மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை, டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன், தமிழில் பேரா.கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதி புத்தகாலயம், விலை 450ரூ. மனித மனத்தை அல்லது இயல்பை புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. யாருடைய நடத்தையும், மனப்பாங்கும் அறுதியிட்டு உறுதியாக சொல்லப்படுவதற்கில்லை. புரிந்தும், அறிந்தும் கொள்ளப்படாத விஷயங்களில் மனித இயல்பு பிரதானமாகிவிட்டது. அதற்கான காரண காரியங்களை ஆராயப்புகுந்திருக்கிறார் டாக்டர் ராமச்சந்திரன். அறிவியல் நூல்தான். ஆனால் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், உணரக்கூடிய விதத்திலும் இருக்கிறது. இதை மொழிபெயர்ப்பது மலையைப் பிளக்கிற காரியம். மனமுவந்து செய்த அக்கறையில் கிருஷ்ணமூர்த்தியின் பணி […]

Read more

திரவுபதியின் கதை

திரவுபதியின் கதை, ஒரியா மூலம் பிரதிபாராய், ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா, தமிழில் இரா. பாலச்சந்திரன், சாகித்திய அகாதெமி, விலை 275ரூ. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று திர்வுபதி. விதி வசத்தால் ஐந்து பேரை கணவர்களாகப் பெற்ற திரவுபதி, பத்தினி என்று சிலரால் போற்றப்பட்டாலும் வேறு சிலரால் வேசி என்று இகழப்பட்டாள். இதன் மூலம் அவள் அடைந்த இன்னல்களை விவரமாகவும் உருக்கமாகவும் தந்து இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதக் கதையை அதிக அளவில் பயன்படுத்தி, அத்துடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கோர்த்து அருமையான நாவல் போல […]

Read more

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ. தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த […]

Read more

கவிதைச் சிறகுகள்

கவிதைச் சிறகுகள், வானதி பதிப்பகம், விலை 160ரூ. கவிதை நாற்றுகள், கவிதை கீற்றுகள், கவிதை சிறகுகள், இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகன் படைத்துள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. கவிஞர்கள் செல்லகணபதி, ரெ.முத்துக் கணேசன், பெ. சிதம்பரநாதன், பாரதி வசந்தன், இளசை சுந்தரம், துணை வட்டாட்சியர் பே.ராஜேந்திரன், கம்பதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள நயங்களை எடுத்துச் சொல்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள், புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள் அருமை. கவிஞர்களை மட்டுமல்ல இலக்கிய ஆளுமைகள் பற்றியும் இந்த நூலில் அவர் அழகுற எடுத்துக் […]

Read more

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி

ஜெ.ஜெ. தமிழகத்தின் இருப்புப் பெண்மணி, வி கேன் புக்ஸ், விலை 90ரூ. மறைந்த முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அதே சமயம் மனதைத் தொடும்படியும் விவரிக்கும் நூல். ஜெயலலிதாவின் இளமைப்பருவம், திரைப்படத் துறையில் பெற்ற தொடர் வெற்றிகள், அரசியல் பிரவேசம், முதல் – அமைச்சர் பதவி, அண்மையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைவு… இப்படி, ஜெயலலிதா வாழ்க்கை முழுவதையும் இந்த 108 பக்க நூலில் ஒரு நாவலுக்குள்ள விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், குகன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும், ஜெயலலிதா மீது பற்று கொண்டவர்களுக்கும் இது […]

Read more

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா

அருள்வளர் மதுரை மீனாட்சி அம்மை கலிவெண்பா, மு. இராமலிங்கம், எல்கேஎம் பப்ளிகேஷன், பக். 32, விலை 22ரூ. மீனாட்சி அம்மையின் சிறப்புகளை பாடுவதாக அமைந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017. —- ஐம்பெரும் காப்பியக்கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. எளிய கதை வடிவில், மாணவர்கள் படித்து பயன் அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தினமலர், 29/1/2017.  

Read more

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more

அறுபத்து நான்காவது நாயனார்

அறுபத்து நான்காவது நாயனார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 18ரூ. கிருபானந்த வாரியார் சுவாமிகள், பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர். உலகம் முழுவதும் ஆன்மிகத்தைப் பரப்பியவர். ஏற்கனவே உள்ள 64 நாயன்மார்களுடன் 64-வது நாயனராக வாரியார் சுவாமிகளை கருதவேண்டும் என்ற வலியுறுத்துகிறார் நூலாசிரியர் புலவர் க. தியாகசீலன். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. சீனாவில் வானொலி தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, காதல், ஏமாற்றம் என்று பல வரம்புகளில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்களைச் சந்தித்து அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளைத் திரட்டிக் கொடுத்து இருக்கும் தகவல்கள், ஆச்சரியமிக்க அதிர்ச்சிகரமானவை. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

யுகபாரதி கவிதைகள்

யுகபாரதி கவிதைகள், நேர்நிரை, விலை 500ரூ. யுகபாரதியின் ஏழு கவிதைத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து இறுக்கிய நூல். நல்ல கவிதைகள் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி ‘காச்மூச்’ சென கத்தக்கூடாது’ என்பார் நகுலன். அப்படியே சத்தம் இல்லாமல் யுகபாரதி கொண்டு சேர்க்கும் எளிமைக்கும், அர்த்தத்திற்கும் தேய் வழக்கற்ற சொல் ஆளுமைக்கும் கட்டியம் கூறுகின்றன கவிதைகள். அவரது கவிதைகளில் கண்டடையும் உண்மை என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவரின் கவிதைகளைத் தனித்தனியாக பார்க்கும்போதும் ஒவ்வொன்றிலும் ஒரு விசேஷமான பார்வை, கூர்மை, தெளிவு புலப்படுகிறது. எளிமையாக இருப்பதாலேயே இவை சாதாரணமானவை […]

Read more
1 416 417 418 419 420 505