தி கர்ஸ் ஆப் சூர்யா

தி கர்ஸ் ஆப் சூர்யா, தேவ் பிரசாத், ரேண்டம் ஹவுஸ் இண்டியர், பக். 306, விலை 299ரூ. இதயத்தைத் துரிதகதியில் இயங்க வைக்கும் மர்ம நாவல்! ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும்! வசீகரமான ஆங்கில நடை. மதுரா கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில். ‘திபெத் லிபரேஷன் பிரன்ட்’ என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த டென்சிங், கிருஷ்ணர் கோவிலில் உள்ள, சியமந்தக மணியை திருட வருகிறான். கோஹினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கல் அது; நீல நிறம் கொண்டது. திருடும் முயற்சியில் அவன் […]

Read more

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ. பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார். நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். […]

Read more

அடையாளம் தேடி

அடையாளம் தேடி, மு. வித்யா பெனோ, சந்தியா பதிப்பகம், பக். 72, விலை 80ரூ. ஆற்றங்கரை, திருவிழா, கோவில் படித்துறை இங்கெல்லாம் சந்தித்து காதலர்கள் காதல் வளர்த்த காலம் மலையேறி விட்டது. அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாகத்தான் இப்பொழுது காதல் வழிகிறது. அப்படி வழியும்பொழுது, அவர்கள் அருகில் இருப்பவர்களை, பல நேரம் சங்கடத்தில் தான் ஆழ்த்துகிறது. அதனை, ‘சிநேகிதியின் தூக்கத்தையும் / சேர்த்து கெடுக்கிறது / நம் செல்போன் முத்தங்கள்’ என்று அழகாக பதிவு செய்திருக்கிறார் வித்யா பெனோ. வாழை இலை காற்றில் […]

Read more

சயமாம் பர்மா மரண ரயில் பாதை

சயமாம் பர்மா மரண ரயில் பாதை, (மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு), சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. நல்வாழ்வை நினைத்து நகரத்துக்கு போன கதை! ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும். மரண ரயில் […]

Read more

தமிழ் மலாய் சொல் அரங்கம்

தமிழ் மலாய் சொல் அரங்கம், க. கந்தசாமி, ஸ்ரீ விஜயன் பதிப்பகம், ‘சுமா’ என்றால் என்ன அர்த்தம்? வயது வரம்பின்றி அனாயாசமாக எல்லாரும் பயன்படுத்துவது ‘சும்மா’ என்ற சொல். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மாதான் செய்தேன்’ என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய் மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மட்டும் சிறிய மாற்றம். அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள். Cuma என்றால், ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம். அதுவே ‘பெர்சுமா’ (percuma) […]

Read more

அன்னை தெரசா

அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 168, விலை 125ரூ. தெரசாவின் தாயகம் அல்பேனியா. இருப்பினும் அவர், 1948ம் ஆண்டிலேயே இந்தியப் பிரஜை ஆகி விட்டார். தெரசாவும் ஒருமுறை, ‘ரத்த சம்பந்தத்தால் நான் அல்பேனியன். மதநம்பிக்கையில் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி. மற்றபடி எப்போதும் நான் இந்தியப் பெண்மணி’ என்று கூறியிருக்கிறார். மற்ற இளம்பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பருவத் தொல்லைகள் எதனையும் தெரசா அனுபவித்ததில்லை. அது, இயற்கை அவருக்குத் தந்த கொடை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, துறவறம் பூண்டு ஏழை, எளிய […]

Read more

அபாயப்பேட்டை

அபாயப்பேட்டை, ரமேஷ்வைத்யா, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 102, விலை 90ரூ. மனோதைரியத்தை வளர்க்கும் கதை! குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும் பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார். ‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை. கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக […]

Read more

முருகன் விநாயகன்

முருகன் விநாயகன், கவுதம சித்தார்த்தன், எதிர் வெளியீடு, பக். 44, விலை 40ரூ. மீண்டும் தலைதூக்கும் கலாசாரவாதம்! தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் தளத்தில், முருகன் எனும் பிம்பம் மெல்ல கலைந்து, விநாயகர் எனும் பிம்பம் மேலெழுந்து வருவதை, பல்வேறு சான்றாதாரங்கள் மூலம், இந்த நூலில், கவுதம சித்தார்த்தன் சுட்டிக்காட்டி ஆய்வு செய்கிறார். விநாயக பிம்பத்தின் மூலத்தைச் சரியாகக் கணக்கிட்டுவிட முடியாது. எனினும், பிள்ளையார் வழிபாடாக தமிழ்ச் சமூகத்தில் பரவிய அவ்வணக்கத்தின் காலத்தை, இலக்கியங்கள் வழியே ஒரளவு சரியாகவே கணிக்க முடியும். அக்கணிப்பைச் செவ்வனே […]

Read more

மகராஜனா இரு

மகராஜனா இரு, அமரர் கல்கி, வானதி பதிப்பகம், பக். 292, விலை 200ரூ. கடந்த, 1930களில், தேசியம், காந்தியம், சமுதாயப் பொறுப்புணர்வு போன்ற விஷயங்களைப் பற்றி, அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப, ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதினார் கல்கி. அவற்றின் தொகுப்புதான் இந்த நூல். அன்று பேசப்பட்ட பல பிரச்னைகள், இன்று வரை நீடிக்கின்றன என்பதே யதார்த்தம். எவரையும் புண்படுத்தா நகைச்சுவை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்பதை உணர, இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் பட்டதாரிகள் அல்லாதோர் […]

Read more

ஒற்றை மார்பு

ஒற்றை மார்பு, எஸ்.கே. முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 216, விலை 175ரூ. அமானுஷ்யம், நாட்டுப்புறக் கதை, காதல், சஸ்பென்ஸ், நகைச்சுவை, விஞ்ஞானம் என்று பல்சுவைக் கதைகள், இந்தத் தொகுப்பில் உள்ளன. சிறப்பாக முதலிடம் பெறும் கதை, ‘ஒற்றை மார்பு!’ மார்பகப் புற்றுநோயால், ஒரு மார்பை இழந்த கதாநாயகி, வாழ்க்கையைப் புத்துணர்ச்சி உள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக, ஒரு ஏழை மாணவியிடம் அன்பு காட்ட துவங்குவதை உருக்கமாகச் சொல்கிறார் கதாசிரியர். முதல் கதையான, ‘சிவப்பு ராத்திரிகள்’ ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற உற்சாகத்தைத் தருகிறது. […]

Read more
1 476 477 478 479 480 505