நான் இராமானுசன்

நான் இராமானுசன், ஆமருவி தேவநாதன், விஜயபாரதம் பதிப்பகம், பக்.136. விலை ரூ.60. விசிஷ்டாத்வைத தத்துவத்தை புதினப் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் புதிய முயற்சி இது. அதிலும் தத்துவம் தந்த ஆசார்யர் ராமானுஜரே தற்காலத்துக்கு ஏற்ப அதனைச் சொல்லும், “நான் கிருஷ்ணதேவராயன் பேசுகிறேன்’’ பாணியிலான கதைச் சொல்லல் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல, அது அடையக் கூடிய நிலை என்பதை வஜ்ர சூசிகா (வைர முள்) உபநிஷதத்தின் துணையுடன் விளக்கியிருப்பது அருமை. பிராமணரல்லாத தமது குரு நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி […]

Read more

மின்னல் விளக்கு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144,  விலை ரூ.100. மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம். புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷ நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை […]

Read more

நான் ப்ரம்மம்

நான் ப்ரம்மம்,  ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், தமிழில்: சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.208, விலை ரூ.250. “நான்’ எனும் தேடலே கேள்வியாக மனதினுள் வளர்ந்து நிற்கும்போது அதற்கான தேடலும் பதிலும் அவசியமாகிறது. ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ் தமது ஆன்மிக சொற்பொழிவுகளால் பலரின் மன இருளைப் போக்கி ஆன்மபலத்தைப் பெருக்கும் கருவியாக இருந்தவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களுமே ஒரு நூலாக (முதல் பகுதி) வடிவெடுத்திருக்கிறது. “”கடவுள் ஏன் என்னை இவ்வாறு படைத்தார்?” என்பது கேள்வி. அதற்கு மஹராஜ் அவர்கள் […]

Read more

வைதீஸ்வரன் கதைகள்

வைதீஸ்வரன் கதைகள், எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், பக்.304, விலை ரூ. 225 தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. “பிம்பம்’ என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. “கதையாக’ அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் […]

Read more

சுதந்திர சரித்திரம்

சுதந்திர சரித்திரம், எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சந்தியா பதிப்பகம், பக். 344, விலை ரூ.270. 1953-இல் எழுதப்பட்டுள்ள நூலின் மறுபதிப்பு இந்நூல். வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடிமைப்படுத்திய விதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்கள் காலத்தில் முகமதியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சரி செய்யும் விதமாக […]

Read more

கே.பாலசந்தர் வேலை டிராமா சினிமா

கே.பாலசந்தர் – வேலை, டிராமா, சினிமா – 37 வயது வரையிலான வாழ்க்கை வரலாறு ,சோம.வள்ளியப்பன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.152, விலை ரூ. 115. நாடகத்துறையிலிருந்து திரைத்துறையில் நுழைந்து நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்து, திரைத்துறைக்கென இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான “தாதா சாஹேப் பால்கே’ விருதினைப் பெற்று தமிழ்ப்பட உலகில் தனித்த மரியாதைக்குரிய இயக்குநராகத் திகழ்ந்தவர் மறைந்த கே.பாலசந்தர். அவரது பிறப்பு, குடும்பச் சூழல், பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, பக்கத்து கிராமத்தில் ஆசிரியர் பணி, சென்னையில் ஒரு […]

Read more

பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சுமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 224, விலை 160ரூ. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 1,200 சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர்கள், மாத நாவல்கள் என்று பன்முகத் தன்மையோடு எழுதி வருபவர் லட்சுமி ராஜரத்னம். அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை, ஒரு சிலர்தான் உணர்வூட்டி கருவாக்கி, கற்பனை கலந்து கதையாக உருப்பெற்றெடுக்கிறார்கள். அந்த வகையில் லட்சுமி ராஜரத்னம் படைத்திருக்கும் ஒரு நெடுங்கதை தான் இந்த பாட்டுடைத் தலைவி. ரவி, ராதா, நிர்மலா மற்றும் அவர்களைச் சார்ந்த மனிதர்களின் வாயிலாக வாழ்க்கைச் […]

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 120ரூ. சாமானியர்களுக்குள் எழும் உணர்ச்சிகளை எல்லாம், அவர்களின் பக்கம் நின்று அழுத்தமாய் சொல்லியிருக்கிறது, இந்த நூல். ‘இவரின் துணிச்சலும், போர்க்குணமும் தான், இவரை நக்கீரன் ஏந்தியதற்கு காரணம்!’ எனும், முதற்பக்கத்தோடு துவங்குகிறது இந்த நூல்; ஆம், நக்கீரன் இதழில், குஷ்பு எழுதிய தொடர் தான், இந்த நூல். 20 தலைப்புகள் இதில் உள்ளன.நிறவெறியின் வால் பிடித்தே பயணிக்கும் ஒரு கூட்டத்தையும், படையெடுத்து நிற்கும் உலக பிரச்னைகள் அனைத்தையும் எளிதாய் கடந்துவிட்டு, ‘நாங்கள் கலாசார […]

Read more

திணை – உணர்வும் பொருளும்

திணை – உணர்வும் பொருளும், பிரகாஷ். வெ, பரிசல் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. இந்நூல், அளவில் சிறிதாயினும் ஆழமான ஆய்வுச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் இலக்கணத்துள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை வழியிலமைந்த வாழ்வியல் இலக்கணம் உள்ளது. ஐந்திணைகளுக்கும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என உட்பிரிவுகள் உண்டு. இவற்றுள் உரிப்பொருள் என்பது அவ்வத்திணைகளுக்குரிய அகப்பொருள் ஒழுக்கம் குறித்து வருவது. அன்பின் ஐந்திணையன்றி கைக்கிளை, பெருந்திணை என இரண்டு உள்ளன. உரிப்பொருள்களை உணர்வுகள் எனக் கொண்டு, தொல்காப்பியர் வழிநின்று […]

Read more

ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம், யெஸ். பாலபாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 80, விலை 60ரூ. சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்.’ ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை […]

Read more
1 473 474 475 476 477 505