்கிறார். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் அவரது தாயாருக்கு சலுகை அளிக்க மறுத்ததையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் காட்டிய […]

Read more

பொங்கல் விழாச் சிந்தனைகள்

பொங்கல் விழாச் சிந்தனைகள், ஐவர்வழி வ.வேம்பையன், திருவள்ளுவர் மன்றம், விலை 150ரூ. பொங்கல் விழா பற்றிய கட்டுரைகள் கொண்ட நூல். பொங்கலை பல கோணங்களில் ஆராயும் கட்டுரைகள். சுருக்கமாகச் சொன்னால், பொங்கல் பற்றிய ஓர் அரிய ஆவணம் என்றே கூறலாம். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 120ரூ. முற்போக்கு சிந்தனைக் கொண்ட நூலாசிரியர், உணர்வு பூர்வமான, சிந்திக்க கூடிய தலைப்புகளில் கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா? என்ற ஆழமான பல்வேறு கருத்துகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை

கிழக்கு மேற்கு கோவாவில் மதமாற்றம் துயரக்கதை, மலையாள மொழியில் ரங்க ஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம், விலை 120ரூ. போர்ச்சுக்கீசிய ஆட்சியில் கோவாவில் நடந்த மதமாற்றத்தால் ஏற்படும் கொடுஞ்செயல்களை நூலாசிரியர் அனைவருக்கும் புரியும் வகையில் நேரடி காட்சியாக காண்பித்து உள்ளார். கொங்கன் பகுதியில் இருந்து ஓடிச்செல்ல வேண்டிய ஒரு பகுதி மக்களின் சோகக் கதையை நூலாக, நூலாசிரியர் வடித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more
1 417 418 419 420 421 505