கலாம் கனவு நாயகன்

கலாம் கனவு நாயகன், ரமேஷ் வைத்யா, விகடன் பிரசுரம், பக். 159, விலை 185ரூ. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக, அவரே சொல்வதாக, ரமேஷ் வைத்யா எழுத்தில், காமிக்ஸாக 60 பக்கங்களில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆற்றிய உரைகளின் பகுதிகள், அவர் அளித்த பேட்டிகள், சுட்டிக் குழந்தைகளின், பொதுமக்களின் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது வந்திருந்தவர்களிடையே அவர் ஏற்படுத்திய உத்வேகமான உணர்வுகள், நம் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பெருமிதமான கருத்துகள் என்று பல பரிமாணங்களிலும் படைப்புகளை […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, ஆங்கிலத்தில் மலாலா யூசுப்ஸை, கிறிஸ்டினா லாம்ப், தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரல் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து, 100 மைல்கள் தூரத்தில் உள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, மலைகள் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுமி மலாலா. அவர் கனவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு சென்று படிப்பது மட்டும் தான். இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த மலாலாவிற்கு, அவரது 11 வயதில் வாசித்த ஸ்டீபன் ஹாக்கிங்கின், ‘காலம்: ஒரு […]

Read more

உறக்கத்திலே வருவதல்ல கனவு

உறக்கத்திலே வருவதல்ல கனவு, ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 263, விலை 130ரூ. நான் விளக்காக இருப்பேன்! முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்கிறார் கலாம் 1. வாழ்வில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறிய லட்சியம் குற்றமாகும் 2. அறிவைத் தேடித்தேடிப் பெறல் வேண்டும் 3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் 4. விடா முயற்சி […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் (இரண்டு பாகங்கள்), பதிப்பாசிரியர் சிவாலயம் ஜெ. மோகன், வெளியீடு சிவாலயம், பக். 872+888 (இரு பாகங்கள்) விலை 1400ரூ. பரிமேலழகரை விளக்கிய வடிவேலு செட்டியார்! திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் […]

Read more

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை) , சீ.சுந்தரம், வித்யுத் பதிப்பகம்,  பக்.584, விலை  ரூ.500. ஆண்டாளும் கிருஷ்ணனும் என்பதுதான் “வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும்’ என்று நூலின் தலைப்பாகியிருக்கிறது. திருப்பாவைக்கு விளக்கவுரை இந்நூல் என்று கூறுவதைவிட, மிக அற்புதமான தத்துவக் கருத்துகளை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல் என்றே கூறலாம். ருப்பாவைக்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப்படி வியாக்கியானம், திருநாராயணபுரத்து ஆய் என்றழைக்கப்படும் தேவராஜர் வழங்கியுள்ள ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி எனப் பல […]

Read more

லட்சியப் பெண்டிர்

லட்சியப் பெண்டிர். தாயம்மாள் அறவாணன். தமிழ்க் கோட்டம்,  பக்.160, விலை ரூ.125. பெண்ணினம் பயனுற வேண்டும் என்பதற்காக எழுதுகிற நூலாசிரியையின் புதிய, அரிய படைப்புதான் இந்நூல். அகத்திணைப் பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே அதிகமாக இருப்பதற்கான காரணங்களை முள்ளியூர்ப்பூதியார் கட்டுரை விளக்குகிறது; தொல்காப்பியமும் மகளிரும்; காலந்தோறும் இலக்கிய மகளிரின் நிலைமை; பெருங்காப்பியங்கள் எல்லாம் ஏன் பெண்களையே முன்நிறுத்தி எழுதப்பட்டன என்பற்கான விளக்கம்; சங்க காலத்தில் பெண் கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கான விளக்கம்; ஒüவையாரின் கல்வி ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள முதன்மையான கருத்துகள்; சங்க பெண்பாற் புலவர்களின் […]

Read more

வாதி பிரதிவாதி நீதி

வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ. பாதைகளை ஆக்கிரமித்து கடை நடத்துகிறார்கள். மதுபோதையில் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுகிறார்கள். நாம் ஒருவரைப் பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்யப் போனால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். இப்படி வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள சட்டம் எந்த வகையில் உதவி செய்ய முடியும்? இப்படிப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தீர்ப்புகள் எவை? என்பன போன்றவற்றை […]

Read more

எழுச்சிநாயகன் விவேகானந்தர்

எழுச்சிநாயகன் விவேகானந்தர்  சி.எஸ்.தேவநாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன்,  பக்.192, விலை ரூ.120. விவேகானந்தரின் இளமைக் காலத்திலிருந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால் அந்த எல்லையோடு இந்நூல் நின்றுவிடவில்லை. விவேகானந்தரின் சிந்தனைகள் வளர்ந்தவிதம், ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் அவருடைய தெளிவான கருத்துகள் தோன்றியவிதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. விவேகானந்தரின் வாலிபப் பருவத்தில், அவரை விரும்பி அவர் இருக்கும் இடத்துக்கு இரவில் வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, “”அம்மா, இது தகாத காரியம் என்பதை உணருங்கள். உடனே இங்கிருந்து […]

Read more

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்

உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்,  கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவற்றில் 32 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் கேள்விகள் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என தங்களுடைய முன்னேற்றத்துக்கானதாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தின் தேவை, பெண்களின் நிலை, நிறுவனங்களில் தலைமைப் பதவிக்கு வருபவர்களுக்கான தகுதிகள் என பொதுவான விஷயங்களைப் பற்றியதாகவும் இருக்கின்றன. கேள்விகள் எப்படியிருப்பினும், அதற்கான பதில்கள் பிரச்னைகளை அறிவியல்ரீதியான முறையில் […]

Read more

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள்

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள், அருள்மொழிப் பிரசுரம், விலை 60ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை டாக்டர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அவருடைய அரிய கருத்துக்களை தொகுத்துள்ளார் அச்சுதமங்கலம் சச்சிதானந்தம். சாதிப்பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், நாடு, மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த 282 கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more
1 474 475 476 477 478 505