சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா

சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், பக். 160, விலை 120ரூ. வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைத் போல், இன்று நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர். ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், லஞ்சம், […]

Read more

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு

மாமனிதர்களின் இளமைக்கால வரலாறு, தஞ்சை நா. எத்திராஜ், இராமு நிலையம், பக். 412, விலை 180ரூ. காந்தி, காமராஜர் போன்ற அரசியல் மேதைகள், பாரதியார், திரு.வி.க. உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், கரிகால் சோழன், சிவாஜி போன்ற நாடாண்டவர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் என்று பலரின் இளமைக்கால வரலாறு மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: குமுதம்.

Read more

கூடிவாழ்வோம்

கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் […]

Read more

அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ. புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம். அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை […]

Read more

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ. கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன. அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை […]

Read more

சார்த்தா

சார்த்தா, கன்னடம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. “சார்த்தா‘’ – இந்த நாவல் ஒரு கற்பனைதான் என்றாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்காக பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலைதூர நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதை சார்த்தா என்று சொல்வார்கள். நீண்ட நெடிய சரித்திரத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவங்கள் உயிரோட்டமுள்ள நாவலாக மலர்ந்திருக்கிறது. கொள்ளை, வழிப்பறிகளுக்கு அஞ்சி அதற்கு தக்க காவல் மறவர்களின் துணையோடு வியாபாரம் […]

Read more

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. சிறுகதையின் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more

லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more

பாரில் அதிசயம் பாரதி

பாரில் அதிசயம் பாரதி. சீனி.விசுவநாதன், பக்.288.  விலை ரூ.200. தமிழில் ஒரு கவிஞரைப் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கிறது என்றால், அது பாரதியாரைப் பற்றித்தான் இருக்கும். ஆயினும், ஒவ்வொரு நூலிலும் அவரைப் பற்றி அறியப்படாத செய்திகள் ஒரு சிலவாவது இடம் பெற்றுக் கொண்டே இருப்பது வியப்பானதுதான். இந்த நூலில் “அறிதொறும் அறியாமை’ சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்நூலை எழுதியிருப்பவர் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து பாரதி ஆய்வில் ஈடுபட்டுவரும் சீனி.விசுவநாதன் என்பதுதான் (பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து 16 தொகுதிகளாக […]

Read more
1 419 420 421 422 423 505